Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Treatment

மார்த்தாண்டத்தில் அக்.16ல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா

Print PDF

தினகரன் 14.10.2010

மார்த்தாண்டத்தில் அக்.16ல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா

மார்த்தாண்டம் அக்.14: குழித் துறை நகராட்சி பகுதி மக்களுக்கு ஞாறான்விளையில் அமைக்கப் பட்டுள்ள நீரேற்று நிலையத்தில் இரு ந்து குடிநீர் விநியோகிக்க பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றில் உள்ள உறைகிணறுகளில் இருந்து பம்ப் செய்யப்படும் தண் ணீர், நீரேற்று நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு பொது மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில் தங்களுக்கு சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ரூ 1 கோடியே 19 லட்சம் செலவில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஞாறான்விளையில் அமைக்கப் பட்டது. தற்போது பணி முடிந்து வெள்ளோட்டம் நடந்து வருகிறது. இதன் திறப்பு விழா வரும் 16 ம் தேதி நடக்கிறது.

விழாவுக்கு கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தலைமை வகிக்கிறார். ஹெலன்டேவிட்சன் எம்பி, ஜாண் ஜோசப் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். நகராட்சி தலைவர் பொன். ஆசைத்தம்பி வரவேற்று பேசுகிறார்.அமைச்சர் சுரேஷ்ராஜன் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்து பேசுகிறார். நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் மோகன் திட்ட விளக்கவுரை ஆற்றுகிறார். விழாவில் உள்ளாட்சி பிரதிநிதிகள், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

 

 

பெங்களூரில் 20 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு

Print PDF

தினகரன் 06.10.2010

பெங்களூரில் 20 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு

பெங்களூர், அக்.6: பெங்களூர் மாநகர மக்கள் கட்டுமான பணி, வாகனம் சுத்தப்படுத்தல் உள்பட பல தேவை களுக்கு கழிவு நீரை சுத்திகரித்து பயன்படுத்தும் நோக்கத்தில் ரூ.ஆயிரத்து 200 கோடி செலவில் 20 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் திட்டம் வேகமாக நடந்து வருகிறது.

மாநகர மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் காவிரி குடிநீர் 4வது திட்டத்தின் 2வது கட்ட பணி மூலம் 5 ஆயிரம் லட்சம் லிட்டரை தண்ணீரை வீணாகாமல் மக்களுக்கு வழங்கும் நோக்கத்தில் 3 குடிநீர் வினியோக நிலையங்கள் ரூ.11.5 கோடி செலவில் அமைக்க திட்டமிட்டு கடந்தாண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 2011ல் காவிரி 4வது குடிநீர் திட்டத்தின் 2ம் கட்ட பணி முடிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

முதல் கட்டமாக நாகர்பாவியில் ரூ.3.24 கோடி செலவில் 50 லட்சம் லிட்டர் வினியோகம் செய்யும் நிலையம், ராஜராஜேஷ்வரி நகரில் உள்ள ஸ்ரீகந்தகாவலுவில் ரூ.4.36 கோடி செலவில் 75 லட்சம் லிட்டர் வினியோக நிலையம் மற்றும் தாசரஹள்ளி எம்..எஸ். லே அவுட்டில் ரூ.3.95 கோடி செலவில் 90 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யும் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

2ம் கட்டமாக ரூ.28.18 கோடி செலவில் கோவிந்தராஜ்நகர், அன்னபூர்ணேஷ்வரி நகர், நந்தினி லே அவுட், பேட்டராயனபுரா, கிருஷ்ணராஜபுரம், மகாதேவபுரா மற்றும் ஆர்.டி.நகரில் குடிநீர் வினியோக நிலையம் அமைக்கப்படுகிறது. மாநகரில் குடிநீருக்கு பயன்படுத்தும் தண்ணீரை கட்டுமான பணி, வாகனம் சுத்தம் செய்வது, பூங்கா பராமரிப்பு உள்பட பல தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் வீட்டு பயன்பாட்டை தவிர்த்து பிற தேவைகளுக்கு சுத்தகரிக்கப்படாத தண்ணீரை பயன்படுத்தும் வகையில் ரூ.ஆயிரத்து 200 கோடி செலவில் 20 கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தும் திட்டம் இவ்வாண்டு இறுதியில் தொடங்க அரசு யோசித்து வருவதாக நம்ப தகுந்த வட்டாரம் மூலம் தெரியவருகிறது. கழிவு நீரை சுத்திகரித்து வழங்கப்படும் தண்ணீருக்கு பொதுமக்களிடம் ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.16 வசூலிக்கவும், படிப்படியாக இதை ரூ.5 ஆக குறைக்கும் யோசனையும் அரசிடம் உள்ளது.

இத்திட்டம் செயல்படுத்திய பின் வீட்டு பயன்பாட்டை தவிர பிற பயன்பாட்டிற்கு காவிரி நீரை பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

 

மீஞ்சூர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்: 381 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம்

Print PDF

தினமணி 23.09.2010

மீஞ்சூர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்: 381 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம்

சென்னை மீஞ்சூரில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம். சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் சிவ்தாஸ் மீனா

சென்னை, செப்.22: மீஞ்சூரில் உள்ள கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து கடந்த ஜூலை மாதத்தில் இருந்து இதுவரையில் 381.40 கோடி லிட்டர் குடிநீர் பெறப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்று சென்னை நகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் சிவதாஸ் மீனா தெரிவித்தார்.

நெமிலியில் தயாராகி வரும் கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையம் செயல்பாட்டுக்கு வரும்போது, மிகவும் குறைந்த விலையில் ஆயிரம் லிட்டர் குடிநீர் 23-க்குப் பெறப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சென்னையை அடுத்த மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் உள்ள கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து புதன்கிழமை பத்திரிகையாளர்களுக்கு விளக்கப்பட்டது.

பின்னர் சென்னை கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் முதன்மை செயல் இயக்குநர் கணேசன் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் செயல் இயக்குநர் இளங்கோவன் மற்றும் செயல் பொறியாளர் அலாவுதீன் ஆகியோர் கூறியது:

கடலில் இருந்து 30 அடி ஆழத்தில் ராட்சத குழாய்கள் மூலம் கடல் நீர் உள்வாங்கும் தொட்டியில் நீர் எடுக்கப்படுகிறது. நீரில் வரும் சிப்பி, நத்தைக்கூடுகள் மற்றும் மீன் கழிவுகள், நவீன கருவி மூலம் வடிகட்டப்படுகிறது. பின்னர் அங்கிருந்து 400 கிலோ வாட் திறன் கொண்ட 3 மின் மோட்டார்கள் மூலம் கடல் நீர் உறிஞ்சப்படுகிறது. அதைத்தொடர்ந்து அழுத்தக் காற்றேற்றும் அறை மற்றும் மணல் வடிகட்டி என பல்வேறு நிலையங்களில் கடல் நீர் சுத்திகரிக்கப்படுகிறது.

இதையடுத்து, எதிர் சவ்வூடு பரவுதல் முறையில் (ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்) கடல் நீரில் உள்ள உப்புத்தன்மை குறைக்கப்படுகிறது. உதாரணமாக 1 லிட்டர் கடல் நீரில் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் மில்லி கிராம் உப்புத்தன்மை இருக்கும். இது சவ்வூடு பரவுதல் முறையில், அதாவது 1 லிட்டர் கடல் நீரில் 500 மில்லி கிராம் என்ற அளவுக்கு உப்புத்தன்மை குறைக்கப்படும். அதைத்தொடர்ந்து கனிமப் பொருள்கள் சேர்க்கப்பட்டு, குடிநீராகப் பெறப்படுகிறது.

கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் குடிநீர் சென்னை நகர் மக்களுக்கு வழங்கப்படுகிறது. ஸ்பெயின் நாட்டின் ஐ.வி.ஆர்.சி.எல். நிறுவனத்திடம் இருந்து ஆயிரம் லிட்டர் குடிநீர் 48.66-க்கு வாங்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் சிவதாஸ் மீனா நிருபர்களிடம் கூறியது:

மீஞ்சூர் கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து, கடந்த ஜூலை 31-ம் தேதி முதல் இதுவரையில் 381.40 கோடி லிட்டர் குடிநீர் சென்னை நகருக்கு பெறப்பட்டுள்ளது. மீஞ்சூரில் இருந்து மணலி கீழ்நிலைத் தொட்டிக்கு நாளொன்றுக்கு 1.50 கோடி லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது. இது திருவொற்றியூர், கத்திவாக்கம் நகராட்சி மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுகிறது.

அதுபோல மாதவரத்தில் உள்ள கீழ்நிலைத் தொட்டிக்கு 3.50 கோடி லிட்டர் குடிநீர் பெறப்பட்டு, பட்டேல் நகர் குடிநீர் விநியோக நிலையம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுகிறது. புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு 5 கோடி லிட்டர் குடிநீர் பெறப்பட்டு, வட சென்னை மற்றும் மத்திய சென்னையின் சில பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

நெமிலியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையம் 2011 டிசம்பரில் செயல்பாட்டுக்கு வரும். அதில் நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் குடிநீர் பெறப்படும். இந்த நிலையத்திற்கான பணிகளுக்கு மத்திய அரசு 871.24 கோடி நிதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. நிலையப் பணிகள் 700 கோடிக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையத்தில் இருந்து ஆயிரம் லிட்டர் குடிநீர் 23-க்கு குறைந்த விலையில் வாங்கப்படும். இப்போது சென்னை நகரில் நாளொன்றுக்கு 66 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

அயனாவரம், புளியந்தோப்பு பகுதிகளில் உள்ளவர்கள் கோழி இறைச்சி உள்ளிட்டவைகளை போடுவதால் கழிவுநீர் கால்வாயில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. இதுபற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். குடிநீர் கசிவு உள்ள 42 ஆயிரம் இணைப்புகளை சரி செய்ய உள்ளோம் என்றார்.

Last Updated on Thursday, 23 September 2010 11:13
 


Page 8 of 28