Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Treatment

அதங்கோடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகளை 2011-க்குள் முடிக்க நடவடிக்கை

Print PDF

தினமணி 21.09.2010

அதங்கோடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகளை 2011-க்குள் முடிக்க நடவடிக்கை

நாகர்கோவில்,​​ செப்.20: ​ கன்னியாகுமரி மாவட்டம்,​​ அதங்கோடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் 2011-க்குள் முடிக்கப்படும் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

​ ​ முடங்கி கிடங்கும் அதங்கோடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் என்ற தலைப்பில் தினமணியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ​(செப்.19) செய்தி வெளியாகியிருந்தது. ​ ​ இது தொடர்பாக அவ் வாரியத்தின் நகர திட்ட கோட்ட அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

​ ​ கன்னியாகுமரி மாவட்டத்தில் பயனில் உள்ள களியக்காவிளை பேரூராட்சி மெதுகும்மல் ஊராட்சி,​​ 22 வழியோர குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர்த் திட்டம் மற்றும் கொல்லங்கோடு பேரூராட்சி,​​ ஏழுதேசம் பேரூராட்சி,​​ 27 வழியோர குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர்த் திட்டம் ஆகியவற்றுக்கு சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல்.

​ ​ மேல்புறம் ஒன்றியத்திலுள்ள 79 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர்த் திட்டம் ஆகியவற்றுக்கு அரசு ஆணை எண் 211-ன் படி நகராட்சி நிர்வாகத்தால் 5.11.09-ல் ரூ.​ 16.70 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்டு ஒப்பந்தப் புள்ளிகள் முடிவு செய்யப்பட்டு தென்மண்டல தலைமைப் பொறியாளரால் 17.9.2010-ம் தேதி வழங்கப்பட்டுள்ளது. ​ ​ இத் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Tuesday, 21 September 2010 11:28
 

குடிநீர் விரிவாக்கத் திட்டப் பணிகள்: ஜப்பான் வங்கிப் பிரதிநிதிகள் ஆய்வு

Print PDF

தினமணி 21.09.2010

குடிநீர் விரிவாக்கத் திட்டப் பணிகள்: ஜப்பான் வங்கிப் பிரதிநிதிகள் ஆய்வு

திருச்சி,​​ செப்.​ 20:​ திருச்சி மாநகராட்சிப் பகுதியில் ரூ.​ 143 கோடியில் செயல்படுத்தப்படும் குடிநீர் விரிவாக்கத் திட்டப் பணிகளை உலக ஒற்றுமைக்கான ஜப்பான் வங்கியின் பிரதிநிதிகள் ஒய்.​ சேனா,​​ டி.​ இட்டோ உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

​ ​ திருச்சி மாநகராட்சியிலுள்ள அனைத்துப் பகுதி மக்களுக்கும் சீரான குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் ரூ.​ 143 கோடியில் குடிநீர் விரிவாக்கத் திட்டம் தயாரிக்கப்பட்டது.​ இந்தத் திட்டத்தின்படி,​​ கொள்ளிடம் ஆற்றில் 3 கிணறுகள்,​​ 2 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள்,​​ 35 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் என பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

​ ​ இந்நிலையில்,​​ உலக ஒற்றுமைக்கான ஜப்பான் வங்கிப் பிரதிநிதிகள் ஒய்.​ சேனா,​​ டி.​ இட்டோ ஆகியோரைக் கொண்ட குழு திங்கள்கிழமை திருச்சி வந்தது.​ அவர்கள் பணிகள் நடைபெற்று வரும் பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

​ ​ முன்னதாக,​​ மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திலும் இவர்கள் பங்கேற்று விரிவாக ஆய்வு மேற்கொண்டனர்.​ இக்குழுவினருடன் மாநகராட்சி ஆணையர் த.தி.​ பால்சாமி,​​ ஜப்பான் வங்கியின் இந்தியப் பிரதிநிதி மற்றும் முதுநிலை மேம்பாட்டு வல்லுநர் மிகிர் சோர்டி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி வசதி சேவைக் கழக உதவித் துணைத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 21 September 2010 11:29
 

15 இடங்களில் போர்வெல் உப்புநீரை குடிநீராக்க ரூ 1.50 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமணி 09.09.2010

15 இடங்களில் போர்வெல் உப்புநீரை குடிநீராக்க ரூ 1.50 கோடி ஒதுக்கீடு

மதுரை, செப். 8: மதுரையில் 15 இடங்களில் ஆழ்துளைக் கிணறு (போர்வெல்) மூலம் வரும் உப்புநீரைக் குடிநீராக மாற்றுவதற்கு ரூ 1.50 கோடி மத்திய அமைச்சர் மு..அழகிரியின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரையில் முக்கியப் பகுதிகளான மஞ்சள்மேடு காலனி, கோமஸ்பாளையும் (ஆரப்பாளையும் தண்ணீர்த்தொட்டி), பசுமலை, அண்ணா நகர், பெரியார் பஸ் நிலையம் அருகே திடீர் நகர், சுப்பிரமணியபுரம், கரும்பாலை உள்ளிட்ட 15 இடங்களில் ஆழ்துளைக் கிணறு மூலம் வரும் உப்புநீரைக் குடிநீராக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக தலா ரூ 10 லட்சம் வீதம் மொத்தம் ரூ 1.50 கோடியை மத்திய அமைச்சர் மு..அழகிரி தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்துள்ளார். இதேபோல டி.வி.எஸ். நகர் பூங்காவில் மேம்பாட்டுப் பணிக்காக ரூ 40 லட்சமும், ஆரப்பாளையம், கோமஸ்பாளையத்தில் புதிதாக கட்டப்பட உள்ள சமுதாயக்கூடத்துக்கு ரூ 5 லட்சமும் ஒதுக்கீடு செய்துள்ளார். இப்பணிகள் அனைத்தும் ஒரு வார காலத்திற்குள் தொடங்கப்பட்டு இரண்டு மாத காலத்திற்குள் முடிக்கப்படும் என்று ஆணையர் தெரிவித்துள்ளார்.

 


Page 10 of 28