Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

"ஆசிரியர்களின் முயற்சியால் நகராட்சி பள்ளிகளில் அதிக தேர்ச்சி விகிதம்'

Print PDF

தினமணி             27.09.2013

"ஆசிரியர்களின் முயற்சியால் நகராட்சி பள்ளிகளில் அதிக தேர்ச்சி விகிதம்'

ஆசிரியர்களின் முயற்சியால் தனியார் பள்ளிகளைக் காட்டிலும் நகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது என திருவள்ளூர் நகரத் தலைவர் ஏ.பாஸ்கரன் கூறினார்.

திருவள்ளூர் நகராட்சிப் பள்ளிகள் சார்பில் ஆசிரியர் தின விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவில் க.மு.ந.சகோரர்கள் நகராட்சிப் பள்ளியின் பெற்றோர்  -ஆசிரியர் கழகத் தலைவர் ஸ்ரீஃபன் சர்குனர் வரவேற்றார்.

க.மு.ந.சகோதரர்கள் கந்தசாமி, கதில்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் சம்மந்தம் கருத்துரை வழங்கினார்.

விழாவுக்கு தலைமை வகித்து திருவள்ளூர் நகரத் தலைவர் ஏ.பாஸ்கரன் பேசியது:

திருவள்ளூர் நகராட்சிப் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் சிற்பாக பணியாற்றி வருகின்றனர்.

திருவள்ளூர் நகராட்சிப் பள்ளியில் படித்த பல மாணவர்கள், நல்ல நிலையில் உள்ளனர். அதற்கு காரணம் சிறப்பாக வழிநடத்திய ஆசிரியர்கள்தான்.

கடந்த பொதுத்தேர்வுகளில் நகராச்சிப் பள்ளி மாணவர்கள் 80 சதவீதத்துக்கும் மேல் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த தேர்ச்சி விகிதம் திருவள்ளூரில் உள்ள பல தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அதிகம் என்றார் அவர்.

இதனைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

 

கல்விச் சுற்றுலா: மாநகராட்சி பள்ளி மாணவர்கள் வடமாநிலம் பயணம்

Print PDF

தினமணி             24.09.2013

கல்விச் சுற்றுலா: மாநகராட்சி பள்ளி மாணவர்கள் வடமாநிலம் பயணம்

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயின்று வரும் 50 மாணவர்கள் கல்விச் சுற்றுலாவாக மகாராஷ்டிரத்துக்கு புதன்கிழமை (செப்டம்பர் 25) செல்கின்றனர் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் அவ்வப்போது கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக பல்வேறு மாநகராட்சிப் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் 50 மாணவ, மாணவிகள் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

8 நாள் கல்விச் சுற்றுலாவில் மும்பை, புணே, அஜந்தா, எல்லோரா, ஒüரங்காபாத் ஆகிய பகுதிகளுக்கு சென்று வரலாற்று சிறப்புமிக்க இடங்களை மாணவர்கள் பார்வையிடவுள்ளனர். சுற்றுலா செலவுகளை மாநகராட்சியே ஏற்கும்.

கடந்த ஆண்டு 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், மாநகராட்சிப் பள்ளிகள் அளவில் முதல் 50 இடங்களைப் பிடித்த மாணவர்கள் இந்த சுற்றுலாவுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலாவுக்குத் தேர்வான மாணவர்கள், திங்கள்கிழமையன்று மேயர் சைதை துரைசாமியை சந்தித்தனர். பின்னர் அவர்களுக்கு சுற்றுலாவுக்கு துணிகள் எடுத்துச் செல்ல வசதியாக பைகள் வழங்கப்பட்டன.

இந்த சுற்றுலாவுக்காக மாநகராட்சி சார்பில் ரூ.4.83 லட்சம் செலவிடப்படுகிறது. 50 மாணவர்கள் 4 ஆசிரியர்கள் மற்றும் ஒரு உதவி கல்வி அலுவலர் சுற்றுலா செல்கின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

அதிக மதிப்பெண் பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவ–மாணவிகள் வட மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம்

Print PDF

மாலை மலர்             24.09.2013

அதிக மதிப்பெண் பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவ–மாணவிகள் வட மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம்
 
அதிக மதிப்பெண் பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவ–மாணவிகள் வட மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம்

சென்னை, செப். 24– சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

சென்னை மாநகராட்சி, கல்வித்துறை சார்பில் சென்னை பள்ளியில் 10வது வகுப்பு பயின்று 2013ஆம் ஆண்டு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று சென்னை பள்ளியில் 11–ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவ, மாணவிகளில் மாநகராட்சி அளவில் மதிப்பெண் தர வரிசை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தேசிய கல்வி சுற்றுலா மும்பை, ஒளரங்காபாத், அஜந்தா, எல்லோரா, பூனே போன்ற இடங்களுக்கு 25–ந்தேதி அன்று இரவு 10.30 மணியளவில் மும்பை ரெயில் ரெயில் மூலம் செல்ல உள்ளனர்.

இவர்கள் அக்டோபர் 2–ந்தேதி சென்னை திரும்ப உள்ளனர். இந்த மாணவ, மாணவிகளுடன் 4 ஆசிரியர்களும், உதவி கல்வி அலுவலர் ஒருவரும் செல்கிறார்கள்.

முதல்–அமைச்சரின் ஆணைக்கிணங்க, சென்னை மாநகராட்சி இந்த தேசிய சுற்றுலாவிற்காக 4 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் செலவிடுகிறது. இந்த தேசிய சுற்றுலா செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டட வளாகத்தில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தனது வாழ்த்துக்களை தெரிவித்து, சுற்றுலாவிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் துணை மேயர் பென்ஜமின், நிலைக்குழு தலைவர் (கல்வி) மகிழன்பன் மற்றும் மாநகராட்சி கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 


Page 6 of 111