Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைகிறது

Print PDF

தினமலர் 30.07.2009

 

194 பள்ளிகளுக்கு எஸ்எஸ்ஏ ரூ.30.45 லட்சம் மானியம்

Print PDF

தினமணி 28.07.2009

194 பள்ளிகளுக்கு எஸ்எஸ்ஏ ரூ.30.45 லட்சம் மானியம்

திருப்பூர், ஜூலை 27: அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்எஸ்ஏ) சார்பில் திருப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 194 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் நகராட்சிப் பள்ளிகளுக்கு பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு மானியமாக ரூ.30.45 லட்சம் வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சி கேஎஸ்சி அரசுப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மானியம் பெற 94 தொடக்கப் பள்ளிகள், 79 நடுநிலைப் பள்ளிகள், 8 உயர் நிலைப் பள்ளிகள், 13 மேல்நிலைப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. பள்ளி மானியமாக தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.5 ஆயிரம், நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.12 ஆயிரம், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.7 ஆயிரம் வழங்கப்பட்டன.

பராமரிப்பு மானியமாக 3 வகுப்பறைகள் கொண்ட பள்ளிகளுக்கு ரூ.5 ஆயிரம், 3 வகுப்பறைகளுக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டன. அதன்படி, பள்ளி மானியமாக ரூ.15.65 லட்சமும், பராமரிப்பு மானியமாக ரூ.14.80 லட்சமும் வழங்கப்பட்டன.

மானியத் தொகைகளை உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் தேவராஜன், அந்தந்தப் பள்ளி தலைமையாசிரியர்களிடம் வழங்கினார். அனைவருக்கும் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.லோகநாயகி, கேஎஸ்சி பள்ளி தலைமையாசிரியர் நடராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

 

இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வு பெற்ற மதுரை மாநகராட்சிப் பள்ளி முன்னாள் மாணவருக்குப் பாராட்டு விழா

Print PDF

தினமணி 25.07.2009

இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வு பெற்ற மதுரை மாநகராட்சிப் பள்ளி முன்னாள் மாணவருக்குப் பாராட்டு விழா

மதுரை, ஜூலை 24: மதுரை மாநகராட்சிப் பள்ளியில் பயின்று இந்திய ஆட்சிப்பணித் தேர்வில் தேர்ச்சிபெற்றுள்ள வீரபாண்டிக்கு மேயர் ஜி.தேன்மொழி தலைமையில், ஆணையர் எஸ்.செபாஸ்டின் முன்னிலையில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

மாநகராட்சி கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்ற விழாவில் மேயர் பேசுகையில், மதுரை மாநகராட்சிப் பள்ளியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள வீரபாண்டியால் மதுரை மாநகராட்சியே பெருமை அடைகிறது என்றார்.

ஆணையர் பேசுகையில், தற்போது தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாநகராட்சிப் பள்ளிகளின் கல்வித்தரம் உயர்ந்துவருகிறது. மதுரை மாநகராட்சிப் பள்ளியில் பயின்ற வீரபாண்டி மாநகராட்சிக்கு பெருமை சேர்த்ததுபோல், மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியர் மாநிலத்தில் முதலிடம்பெற்று பெருமை சேர்க்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட வீரபாண்டி ஏற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் துணை மேயர் பி.எம்.மன்னன் மற்றும் மண்டலத் தலைவர்கள், கல்விக்குழுத் தலைவர், கவுன்சிலர்கள், தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டனர்.

 


Page 106 of 111