Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Treatment

ஏர் இந்தியா, ஹில்வியூ குடியிருப்புக்களில் ஸி2.07 கோடி செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

Print PDF

தினகரன் 16.08.2010

ஏர் இந்தியா, ஹில்வியூ குடியிருப்புக்களில் ஸி2.07 கோடி செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

புதுடெல்லி, ஆக.16: டெல்லியில் உள்ள ஏர் இந்தியா மற்றும் ஹில்வியூ குடியிருப்புக்களில் ரூ.2.07 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி நேற்று முதல் தொடங்கப்பட்டது.

டெல்லியின் முக்கிய பகுதியான ஏர் இந்தியா குடியிருப்பு, ஹில்வியூ அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் முனிர்க்£ என்கிளேவ் ஆகிய பகுதிகள் குடிநீர் வசதி இல்லாமல் தவித்து வந்தன. அந்த பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வாரியம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

எனினும், போதுமான குடிநீர் வசதி கிடைக்காமல் அந்தப் பகுதியினர் அவதிப்பட்டனர்.

இந்த நிலையில் அந்த பகுதிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க முதல்வரும் டெல்லி குடிநீர் வாரிய தலைவருமான ஷீலா தீட்சித் திட்டமிட்டார். அதற்காக மான் பூங்கா பாதுகாக்கப்பட்ட குடிநீர் தேக்கத்தில் இருந்து குழாய் மூலம் அந்த பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்துக்காக ரூ.2.07 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டன. மொத்தம் 4,350 மீட்டர் தூரம் குழாய்கள் பதிக்கப்பட்டு அந்தப் பகுதிகளுக்கு சுத்திகரிப்பு குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டது.

பணிகள் அனைத்தும் முடிந்து அந்த பகுதிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் நேற்று முதல் தொடங்கியது. இதனால் அந்தப் பகுதிகளில் வசிக்கும் சுமார் 8,000 பேர் பயன் அடைவார்கள்.

 

குடிநீர் பிரச்னைக்கு கடல்நீர் சுத்திகரிப்பாலை அமைக்க முடிவு

Print PDF

தினகரன் 10.08.2010

குடிநீர் பிரச்னைக்கு கடல்நீர் சுத்திகரிப்பாலை அமைக்க முடிவு

மும்பை, ஆக.10: மும்பை யின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண மூன்று கடல்நீர் சுத்திகரிப்பாலைகளை அமைக்க மும்பை பெருநகர வளர்ச்சி ஆணையம் திட்ட மிட்டுள்ளது.

மும்பை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு 6 ஏரிகளில் இருந்து குடிநீர் சப்ளை ஆகி றது. எனினும் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகி வருவதாலும் கட்டு மான பணிகள் பெருமளவில் நடந்து வருவதாலும் குடி நீருக்கு தட்டுப்பாடு ஏற் படுகிறது.

இதனை சமாளிப்ப தற் காக மூன்று கடல்நீர் சுத்தி கரிப்பாலைகளை அமைக்க மும்பை பெருநகர வளர்ச்சி ஆணையம் (எம்.எம்.ஆர். டி..) திட்டமிட்டுள்ளது.

இதற்கான திட்ட அறிக் கையை தயாரிக்க விரைவி லேயே ஆலோசகர்கள் நிய மிக்கப்படுவார்கள் என்று ஆணையத்தின் கமிஷனர் ரத்னாகர் கெயிக்வாட் கூறி னார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "நாங் கள் ஏற்கனவே போஷி, பிஞ் சால், கலு மற்றும் ஷாய் அணைகளை மேம்படுத்தும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறோம்.

இது தவிர மூன்று கடல் நீர் சுத்திகரிப்பாலைகளை நிறுவவும் திட்டமிட்டுள் ளோம். இந்த ஆலைகள் அநேகமாக மீரா&பயந்தர், வசாய் அல்லது மும்பையின் கடற்கரை பகுதியில் அமைக் கப்படும். தனியார்துறை ஒத் துழைப்புடன் இந்த திட்டம் நிறைவேற்றப்படும்Ó என்றார்.

 

சுத்திகரிக்கப்பட்ட கடல்நீர் கிடைப்பதில் தாமதம்

Print PDF

தினமலர் 09.08.2010

சுத்திகரிக்கப்பட்ட கடல்நீர் கிடைப்பதில் தாமதம்

சென்னை: குடிநீர் குழாய்களை சுத்தம் செய்யும் பணி நடப்பதால், சென்னை மக்களுக்கு மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டப் பயன்கள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னை மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை, கடந்த 31ம் தேதி, முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார்.

மொத்தம் 600 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்கு தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது. இதற்காக, மணலி, மாதவரம் மற்றும் செங்குன்றம் ஆகிய இடங்களில் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை, காட்டுப்பள்ளி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்துடன் இணைக்க, 37 கி.மீ., நீளத்திற்கு குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குடிநீர் குழாய்களில் துரு, தூசுக்கள் படிந்துள்ளன. இவற்றை சுத்தம் செய்யும் பணி தற்போது நடக்கிறது. இப்பணிகள் முடிந்து, கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பெறப்படும் அதே தூய்மையுடன், அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைப்பது குறித்து ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்ட பின் தான் குடிநீர் வினியோகம் துவங்கும். இப்பணிகள் முடிய இன்னும் ஒரு வாரத்திற்கு மேலாகும் என தெரிகிறது.
இத்திட்டத்தின் மூலம், மணலியிலிருந்து சென்னை புறநகர்ப் பகுதிகளுக்கு 1.5 கோடி லிட்டர், மாதவரத்திலிருந்து வடசென்னைக்கு மூன்று கோடி லிட்டர் மற்றும் செங்குன்றத்திலிருந்து சென்னை நகருக்கு 5.5 கோடி லிட்டர் குடிநீர், தினமும் சப்ளை செய்யப்பட உள்ளது.

 


Page 13 of 28