Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

நகராட்சி பகுதியில் ஒரு கோடி மதிப்பில் கழிவுநீர் கால்வாய்கள் சீரமைக்கும் பணி

Print PDF

தினகரன்             06.01.2014

நகராட்சி பகுதியில் ஒரு கோடி மதிப்பில் கழிவுநீர் கால்வாய்கள் சீரமைக்கும் பணி

கிருஷ்ணகிரி, : கிருஷ்ணகிரி நகராட்சியில் sஒரு கோடி மதிப்பில் கழிவுநீர் கால்வாய்கள் சீரமைக்கும் பணிகள் தொடங்கியது.

கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் வீடுகள் மற்றும் கடைகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் வெளியேற கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கால்வாய்கள் அமைக்கப்பட்டு நீண்ட காலம் ஆனதாலும், மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் கால்வாயில் தேங்கியதாலும் கழிவுநீர் மற்றும் மழைநீர் எளிதில் வெளியேற முடியாமல் அடைப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் நகரின் முக்கிய பகுதிகளான ரவுண்டானா, காந்திரோடு, பெங்களூர் ரோடு, சேலம் ரோடு, சென்னை சாலை போன்ற பகுதிகளில் மழை காலம் மட்டுமின்றி, சாதாரண நாட்களிலும் கழிவுநீர் வெளியேற முடியாமல் அடைப்பு ஏற்பட்டு வந்தது. இது குறித்து பொதுமக்களும், வணிகர்களும் நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி நகரில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை சீரமைத்து புனரமைக்க ஒரு கோடி ஒருங்கிணைந்த நிதி, வருவாய் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு காந்தி ரோடு உள்பட முக்கிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது ரவுண்டானா 5 ரோடு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த பணிகளை நகர்மன்ற தலைவர் தங்கமுத்து நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைவாக செய்து முடிக்கவும், கால்வாய் பகுதியில் செல்லும் டெலிபோன் உள்பட தொலைதொடர்பு கேபிள்களுக்கு எவ்வித பாதிப்பு இல்லாமல் செய்யும்படியும் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது நகர்மன்ற உறுப்பினர் பழனி மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

போர்வெல் மினிடேங்க் திறப்பு

Print PDF

தினகரன்             06.01.2014

போர்வெல் மினிடேங்க் திறப்பு

இடைப்பாடி, : இடைப்பாடி நகராட்சி சின்னமணலி 18வது வார்டில் பேர்வெல் மினிடேங்க் ரூ.2 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதனை இடைப்பாடி நகர்மன்ற தலைவர் கதிரேசன் தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் ராமன், பாசறை இளம்பெண் நகர செயலாளர் சங்கர்கணேஷ், நாராயணன், கவுன்சிலர் ரோகினி, செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து மினிடேங்க் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

 அதேபோல் ரூ.ஒரு லட்சம் மதிப்பில் அதே பகுதியில் மற்றொரு மினிடேங்கை நகர் மன்ற தலைவர் கதிரேசன் திறந்து வைத்தார். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

எடப்பாடியில் குடிநீர்த் தொட்டி திறப்பு

Print PDF

தினமணி               06.01.2014

எடப்பாடியில் குடிநீர்த் தொட்டி திறப்பு

எடப்பாடி நகராட்சிப் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட குடிநீர்த் தொட்டிகளை நகர்மன்றத் தலைவர் டி.கதிரேசன் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

எடப்பாடி நகராட்சிப் பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.  இந்தக் குடிநீர்த் தொட்டிகளின் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் சி.ராமன், நகர மன்ற உறுப்பிணர் ரோகிணி, கூட்டுறவுச் சங்கத் தலைவர் ஈ.கே.செந்தில், ஆலச்சம்பாளையம் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


Page 17 of 390