Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

கோவை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி

Print PDF

தினமலர் 03.11.2009

 

மாநகராட்சி பள்ளிக்கு புது மேசை, நாற்காலிகள்

Print PDF

தினமணி 3.11.2009

மாநகராட்சி பள்ளிக்கு புது மேசை, நாற்காலிகள்

திருப்பூர், நவ.2: மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகரா ட்சி பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் மேசை, நாற்காலிகளை டி.கே.ரங்கராஜன் எம்பி வழங்கி னார்.

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி மகளிர் மே.ப ள்ளியில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவிகளின் எண்ணிக்கை க்கு ஏற்ப இப்பள்ளியில் கட்டட வசதி களும், மேசை, நாற்காலிகளும் போதுமானதாக இல்லாமல் உள்ளது.

இந்நிலையில்,கடந்த ஆண்டு திருப்பூர் வந்திருந் த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜனி டம் பள்ளியின் நிலை குறித்து பெற்றோர் ஆசிரிய ர் கழக நிர்வாகிகள் விளக்கினர். இதையடுத்து மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.10 லட்சம் மதிப்பில் 177 ஜோடி மேசை, நாற்காலிகள் வரப்பெற்றன.

அவற்றை பள்ளிக்கு வழங்கும் விழா அப்பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடந்தது. பெற் றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜி.ரத்தினசாமி தலைமை தாங்கினார். தலைமையாசிரியை ஏவிஜயாஆனந்தம் வரவேற்றார்.

மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மேசை, நாற்காலிகளை பள்ளி தலைமை ஆசிரியை யிடம் ஒப்படைத்தார். திருப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் சி.கோவிந்தசாமி, மாநில பெற்றோர் ஆசிரியர் கழக பொதுக்குழு உறுப்பினர் ஏஈஸ்வரன்,உதவி தலைமையாசிரியை மேரி வினோபாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Tuesday, 03 November 2009 06:58
 

காரைக்குடியில் ஒரு முன்மாதிரி நகராட்சிப் பள்ளி

Print PDF

தினமணி 3.11.2009

காரைக்குடியில் ஒரு முன்மாதிரி நகராட்சிப் பள்ளி

காரைக்குடி, நவ. 2: பிரமாண்டமான கட்டடம், கல்லூரிக்கு இணையான ஆய்வகம், ஷூ, டை உள்ளிட்ட சீருடை என காரைக்குடி நகராட்சியின் நடுநிலைப் பள்ளியைப் பார்த்து பலர் வியந்து வருகின்றனர்.

காரைக்குடி செக்காலையில் ராம.சு. ராமநாதன் செட்டியார் நகர்மன்ற நடுநிலைப்பள்ளி உள்ளது. பள்ளியின் ஆசிரியர்களும், பெற்றோர்-ஆசிரியர் கழகமும் இணைந்து இப் பள்ளியை மெருகூட்ட முடிவெடுத்து 2மாதங்களுக்கு ஒரு முறை ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

சாதாரண கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள், கிழிந்த ஆடைகள், உடைந்த சிலேட்டுக்கள், சிதைந்த புத்தகப் பைகள் என வந்த இப் பள்ளியின் மாணவ, மாணவிகள் பலர் இப்போது முற்றிலும் மாறுபட்டு வரத் தொடங்கியுள்ளனர். பள்ளியின் சேர்க்கையும் அதிகரித்துள்ளது.

இப் பள்ளியின் சிறப்புகள் குறித்து தலைமையாசிரியர் ஆர். ரவீந்திரன் கூறியது:

1 முதல் 8 வரை வகுப்புகள் உள்ளன. மொத்தம் 590 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். 2 ஆசிரியர், 12 ஆசிரியைகள் உள்பட 14 பேர் பாடம் நடத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

இப் பள்ளியை 1932-ம் ஆண்டு ராமநாதன் செட்டியார் இலவசத் தொடக்கப்பள்ளியாகத் தொடங்கினார். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் இந்தப் பள்ளி வந்தது.கடந்த 2008-ம் ஆண்டுக்கு முன்னர் ஓட்டுக்கூடமாக சாதாரணக் கட்டடங்களாகத்தான் இருந்தன.

அண்ணாநகர், செக்காலை, பர்மா காலனி, வைரவபுரம், டி.டி. நகர், ரயில்வே குடியிருப்பு, கீழத்தெரு, போலீஸ் குடியிருப்பு என நகரின் பல பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் இங்கு படிக்கின்றனர்.

பெரும்பாலும் ஆட்டோ ஓட்டுநர், கூலித் தொழிலாளிகள் என சாதாரண நிலையில் உள்ள குழந்தைகள் இங்கு அதிகம் பயின்று வருகின்றனர்.

நகர்மன்றத் தலைவர் எஸ். முத்துத்துரை கூறியதாவது:

படிப்பில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு மாலை நேரத்தில் சிறப்பு வகுப்புகள் மூலம் பாடம் சொல்லித் தருகிறோம்.

இப் பள்ளி மாணவி ஆர். நந்தினி, விக்னேஷ் ராஜா இருவரும் சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்றுள்ளனர். இவர்களின் திறனைக்கண்டு கோல்டன் சிங்கார் சதுரங்கக் கழகம் இப் பள்ளியிலேயே மாணவ, மாணவிகளுக்கு பயிற்சியளிக்க முன்வந்திருக்கிறது.

காவல் துறை சார்பில் 150-ம் ஆண்டு விழா மாரத்தான் போட்டியில் இப் பள்ளி மாணவரே முதல் பரிசு பெற்றுள்ளார்.

தமிழில் அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளை 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்கள் எழுதி மாவட்ட அளவில் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

கல்லூரிக்கு இணையான எழுது பலகை, நவீன ஆய்வகம், கணினி ஆய்வகம், ஆடியோ, விடியோ வசதிகள், நவீன கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சர்வ சிக்ஷ அபியான் திட்டத்தின் கீழ் பல உபகரணங்கள் இப் பள்ளியில் இடம்பெற்றுள்ளன என்றார்.

விளையாட்டுத்திடல் தேவை. அதற்காக நகராட்சி நிர்வாகம் முயற்சி எடுத்து வருகிறது. நகரத்தின் நடுவே நகராட்சிப் பள்ளி தொடக்கப்பள்ளி, பின்னர் நடுநிலைப்பள்ளி என்ற நிலையை அடைந்திருக்கிறது. இது உயர்நிலைப் பள்ளியாக வளரவேண்டும் என்பதுதான் தங்களது ஆசை என்றார் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் ஏ. ஷேக்காதர் பாட்ஷா.

Last Updated on Tuesday, 03 November 2009 06:49
 


Page 100 of 111