Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

மதுரை கோட்டத்திற்கு புதிய பேருந்துகள்

Print PDF

தினமலர் 17.09.2009

 

பொள்ளாச்சி புதிய பேருந்து பணி நிறைவுபெறுகிறது

Print PDF

தினமலர் 05.09.2009

Last Updated on Sunday, 06 September 2009 15:12
 

நகரங்களில் போக்குவரத்தை சீராக்க புதிய திட்டம்: ஏடிஜிபி

Print PDF

தினமணி 04.09.2009

நகரங்களில் போக்குவரத்தை சீராக்க புதிய திட்டம்: ஏடிஜிபி

மதுரை, செப். 3 தமிழகத்தில் முக்கிய நகரங்களில் போக்குவரத்தைச் சீராக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று மாநில ஏடிஜிபி கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.

மதுரையில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி விவரம்:

மதுரையில் "வாரம் ஒரு வீதி' என்ற திட்டம் மூலம் போக்குவரத்தை சீராக்கி உள்ளனர். இதற்காக மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் போக்குவரத்து போலீஸôரை பாராட்டுகிறேன்.

மக்களிடம் வரவேற்பை பெற்ற இத்திட்டத்தை தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக யார் பேசினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் புகாருக்கு உள்ளாகும் போலீஸôர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சமீபத்தில் மதுரை அருகே விருதுநகர் காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) சென்ற கார் விபத்துக்குள்ளாகி, காவலர் ஒருவர் இறந்தார். அவரது குடும்பத்துக்கு போலீஸôர் சார்பில் திரட்டிய ரூ.5 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. அரசு சார்பிலும் நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இறந்த காவலர் குடும்பத்தில் ஒருவருக்கு பணி வழங்கவும், பிள்ளைகளின் கல்விச் செலவை ஏற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

காவலர்கள் விபத்தில் சிக்குவதை தவிர்க்கும் வகையில் விரைவில் பயிற்சி அளிக்கப்படும்.

மதுரை புறநகர் பகுதியில் குற்றச்சம்பவங்களில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நகை உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சமீபத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பேரணியை பாராட்டும் வகையில் அமைதியாக போலீஸ் அதிகாரிகள் நடத்தியுள்ளனர்.

1994-ல் பணியில் சேர்ந்த போலீஸôருக்கு உரிய பதவி உயர்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்றத்தில் ஈடுபடுவோர் தண்டனையை குறைந்த காலத்தில் பெற்று வெளிவந்ததும் அடுத்தடுத்து குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆன்-லைன் லாட்டரி: தமிழகத்தில் ஆன்-லைன் லாட்டரி பல இடங்களில் நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து அதிரடி சோதனை நடத்தப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து சிபிசிஐடி பிரிவு விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
போலீஸôரின் தொடர் கண்காணிப்பால் ரேஷன் அரிசி கடத்தல், மணல் கடத்தல் உள்ளிட்டவை குறைந்துள்ளது என்றார்.
மதுரை புறநகரில் போலீஸôரால் கண்டறியப்பட்ட குற்றவழக்குகளில் மீட்கப்பட்ட நகைகளை உரியவர்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் தென்மண்டல ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தி, டி..ஜி. பாலசுப்பிரமணியன், மாநகர் போலீஸ் கமிஷனர் கே.நந்தபாலன், புறநகர் எஸ்.பி.மனோகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கிராமப்புற தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, செப். 3: ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராமப்புற தபால் ஊழியர்கள் மதுரையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஸ்காட் ரோட்டில் உள்ள தலைமைத் தபால் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தபால் ஊழியர்கள் சங்க நிர்வாகி முத்துகருப்பன் தலைமை வகித்தார்.

சோரிக்கைகளை விளக்கி சங்க செயலர் ரெங்கசாமி பேசினார்.

 


Page 54 of 57