Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

பள்ளபட்டியில் குடிநீர் தொட்டிகள் திறப்பு

Print PDF

தினமணி              31.12.2013

பள்ளபட்டியில்  குடிநீர் தொட்டிகள் திறப்பு

பள்ளபட்டி பேரூராட்சியில் சட்டப்பேரவை தொகுதி நிதி ரூ. 9.60 லட்சத்தில் 4 இடங்களில் கட்டி முடிக்கப்பட்ட சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகளை எம்எல்ஏ கே.சி. பழனிசாமி அண்மையில் திறந்து வைத்தார்.

பொதுமக்களின் கோரிக்கையையடுத்து தனது தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து 4 வார்டுகளில் தலா ரூ 2.40 லட்சத்தில் மின்பவர் பம்ப், ஆழ்குழாய் கிணறு மற்றும் சின்டெக்ஸ்கள் அமைக்க மொத்தம் ரூ. 9.60 லட்சத்தை வழங்கினார்.

ஐவர் கால்பந்து : கரூர் முதலிடம்கரூர், டிச. 30: கரூரில் நடந்த மாநில அளவிலான ஐவர் கால்பந்துப் போட்டியில் கரூர் புலியூர் நெல்சன் அணி முதல் பரிசை வென்றது.

கரூர் புலியூர் நெல்சன் விளையாட்டுக் குழு சார்பில் புலியூர் ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் டிச. 28 முதல் டிச.29 வரை நடைபெற்ற போட்டிகளில் ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல், சேலம், ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 16 அணிகள் கலந்து கொண்டன.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று இறுதிப் போட்டியில் புலியூர் நெல்சன் அணி 3-0 என்ற கோல் கணக்கில் புகழூர் பாரதி அணியை எளிதில் வென்று முதல் பரிசான ரூ. 7,001-ஐ தட்டிச் சென்றது. 2-ம் பரிசாக புகழூர் பாரதி அணிக்கு ரூ. 5,001 வழங்கப்பட்டது. நாமக்கல் அணியை வென்ற ராணி மெய்யம்மை பள்ளி அணிக்கு -ம் பரிசாக ரூ. 3,001 வழங்கப்பட்டது.

பரிசுகளை புலியூர் செட்டிநாடு சிமென்ட் ஆலையின் முதுநிலை துணைத் தலைவர் அ. அண்ணாதுரை வழங்கினார். இதில் நெல்சன் கால்பந்து குழுச் செயலர் மோகன்ராஜ், நெல்சன் விளையாட்டுக் குழுச் செயலர் வீர. திருப்பதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

ரூ.37 கோடி செலவில் குடிநீர் அபிவிருத்தித் திட்டம்

Print PDF

தினமணி              31.12.2013

ரூ.37 கோடி செலவில் குடிநீர் அபிவிருத்தித் திட்டம்

திருவண்ணாமலை நகராட்சியில் ரூ.37 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ள குடிநீர் அபிவிருத்தித் திட்டத்தை சென்னையில் இருந்தபடியே காணொலி மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

 திருவண்ணாமலை நகராட்சியில் 1 லட்சத்து 49 ஆயிரத்து 500 பேர் வசிக்கின்றனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கும் நோக்கில் ரூ.36 கோடியே 66 லட்சம் மதிப்பில் புதிய குடிநீர் அபிவிருத்தித் திட்டப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

 இதையடுத்து, திங்கள்கிழமை கொடநாட்டில் இருந்தபடியே காணொலி மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா இக்குடிநீர் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலையில் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டி பகுதியில் விழா நடைபெற்றது.

இவ்விழாவில், ஆட்சியர் அ.ஞானசேகரன், நகர்மன்றத் தலைவர் என்.பாலச்சந்தர், ஆணையாளர் பெ.விஜயலட்சுமி, தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஜெயலலிதா பேரவையின் மாவட்டச் செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் எம்.எஸ்.நைனாக்கண்ணு, ஒன்றிய செயலாளர் ஏ.கே.குமாரசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 தொடர்ந்து, குடிநீர் தொட்டிக்கு கீழே அமைக்கப்பட்டுள்ள குழாயில் மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் பொதுமக்கள் தண்ணீர் வழங்கினார்.

 இது தவிர, திருவண்ணாமலை மாவட்டத்தில் புதுப்பாளையம் மற்றும் செங்கம் ஒன்றியங்களைச் சேர்ந்த மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் வகையிலான குடிநீர் திட்டங்களையும் திங்கள்கிழமை தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

 

சந்தப்பேட்டை பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீர் லாரிகள் மூலம் விநியோகம்

Print PDF

தினகரன்           30.12.2013

சந்தப்பேட்டை பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீர் லாரிகள் மூலம் விநியோகம்

திருக்கோவிலூர், : திருக்கோவிலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக வறட்சி காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர் மட்டம் குறைந்ததால் ஆங்காங்கே குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது இதனால் பொதுமக்கள் சாலைமறியல், பேரூராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

இதையடுத்து தேமுதிக வெங்கடேசன் எம்எல்ஏ திருக்கோவிலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்குவதாக உத்தரவாதம் அளித்தார். அதன்படி திருக்கோவிலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தப்பேட்டையில் உள்ள 14, 15, 16, 17, 18 ஆகிய 5 வார்டுகளுக்கும் கடந்த இரண்டு நாட்களாக தேமுதிக சார்பில் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

இந்த குடிநீர் வினியோகம் செய்யும் பணியினை மாவ ட்ட துணை செயலாளர் உமாசங்கர், ஒன்றிய செயலா ளர் காமராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் வக்கீல் ஆதன்ரவி, அஷ்ரப்அலி, சாசிஅழகிரி, வினோத், கபூர்கான், ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், சிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


Page 19 of 390