Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

தேனி புறவழிச் சாலையில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் துவக்கம்

Print PDF

தினமணி 6.11.2009

தேனி புறவழிச் சாலையில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் துவக்கம்

தேனி
, நவ.5: தேனி புறவழிச் சாலையில் வனத் துறை இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான முதற் கட்டப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.

÷மாவட்டத் தலைநகரான தேனியில் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிóக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, புதிய பஸ் நிலையம் அமைக்க தேனி-பெரியகுளம் புறவழிச் சாலையில் சிட்கோவிற்கு வடபுறமுள்ள வனத் துறைக்குச் சொந்தமான 7.35 ஏக்கர் நிலத்தை மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்து அரசுக்குப் பரிந்துரைத்தது. ÷

மேலும் இந்த இடத்திற்குப் பதிலாக கடமலைக்குண்டு பகுதியில் இரண்டு மடங்கு அரசு புறம்போக்கு நிலத்தை வனத் துறைக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, வனத் துறை இடத்தில் பஸ் நிலையம் அமைக்க மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் சில மாதங்களுக்கு முன்பு ஒப்புதல் வழங்கியது.

÷இதன் பேரில் பஸ் நிலையம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் உள்ள மரங்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.21 லட்சம் வழங்க நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது. ÷

இந் நிலையில் வனத் துறை இடத்தில் பஸ் நிலையம் அமைக்கத் தனியார் தொண்டு நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் கடந்த வாரம் தள்ளுபடி செய்தனர்.

÷வனத் துறை வழிகாட்டுதலின்படி பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தின் நான்கு புறமும் தூண்கள் அமைக்க நகராட்சித் தலைவர் பழனிச்சாமி தலைமையில் பூஜைகள் செய்யப்பட்டு வியாழக்கிழமை பணிகள் தொடங்கின.

Last Updated on Friday, 06 November 2009 06:15
 

நெரிசலை குறைப்பதற்காக பஸ்கள் செல்ல தனி வழித்தடம்; போக்குவரத்து துறை திட்டம்

Print PDF

மாலை மலர் 4.11.2009

நெரிசலை குறைப்பதற்காக பஸ்கள் செல்ல தனி வழித்தடம்; போக்குவரத்து துறை திட்டம்

சென்னை, நவ. 4-

சென்னை நகரில் 500-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் 2815 மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் லட்சக்கணக்கில் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களும் செல்கின்றன. வாகனங்களின் பெருக்கத்தால் போக்குவரத்து நெரிசல் கூடிக்கொண்டே செல்கிறது. நெரிசலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

போக்கு வரத்து நெரிசலை குறைக்கத் தேவையான ஆலோசனைகளை வழங்க துணை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் தலைமையில் சமீபத்தில் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் நெரிசலை குறைக்கும் ஆலோசனைகளை அறிக்கையாக அளிக்கும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தர விட்டுள்ளார். இது தொடர்பாக குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றனர். இது பற்றி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னை மாநகர சாலைகளில் போக்குவரத்து நெரிசலை அதிகம் ஏற்படுத்தும் வாகனங்கள் எவை என்பதை உறுதியாக சொல்ல முடியாது. மாநகர பஸ்கள் சில பஸ் நிறுத்தங்களில் நிற்பதில்லை என்று புகார்கள் வருகின்றன. இதற்கு காரணம் பஸ் நிறுத்தத்தில் உள்ள ஆக்கிரமிப்பே காரணம் ஆகும். இதனால் சாலையின் நடுப்பகுதி அல்லது வலது புறப்பகுதிகளில் பஸ்கள் செல்ல வேண்டிய நிலை உருவாகிறது.

இனி மாநகர பஸ்கள் அனைத்தும் சாலையின் இடது புறம் செல்லும் வகையில் அதற்கான தனி வழித்தடம் ஏற்படுத்த திட்ட மிடப்பட்டு வருகிறது. முதலில் நகரின் முக்கிய சாலைகளில் சோதனை அடிப்படையில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Last Updated on Wednesday, 04 November 2009 11:47
 

பஸ்களுக்கு சாலையில் தனிவழித் தடம்

Print PDF

தினமணி 4.11.2009

பஸ்களுக்கு சாலையில் தனிவழித் தடம்

சென்னை, நவ. 3: சென்னை நகரில் இயக்கப்படும் பஸ்களுக்கு சாலையில் தனிவழித் தடத்தை ஏற்படுத்த போக்குவரத்துத் துறை திட்டமிட்டு வருகிறது.

பெருகி வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வழிமுறையின் ஒருபகுதியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை நகரில் 2,815மாநகர பஸ்கள் 500-க்கும் மேற்பட்ட வழித் தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், லட்சக்கணக்கில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சாலையில் செல்கின்றன.

வாகனங்களின் பெருக்கம் ஒருபுறம் அதிகரிக்க, போக்குவரத்து நெரிசல் மறுபுறம் கூடிக் கொண்டே செல்கிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

துணை முதல்வர் தலைமையில்...: போக்குவரத்து நெரிசலைக் குறைக்கத் தேவையான ஆலோசனைகளை வழங்க துணை முதல்வர் மு..ஸ்டாலின் தலைமையில் அண்மையில் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது.

நெரிசலைக் குறைக்கும் வகையிலான ஆலோசனைகளை அறிக்கையாக அளிக்கும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

சாலையில் தனிவழித் தடம்...இந்த நிலையில், சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றனர்.

இதுகுறித்து, அந்தத் துறையின் உயரதிகாரி ஒருவர் கூறியது:

""சென்னை மாநகர சாலைகளில் போக்குவரத்து நெரிசலை அதிகம் ஏற்படுத்தும் வாகனங்கள் எவை? என்று அறுதியிட்டுக் கூறமுடியாது. மாநகர பஸ்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிறுத்தங்களில் நிற்பதில்லை என புகார்கள் வருகின்றன. இதற்குக் காரணம், நிறுத்தங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள்தான். இதனால், சாலையின் நடு மற்றும் வலதுபுறப் பகுதிகளில் பஸ்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. மாநகர பஸ்கள் அனைத்தும் சாலையின் இடதுபுறம் செல்லும் வகையில் அதற்கென தனி வழித்தடம் ஏற்படுத்த போக்குவரத்துத் துறை திட்டமிட்டு வருகிறது. நகரின் பிரதான சாலையில் சோதனை அடிப்படையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

அண்ணா சாலையில்...அண்ணா சாலையில் டி.வி.எஸ். பஸ் நிலையம் முதல் ஸ்பென்சர் சந்திப்பு வரை சாலையில் மூன்று வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்களுக்கு முறையே தனித்தனி வழித் தடங்களும், பஸ் போக்குவரத்துக்கு தனி வழித்தடமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்பென்சர் சந்திப்புக்குப் பிறகு மூன்றுவழித் தடம் அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பஸ்களுக்கென சாலையில் தனி வழித் தடத்தை அமைப்பதற்கான திட்டங்களை தயாரிக்கும் பணியில் போக்குவரத்துத் துறை ஈடுபட்டுள்ளது.

Last Updated on Wednesday, 04 November 2009 06:12
 


Page 50 of 57