Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

சென்னை மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளிகளில் 955 மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி மேயர் வழங்கினார்

Print PDF
தினத்தந்தி               08.07.2013

சென்னை மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளிகளில் 955 மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி மேயர் வழங்கினார்


சென்னை மாதவரம் நெடுஞ்சாலை மற்றும் மார்க்கெட் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 955 மாணவியர்களுக்கும் இலவச மடிக்கணினிகளை மேயர் சைதை துரைசாமி நேற்று வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில் மட்டும் விலையில்லா மடிக்கணினியை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கி வருகிறார். அவரது உத்தரவின்படி சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கல்வித்தரம் உயர்த்தும் வகையில் 27 வகையான சலுகைகள் பின்தங்கிய மாணவ–மாணவிகளுக்கு செய்யப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில் தான், விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் படிக்கின்ற மாணவர்களுக்கு விடுதியுடன் கூடிய பயிற்சி மையம் அண்ணா நகரில் திறக்கப்பட்டுள்ளது.இவ்வாறு மேயர் சைதை துரைசாமி பேசினார்.மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில், திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் வி.நீலகண்டன், துணை மேயர் பா.பெஞ்சமின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி துவக்கம்

Print PDF

தினமணி               27.06.2013

பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி துவக்கம்

குடியாத்தத்தை அடுத்த செருவங்கியில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி புதன்கிழமை துவக்கப்பட்டது.

 நகர்மன்றத் தலைவர் அமுதா சிவப்பிரகாசம் தலைமை வகித்து, ஆங்கிலவழிக் கல்வியை துவக்கி வைத்துப் பேசினார். கல்விக் குழுத் தலைவர் கௌரி மூவேந்திரன் குத்துவிளக்கேற்றினார்.

 பள்ளித் தலைமையாசிரியை எம். நாகலட்சுமி வரவேற்றார். வேளாண்மை கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவர் ஜே.கே.என்.பழனி, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் எம்.மைக்கேல்தாஸ், எஸ்.சுரேஷ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் கே.பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 கல்லப்பாடி பள்ளி: குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி புதன்கிழமை தொடங்கப்பட்டது.

 பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கே.வி. கோவிந்தசாமி தலைமை வகித்தார்.

 ஊராட்சித் தலைவர் ஹேமலதா கருணாநிதி குத்துவிளக்கேற்றி, ஆங்கில வகுப்பை தொடங்கி வைத்தார். தலைமையாசிரியை ஜி. சுஜாதா வரவேற்றார்.

 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் எம். மைக்கேல்தாஸ், எஸ். சுரேஷ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் கே. பாபு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
 

மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைய காரணம் என்ன? மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி விளக்கம்

Print PDF

தினத்தந்தி               27.06.2013

மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைய காரணம் என்ன? மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி விளக்கம்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் குறைந்ததற்கான காரணம் குறித்து சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி விளக்கம் அளித்தார்.

குடியிருப்புகள் மாற்றம்

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கேள்வி நேரத்தை தொடர்ந்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது அ.தி.மு.க. உறுப்பினர் நுங்கை மாறன் என்கிற சந்திரசேகரன் சென்னை மாநகராட்சியில் தொடக்கம் மற்றும் நடுநிலை பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை சற்று குறைவாக காணப்படுகிறது இதற்கு காரணம் என்ன? என்று வினா எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து மேயர் சைதை துரைசாமி பதில் அளித்து கூறியதாவது:–

கால்வாய்க்கரைக்கு அருகில் உள்ள பல குடியிருப்புகள் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதியில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் புதியதாக மாற்றப்பட்ட பகுதியில் தம் படிப்பினை தொடர்கின்றனர்.

ஆங்கில வழி கல்விக்கு ஆர்வம்

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்க ஆர்வமாக உள்ளதோடு மட்டுமின்றி கட்டணம் கட்டி படிக்க வைக்க ஆசைப்படுகின்றனர். பெரும்பாலான பெற்றோர்கள் தினக்கூலிகளாக பணிபுரிந்து வருவதால், அடிக்கடி தங்கள் குடியிருப்பை மாற்றுகின்றனர். இதுவே மாணவர்களின் சேர்க்கை குறைவதற்கு காரணமாக கருதப்படுகிறது.

மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க சென்னை மாநகராட்சி கல்வித்துறை பள்ளிகளில் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் விளையாட விளையாட்டு பூங்காக்கள் 30 பள்ளிகளில் நிறுவப்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Last Updated on Thursday, 27 June 2013 05:56
 


Page 10 of 111