Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Treatment

நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் ஜூலை இறுதிக்குள் முழு உற்பத்தி தொடங்கும்

Print PDF

தினமணி         25.06.2013

நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் ஜூலை இறுதிக்குள் முழு உற்பத்தி தொடங்கும்

நெம்மேலியில் அமைந்துள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தில் ஜூலை மாத இறுதிக்குள் முழு உற்பத்தி தொடங்கப்படும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், மகாபலிபுரம் அருகே உள்ள நெம்மேலியில், சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் ரூ.871 கோடி செலவில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா இதைத் தொடங்கி வைத்தார்.

 இதன் மூலம் திருவான்மியூர், வேளச்சேரி, பள்ளிப்பட்டு மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்கா பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தில் முதலில் 3 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்பட்டது. படிப்படியாக உற்பத்தித் திறன் அதிகரிக்கப்பட்டு தற்போது 8 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஜூலை முதல் வாரத்தில் 9 கோடி லிட்டராக உற்பத்தி அதிகரிக்கும் எனவும், அந்த மாத இறுதிக்குள் உற்பத்தித் திறன் 100 சதவீதத்தை எட்டிவிடும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறியது:

குடிநீர் பற்றாக்குறை: நெம்மேலியிலிருந்து பெறப்படும் குடிநீர் திருவான்மியூர், பள்ளிப்பட்டு உள்ளிட்ட தென் சென்னைப் பகுதிகளில் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக நகரின் பல இடங்களுக்கும் நெம்மேலி குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

திருவான்மியூர், வேளச்சேரி பகுதிகளுக்கு ஒரு நாளும், சாந்தோம், நந்தனம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் மறுநாளும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இதன் காரணமாக தென் சென்னை பகுதிகளில் இரு நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே நெம்மேலி குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நெம்மேலியில் தற்போது உற்பத்தித் திறன் உயர்ந்து வருகிறது. வரும் ஜூலை மாதம் மூன்றாவது வாரத்துக்குள் நெம்மேலியில் 10 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

 

அரியாங்குப்பத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ரங்கசாமி திறந்து வைத்தார்

Print PDF
தினத்தந்தி         06.06.2013

அரியாங்குப்பத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ரங்கசாமி திறந்து வைத்தார்


புதுவை மாநிலம் அரியாங்குப்பத்தில், கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் கிராம பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு சட்டசபை சபாநாயகர் சபாபதி தலைமை தாங்கினார். அமைச்சர் பன்னீர்செல்வம் கல்வெட்டை திறந்து வைத்தார்.விழாவில் முதல்–அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார். விழாவில், உள்ளாட்சி துறை செயலாளர் ஸ்ரீகாந்த், இயக்குனர் ரவிபிரகாஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.விழாவுக்கான ஏற்பாடுகளை ஆணையர் முனுசாமி செய்து இருந்தார். விழாவில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் தொடக்கம்

Print PDF

தினமணி        06.06.2013

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் தொடக்கம்

காஞ்சிபுரம் நகராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை புதன்கிழமை அமைச்சர் டி.கே.எம். சின்னையா தொடங்கி வைத்தார்.

  • தமிழகத்திலேயே முதன்முறையாக இத்திட்டம் காஞ்சிபுரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
  •  காஞ்சிபுரம் நகராட்சியில் 2.32 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.
  •  இங்குள்ள மக்களின் குடிநீர் தேவைக்காக வேலூர் மாவட்டம் திருப்பாற்கடல் மற்றும் ஓரிக்கை பகுதிகளில் பாலாற்று படுகையிலிருந்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது.

கழிவுநீர் கலப்பு:

  • இந்நிலையில், ராணிப்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பாலாற்றில் கலந்து குடிநீர் மாசுப்படத் தொடங்கியது. 
சுத்திகரிப்பு நிலையம்:
  •  இதனால் திருப்பாற்கடல் குடிநீரை சுத்திகரிக்க குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.
  • இதனைத்தொடர்ந்து மத்திய அரசின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.85 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  •  இதன்படி, காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் மண்டபம் தெருவில், இக்குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டது.
  •  இதன் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் தலைமை வகித்தார்.
  •  அமைச்சர் டி.கே.எம்.சின்னய்யா திட்டத்தை தொடங்கி வைத்தார்.
  •  சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி. சோமசுந்தரம், வாலாஜாபாத் பா. கணேசன், மாவட்ட ஊராட்சித் தலைவர் பன்னீர்செல்வம், நகர்மன்றத் தலைவர் மைதிலி திருநாவுக்கரசு உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
Last Updated on Thursday, 06 June 2013 06:05
 


Page 2 of 28