Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Treatment

நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: குறித்த காலத்துக்குள் முடிக்க அறிவுரை

Print PDF

தினமணி 26.07.2010

நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: குறித்த காலத்துக்குள் முடிக்க அறிவுரை

சென்னை, ஜூலை 25: சென்னை அடுத்த நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை குறித்த காலத்துக்குள் முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் அஷோக் வர்தன் ஷெட்டி அறிவுரை கூறினார்.

சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் கிண்டி திரு.வி.. தொழிற்பேட்டையில் ரூ. 4.5 கோடியில் அமைக்கப்பட்டு வரும் கழிவுநீர் அகற்று நிலையத்தையும், ஈக்காட்டுதாங்களில் அமைந்துள்ள குடிநீர் பகிர்மான நிலையம் மற்றும் நீர் உந்தும் நிலையம் ஆகியவற்றை முதன்மை செயலர் அஷோக் வர்தன் ஷெட்டி சனிக்கிழமை ஆய்வு செய்தார். மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் அமைக்கப்பட்டுவரும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தையும் அவர் ஆய்வு செய்தார்.

 

ரூ.1,358 கோடி மதிப்பிலான யமுனை சுத்திகரிப்பு திட்டம் மாநில அமைச்சரவை அனுமதி

Print PDF

தினகரன் 22.07.2010

ரூ.1,358 கோடி மதிப்பிலான யமுனை சுத்திகரிப்பு திட்டம் மாநில அமைச்சரவை அனுமதி

புதுடெல்லி, ஜூலை 22: யமுனை ஆற்றை சுத்திகரிக்கும் திட்டத்துக்கு மாநில அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளது. இத்திட்டத்தின்படி ரூ.1,358 கோடியில் மூன்று இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

யமுனை ஆற்றில் கழிவுநீர் சென்று சேர்வதால் அது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. யமுனையை சுத்தப்படுத்த வேண்டும் என்றால், அதில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரித்தால் மட்டுமே முடியும் என்ற நிலை இருந்தது. இதற்கு பல கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புத்தாக்க திட்டத்தின் கீழ் இதை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதேபோல் சுற்றுச்சூழல் துறை உட்பட இதற்கு தேவையான பிற துறைகளின் அனுமதியும் கிடைத்தது. இறுதியாக இத்திட்டத்துக்கு மாநில அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. அதைதொடர்ந்து திட்டத்துக்கு அனுமதி வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்துக்கு பின்னர் முதல்வர் ஷீலா தீட்சித் கூறுகையில், "இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன் அனைத்து அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. யமுனையை சுத்தப்படுத்துவது முடியாத காரியமாக நினைக்கப்பட்ட நேரம் மாறி, அது விரைவில் சுத்தமாகும் காலம் வந்துவிட்டது" என்றார்.

யமுனையை சுத்தப்படுத்தும் திட்டத்தின் கீழ் நஜாப்கர், சப்ளிமென்டரி, சதாரா ஆகிய மூன்று முக்கிய கழிவுநீர் வாய்க்காலில் இருந்து யமுனைக்கு சென்று சேரும் கழிவுநீர், சுத்திகரிப்பு நிலையத்துக்கு திருப்பிவிடப்படும். அங்கு கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தக்கூடிய நிலையில் தண்ணீர் மாற்றப்பட்ட பின் அது யமுனையில் திருப்பிவிடப்படும். இந்த சுத்திகரிப்பு நிலையம் மூலம் நாளொன்றுக்கு 132 கோடி லிட்டர் கழிவு நீர் சுத்தம் செய்யப்படும்.

யமுனை சுத்திகரிப்பு திட்டம் மொத்தம் ரூ.1,358 கோடி செலவில் நிறைவேற்றப்பட உள்ளது. இதில் ரூ.475 கோடியை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வழங்கும். மீதமுள்ளவற்றை மாநில அரசு வழங்கும்.

ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புத்தாக்க திட்டத்தின் கீழ் டெல்லியில் செயல்படுத்தப்படும் மிகப்பெரிய திட்டமாக இது இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

கடல் நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகளை கருணாநிதி, 31-ந் தேதி தொடங்கி வைக்கிறார்; ஏற்பாடுகளை ஸ்டாலின் பார்வையிட்டார்

Print PDF

மாலை மலர் 21.07.2010

கடல் நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகளை கருணாநிதி, 31-ந் தேதி தொடங்கி வைக்கிறார்; ஏற்பாடுகளை ஸ்டாலின் பார்வையிட்டார்

கடல் நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகளை கருணாநிதி, 31-ந் தேதி தொடங்கி வைக்கிறார்;
ஏற்பாடுகளை ஸ்டாலின் பார்வையிட்டார்

மீஞ்சூர், ஜுலை.21- சென்னையை அடுத்த மீஞ்சூர் அருகே உள்ள காட்டுப்பள்ளி கிராமத்தில் கடல் நீரை குடிநீராக்கும் தொழிற்சாலையை தமிழக அரசு அமைத்துள்ளது. இதற்கான கட்டுமானப்பணிகள் முடிவடைந்து, சோதனை ஓட்டங்களும் நடந்து முடிந்துவிட்டன.

இந்த திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் கருணாநிதி 31-ந் தேதி தொடங்கிவைக்கிறார். இந்த திட்டம் மூலம் சென்னை மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும்.

இந்த திட்டப்பணிகள் நிறைவடைந்து, தொடக்க விழாவுக்கு தயார் நிலையில் இருக்கிறது. இந்த பணிகளின் தன்மை குறித்தும், முதல்-அமைச்சர் கருணாநிதி வருகையையொட்டியும் ஆய்வு செய்யவும், அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாலோசிக்கவும் துணை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் காட்டுப்பள்ளி கிராமத்துக்கு வந்தார்.

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மின்வாரியத்துறை அதிகாரிகள், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டி.பி.ராஜேஷ், பொன்னேரி துணை கலெக்டர் குமார், தாசில்தார் லலிதா, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் கே.ஜி.பாஸ்கர் சுந்தரம், மாவட்ட தி.மு.. இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ்ராஜ், ஊராட்சி ஒன்றிய தலைவர் ஈஸ்வரி ராஜா, கவுன்சிலர் தமிழரசன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலரும் வந்திருந்தனர்.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகளை ஸ்டாலின் பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மத்திய அரசின் கப்பல் கட்டும் தளம், ராணுவ தளம் ஆகிய இடங்களில் தனியார் நிறுவனம் ஒன்று பணிகளை மேற்கொண்டு செய்து வருகிறது. அந்த பணிகளையும், கடல் மண் ஆழப்படுத்தும் இடத்தில் நடைபெறும் பணிகளையும் ஸ்டாலின் பார்வையிட்டார்.

அந்தப் பணிகளை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் தட்சிணாமூர்த்தி, சிவநேசன் ஆகியோர் துணை முதல்-அமைச்சர் ஸ்டாலினை வரவேற்று பணிகள் நடைபெறுவதை விளக்கிக்கூறினார்கள்.

 


Page 16 of 28