Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

நாளை குடிநீர் சப்ளையாகும் பகுதிகள்

Print PDF

தினகரன்            05.02.2014

நாளை குடிநீர் சப்ளையாகும் பகுதிகள்

மதுரை, : குடிநீர் 4 நாட்களுக்கு ஒரு சுழற்சி முறையில் நாளை வரும் பகுதிகளை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதிகாலை 3.30 முதல் நள்ளிரவு 12.30 வரை நேரங்கள் பிரிக்கப்பட்டு சப்ளை செய்யப்படுவதால் குடத்துடன் காத்து கிடக்கும் பெண்கள் தூக்கம் போச்சு என்ற நிலை உருவாகி உள்ளது.

பிப்ரவரி 6ந் தேதி (நாளை) முதல் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை நகரின் வடகரை, தென் கரை என பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு கரையிலும் 4 பகுதிகள் பிரிக்கப்பட்டு தலா ஒரு நாள் வீதம் சுழற்சி முறையில் சப்ளையாகும். அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கி, நள்ளிரவு 12.30 மணி வரை சப்ளை நேரங்களும் பிரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி நாளை சப்ளையாகும் பகுதிகள்:- வடகரையில் அதிகாலை 3.30 முதல் 6.30 வரை- அருள்தாஸ்புரம் மேல்நிலைத் தொட்டி கிழக்கு பகுதிகள் அருள்தாஸ்புரம், அசோக்நகர், தத்தநேரி கிழக்கு மெயின்ரோடு, வயல் வெளிபகுதிகள், பெரியசாமி கோனார் தெரு.

காலை 6.30 முதல் மதியம் 2.30 வரை;- ரிசர்லைன் மேல்நிலைத் தொட்டி- ராஜாஜி தெரு, காமராஜர் தெரு, மூவேந்தர் தெரு, பகிர்மான பகுதிகள் பீபிகுளம், அம்பேத்கர் காலனி, முல்லை நகர் தனபால் பள்ளி, புலித்தேவன தெரு, டி.ஆர்.ஓ. காலனி, அண்ணா தெரு, முனியாண்டி கோவில் தெரு.

மதியம் 2.30 முதல் இரவு 8.30 வரை:- தாகூர் வால்பு பகிர்மான பகுதிகள்- பாரதிதாசனார் தெரு, அழகாபுரி, வ.உ.சி.தெரு, மீனாட்சிபுரம், சத்தியமூர்த்தி 1 முதல் 7வது தெரு, பூமி உருண்டை தெரு, அய்யனார் கோவில் 1 முதல் 5வது தெரு, அகிம்சாபுரம், பூந்தமல்லிநகர், ஜீவா தெரு, போஸ் வீதி, 50 அடி, 60 அடி ரோடு, சிவகாமி தெரு, தாகூர்நகர், குலமங்கலம் மெயின்ரோடு.

தென் பகுதியில் இரவு 8.30 முதல் நள்ளிரவு 12.30 வரை- சுந்தர்ராஜபுரம் மேல்நிலைத் தொட்டி விநியோக பகுதிகள் டிவிஎஸ்.நகர், கோவலன்நகர், முத்துப்பட்டி, ஆண்டாள்புரம், பழைய மீனாட்சி மில் காலனி.

அதிகாலை 4 முதல் 7 வரை- கோச்சடை-1, பெத்தானிபுரம், முத்துநகர், பூஞ்சோலைநகர், டோக்நகர், நடராஜ்நகர், இந்திராநகர், கணேசபுரம், முடக்குசாலை, பெத்தானியபுரம், மேட்டுதெரு,  அண்ணா மெயின்வீதி, பல்லவன்நகர், பாண்டியன் நகர், ஐ.என்.டி.யு.சி.காலனி.

காலை 7 முதல் 10.30 வரை- ஞாயிற்றுக் கிழமை சந்தை மேல் நிலைத் தொட்டி- மேமாசி வீதி, கிருஷ்ணராயர் தெப்பம், டி.வி.லேன், மேலபெருமாள் வீதி, காக்கா தோப்பு, குட்செட் தெரு, நாடார் சந்து, அக்ரகாரம் மணி அய்யர் ஸ்காட் ரோடு, மணிநகரம், கனகவேல் காலனி, பேச்சியம்மன் படித்துறை. காலை 10.30 முதல் மதியம் 12 மணி- ஜிஎல்எஸ்ஆர்.

மதியம் 12 முதல் மாலை 6 மணி- பெரியார் பஸ் ஸ்டாண்ட், திடீர்நகர்,  மேலவாசல், பெருமாள் கோவில், கட்ராபாளையம், நேதாஜி ரோடு, காஜிமார் தெரு, பள்ளிக்கூட தெரு, மீனாட்சி தியேட்டர், எப்எப்.ரோடு, மேலமாசி வீதி, தெற்கு ஆவணி மூலவீதி.

மாலை 6 முதல் இரவு 10.30 மணி- விராட்டிபத்து, முத்துதேவர் காலனி, ஜெய்நகர், எச்எம்எஸ்.காலனி, ஆனந்தராஜ்நகர். இருளாண்டி தேவர் காலனி, கிருதுமால்நகர். அங்காள ஈஸ்வரி நகர். இரவு 10.30 முதல் அதிகாலை 3 மணி- ஜிஎல்எஸ்ஆர்.

 

வரலாறு காணாத பஞ்சம் தலை தூக்கியது நாளை முதல் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் ஏப்ரலில் அதுவும் இல்லை

Print PDF

தினகரன்            05.02.2014

வரலாறு காணாத பஞ்சம் தலை தூக்கியது நாளை முதல் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் ஏப்ரலில் அதுவும் இல்லை

மதுரை, : வைகை அணை நீர் 35 அடியாக சரிந்ததால் மதுரையில் நாளை முதல் 4 நாட்களுக்கு ஒரு முறை மார்ச் இறுதி வரை சப்ளை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரியாறு அணை நீரில் ஆண்டுதோறும் 1,500 மில்லியன் கன அடி நீர் மதுரை குடிநீருக்காக ஒதுக்கப்படுகிறது. இது வைகை அணையில் இருப்பு வைக்கப்பட்டு ஜூன் வரை குடிநீருக் காக சப்ளை செய்யப்படுவது வழக்கம். பயிர்களை விட மனிதர்கள் முக்கியம் என்ற அடிப்படையில் குடிநீருக்கு முன்னுரிமை அளித்து விதிமுறை உள்ளது. இந்த நடைமுறையில் ஏற்பட்ட குளறுபடி காரண மாக வரலாறு காணாத அளவுக்கு மதுரையில் குடிநீர் பஞ்சம் தலைதூக்கி உள்ளது. நேற்றைய நிலவரப்படி பெரியாறு அணை நீர் மட்டம் 111.10 அடி. வைகை அணை 35.17 அடி. கொள்ளளவு 616 மில்லியன் கன அடி. இதில் 102 மி.க.அடி சகதியானது. 514 மி.க.அடி மட்டுமே வெளி யேற்ற முடியும். கடந்த ஆண்டு இதே நாளில் வைகை 49.21 அடி. இதன் கொள்ளளவாக 1,821 மி.க.அடி இருந்தது.

இந்த சூழ்நிலையில் மதுரையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் சப்ளையை 4 நாட்களுக்கு ஒரு முறை என மாற்றம் செய்து மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து மேயர் ராஜன்செல்லப்பா, ஆணையர் கிரண்குராலா நிருபர்களிடம் கூறியதாவது:

வைகையில் 514 மி.க.அடி மட்டுமே இருப்பதால் குடிநீருக்காக திறப்பது 60 கன அடியில் இருந்து 40 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பழைய 72 வார்டு பகுதிகளுக்கும் அன்றாடம் சப்ளையாகி வந்த 115 மில்லியன் லிட்டர் 75 மில்லியன் லிட்டராக குறைக்கப்படுகிறது. பிப்ரவரி 6ந் தேதி (நாளை) முதல் 4 நாட்களுக்கு ஒரு முறை குழாய்களில் சப்ளை செய்யப்படும். குடிநீரை மோட்டார் வைத்து உறிஞ்சாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே மேடான பகுதிகளுக்கு சீராக சப்ளையாகும்.

லாரிகள் மூலமாகவும் சப்ளை செய்யப்படும். குழாய்களில் 4 நாட்களுக்கு ஒரு முறை அதன் அளவை யும் குறைத்து மார்ச் இறுதி வரை சப்ளை செய்ய முடியும்.

திருப்பரங்குன்றம், மங்களகுடி, மணலூர், மேலக்கால், மேநேந்தல், ஐ.டி.பூங்கா ஆகிய பகுதிகளில் 34 தனியார் கிணறுகளில் குடிநீர் எடுத்து மதுரைக்கு கொண்டு வரவும், போர்வெல்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனை யூர், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதிகளில் தற்போது குடிநீருக்கு பிரச்சினை இல்லை என்று கூறினர். நகர பொறியாளர் மதுரம் உடன் இருந்தார்.

வைகை ஆற்று படுகையில் செயற்கை மழை பெய்விக்க சாத்தியகூறு இருப்பதாக வேளாண் பல்கலைகழகம் ஆய்வு நடத்தி தெரிவித்துள்ளதே. அதன்படி குடிநீருக்காக செயற்கை மழை பெய்விக்க முயற்சிக்கப்படுமா? என்று கேட்டதற்கு மேயர் பதிலளிக்கும்போது, “ஏப்ரலுக்குள் இயற்கை கை கொடுத்து மழை பெய்யும் என்று நம்புவோம், அதன் பிறகு செயற்கை மழை குறித்து யோசிக்கலாம்“ என்றார்.

 

மானாமதுரையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தீவிர நடவடிக்கை: தலைவர் தகவல்

Print PDF

தினமணி             03.02.2014

மானாமதுரையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தீவிர நடவடிக்கை: தலைவர் தகவல்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பேரூராட்சியில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க கூடுதல் இடங்களில் போர்வெல் கிணறுகள் மற்றும் சின்டெக்ஸ் தொட்டிகள் அமைக்கப்படும் என பேரூராட்சி மன்றத் தலைவர் ஐ.ஜோசப்ராஜன் தெரிவித்தார்.

மானாமதுரை பேரூராட்சி மன்றக் கூட்டம் தலைவர் ஜோசப்ராஜன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் காளீஸ்வரி தெய்வேந்திரன், செயல் அலுவலர் அமானுல்லா, சுகாதார ஆய்வாளர் அபுபக்கர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை சுகாதார மேற்பார்வையாளர் பாலு வாசித்தார்.

கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்கள் தங்களது வார்டு பகுதியிலுள்ள அடிப்படை  பிரச்னைகள் குறித்து பேசினர்.

கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு தலைவர் பதிலளித்துப் பேசியதாவது:

ராஜகம்பீரம் வைகையாற்றுக்குள் செயல்படும் மானாமதுரை நகர் குடிநீர் திட்டத்துக்கான போர்வெல் கிணறுகளில் வறட்சி காரணமாக நீர் ஆதாரம் குறைந்து வருவதால், தற்போது நகரில் ஒருநாள் விட்டு ஒருநாள் தான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

இனி வரக்கூடிய கோடைகாலத்தில் நகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகும் என கருதுவதால், முன்னெச்சரிக்கையாக தற்போதுள்ள போர்வெல்

கிணறுகளுடன் மேலும் கிணறுகள் அமைத்து அதிலிருந்து குடிநீர் சப்ளை செய்யும் திட்டம் உள்ளது.

மேலும் நகரில் பல்வேறு இடங்களிலும் சின்டெக்ஸ் தொட்டிகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 மானாமதுரை நகர் குடிநீர் திட்டம் செயல்படும் ராஜகம்பீரம் வைகையாற்று பகுதியில் மணல் அள்ள தடை விதிக்க வேண்டும், பேரூராட்சி கவுன்சிலர்கள் மன்றக் கூட்ட பார்வைக்கு கொண்டு வந்த நகர் வளர்ச்சித் திட்டத்துக்கான பணிகளை எடுத்துச் செய்ய அனுமதி கோருதல், பேரூராட்சியின் செலவினங்களை அங்கீகரித்தல், திட்டப் பணிகளை எடுத்துச் செய்ய குறைந்த ஒப்பந்தப்புள்ளி கொடுத்த ஒப்பந்தங்களை அனுமதித்தல் என 17 தீர்மானங்கள் இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

 


Page 12 of 390