Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

புதிய குடிநீர் திட்டம் விரைவில் அமலாக்கம்

Print PDF

தினமலர்           29.01.2014 

புதிய குடிநீர் திட்டம் விரைவில் அமலாக்கம்

ஈரோடு: ஊராட்சிகோட்டை கூட்டு குடிநீர் திட்டத்துக்கான அனுமதி விரைவில் கிடைக்கும், என துணை மேயர் பழனிசாமி தெரிவித்தார். ஈரோடு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், 60 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது குடிநீர் தேவைக்கு, காவிரியில் இருந்து தினமும், 90 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இந்த நீரை சுத்திகரிப்பு செய்து, பொது மக்களுக்கு, மாநகராட்சி வழங்கி வருகிறது. காவிரியில் சாயக்கழிவு, தோல் தொழிற்சாலை மற்றும் சாக்கடை கழிவுகள் பெரும் அளவில் கலப்பதால், குடிநீர் கடுமையாக மாசுபட்டுள்ளது. இவற்றை தடுக்க மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கு மாற்று ஏற்பாடு செய்யும் நோக்கத்தில், ஊராட்சிகோட்டையில் இருந்து தண்ணீர் எடுத்து வர, 425 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டு, மத்திய அரசின் அனுமதிக்கு சென்றுள்ளது. இதுகுறித்து துணை மேயர் பழனிசாமி கூறியதாவது: ஊராட்சிகோட்டை கூட்டு குடிநீர் திட்டத்துக்கு மத்திய அரசு, 50 சதவீதம், மாநில அரசு அரசு, 40 சதவீதம், மாநகராட்சி, 10 சதவீதம் பங்களிப்போடு, பணிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு மிக விரைவில் அனுமதி கிடைக்கும், என எதிர்பார்த்திருக்கிறோம். அனுமதி கிடைத்ததும், பணிகள் துவங்கும், என்றார்.

 

குடிநீர்த் திட்டத்துக்கு ரூ.37 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமணி          27.01.2014 

குடிநீர்த் திட்டத்துக்கு ரூ.37 கோடி ஒதுக்கீடு

ஆரணி நகருக்கு குடிநீர் அபிவிருத்தி திட்டத்துக்கு ரூ.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா ஆணை பிறப்பித்ததையொட்டி, ஆரணியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

ஆரணி நகருக்கு சில மாதங்களுக்கு முன்பு ரூ.37 கோடியில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் ஒதுக்கீடு செய்து முதல்வர் அறிவித்தார். இத்திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து சனிக்கிழமை ஆணையிட்டார்.

இதையடுத்து ஆரணி நகர்மன்றத் தலைவர் ஆனந்தகுமாரி தலைமையிலான அதிமுகவினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலர் டி.கருணாகரன், நகரச் செயலர் அசோக்குமார், துணைத் தலைவர் தேவசேனா ஆனந்த், நகர்மன்ற உறுப்பினர்கள் ஜோதிலிங்கம், அன்புஇளங்கோ, வேலாயுதம், பொன்னி பாலாஜி, ரவி, பிரபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

மதுரை மாநகரில் குடிநீர் பிரச்னையை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Print PDF

தினமணி             25.01.2014

மதுரை மாநகரில் குடிநீர் பிரச்னையை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மதுரை மாநகரில் கோடைகாலத்தில் குடிநீர் பிரச்னை ஏற்படாமல் சமாளிக்க மாநகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது.

மதுரை மாநகரில் கோடைகாலத்தில் சீராக குடிநீர் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆணையாளர் கிரண்குராலா தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தலைமை வகித்து மேயர் ராஜன்செல்லப்பா பேசியது:

பருவமழை பொய்த்த காரணத்தால், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் கோடைகாலங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளில் உள்ள தனியாருக்கு சொந்தமான திறந்தவெளி கிணறுகள் மூலமாக குடிநீர் பெறப்பட்டு, தனியார் லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படும்.

விரிவாக்கப் பகுதிகளில் நிலத்தடி நீர் ஆதாரம் உள்ள பகுதிகளை கண்டறிந்து, ஆழ்துளை கிணறுகள் அமைக்கவும், மாநகராட்சி வார்டு பகுதிகளில் கூடுதலாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் மற்றும் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி பொறியாளர்கள் இப்போதிருந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துவக்க வேண்டும்.

  மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளிலுள்ள குடிநீர் ஆதாரங்களை கண்டறிந்து குடிநீர் தொடர்ந்து சீராக விநியோகம் நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும், என்றார்.

கூட்டத்தில், நகரப் பொறியாளர் மதுரம், செயற்பொறியாளர்கள் சந்திரசேகரன், திருஞானம், அரசு, ராஜேந்திரன், பிஆர்ஓ சித்திரவேல் மற்றும் உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

 


Page 15 of 390