Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

அரசுத் தேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்குப் பரிசு

Print PDF

தினமணி         25.06.2013

அரசுத் தேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்குப் பரிசு

ஆம்பூர் நகராட்சி 36-வது வார்டை சேர்ந்த அரசுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா அழகாபுரி நகராட்சி தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நகர்மன்ற உறுப்பினர் கே. மணி தலைமையில் நடைபெற்ற விழாவில், மாணவர்கள் கே. பாலாஜி, வி. ஆதித்யன் ஆகியோருக்கு பரிசு கேடயங்களை நகர்மன்றத் தலைவர் சங்கீதா பாலசுப்பிரமணி வழங்கினார் . இரு மாணவர்களுக்கும் தலா ரூ.1,000-த்தை தொழிலதிபர் ஹரிஹரன்-சித்ரா தம்பதி வழங்கினர்.

நகராட்சி ஆணையர் (பொறுப்பு) எல். குமார், வார்டில் உள்ள முக்கிய பிரமுகர்கள்  எஸ். வெங்கடேசன், ஸ்ரீதர், முருகன், மனோகரன் உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.

Last Updated on Tuesday, 25 June 2013 08:50
 

தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாநகராட்சிப் பள்ளிகளில் விளையாட்டுப் பூங்காக்கள்

Print PDF

தினமணி               19.06.2013

தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாநகராட்சிப் பள்ளிகளில் விளையாட்டுப் பூங்காக்கள்

தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாநகராட்சி தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் விளையாட்டுப் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

முதல்கட்டமாக தியாகராயநகர், சைதாப்பேட்டை உள்பட 10 மாநகராட்சிப் பள்ளிகளில் இந்தப் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், இன்னும் ஓரிரு நாள்களில் அப்பணிகள் முழுமையாக நிறைவடையும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் 30 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக விளையாட்டுப் பூங்காக்கள் அமைக்கப்படும் என மாநகராட்சிப் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி பள்ளிக்கு ரூ.2 லட்சம் செலவில், முதல்கட்டமாக 10 பள்ளிகளில் இந்த பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஜூலை மாத இறுதிக்குள் மீதமுள்ள 20 பள்ளிகளிலும் விளையாட்டுப் பூங்காக்கள் அமைக்கப்படும் என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறியது:

மாநகராட்சி பள்ளிகளை தரம் உயர்த்தும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எல்.கே,ஜி, யு.கே.ஜி வகுப்புகள் கொண்ட மாநகராட்சி மழலையர் பள்ளிகளில் தற்போது மாணவர்கள் அதிக அளவில் சேருகின்றனர். சைதாப்பேட்டையில் உள்ள பள்ளியில் இதுவரை 180 பேரும், அயனாவரத்தில் 50 பேரும் சேர்ந்துள்ளனர்.

என்னென்ன விளையாட்டு? மாநகராட்சி தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் விளையாட்டுப் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தனியார் பள்ளிகளுக்கு நிகராக "சறுக்கு விளையாட்டு', "ரோலர் கிளைடு', "ஊஞ்சல்', "டனல் விளையாட்டு', "ராக் வாக்', "ஸ்கொயர் கிளைம்பர்' உள்ளிட்ட விளையாட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல்கட்டமாக ஜோன்ஸ் சாலை, பிரகாசம் சாலை, கோபாலபுரம், கோட்டூர், திருவான்மியூர் உள்ளிட்ட 10 மாநகராட்சிப் பள்ளிகளில் இந்த விளையாட்டுப் பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் அவர்.

 

நகராட்சிப் பள்ளியில்...

Print PDF

தினமணி               18.06.2013 

நகராட்சிப் பள்ளியில்...

ஆம்பூர் பன்னீர்செல்வம் நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாதனூர் சரக உதவி தொடக்கக் கல்வி அலுவலர் டி. நடராஜன் தலைமை வகித்தார். வகுப்புகளை ஆம்பூர் நகர்மன்றத் தலைவர் சங்கீதா பாலசுப்பிரமணி தொடங்கிவைத்து, மாணவர்களுக்கு விலையில்லா கல்வி உதவிகளை வழங்கினார் .

பள்ளித் தலைமை ஆசிரியர் செ. ரவிச்சந்திரன், நகர்மன்ற உறுப்பினர் ஜான்சிராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 


Page 11 of 111