Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

பிளஸ்டிக் தார் ரோடு

Print PDF

தினமலர் 05.09.2009

 

திருச்சி மாநகராட்சி பகுதியில் சாலைகளை மேம்படுத்த புதிய திட்டம் தயாராகிறது

Print PDF

மாலை மலர் 17.08.2009

திருச்சி மாநகராட்சி பகுதியில் சாலைகளை மேம்படுத்த புதிய திட்டம் தயாராகிறது : "சர்வே" எடுக்கும் பணி தொடங்கியது

திருச்சி, ஆக.17-

திருச்சி மாநகராட்சியில் தற்போது சுமார் 9 1/2 லட்சம் மக்கள் உள்ளனர். நாளுக்கு நாள் மக்கள் தொகை மற்றும் கட்டிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதற்கேற்ப அடிப்படை வசதிகள் தேவையும் அதிகரித்து வருகிறது. எனவே திருச்சி மாநகராட்சி சார்பில் ரூ.100 கோடியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் திட்டம் மற்றும் ரூ.160 கோடியில் ஒருங்கிணந்த கூட்டு குடிநீர் மேம்பாட்டு திட்டம் போன்ற பணிகள் செய்யப்பட உள்ளன.

இந்த நிலையில் திருச்சி மக்களின் தேவைகளை கண்டறிந்து மேலும் முழு அளவிலான தேவை களை நிறைவேற்றும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. உலக வங்கி உதவியுன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

குடிநீர் விநியோகம் சுகாதாரம் கழிவுநீர் சுத்திகரிப்பு மழைநீர் வடிகால் சாலைகள் போன்ற வசதிகள் இத்திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்பட உள்ளன.

இதற்காக தற்போது கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிந்ததம் திட்டம் தயாரிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.

இந்த திட்டம் இந்தியாவில் 25 மாநகரா¢ட்சிகளில் மட்டும் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் திருச்சி மாநகராட்சி இத்திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

இத்திட்டம் குறித்து அதிகாரிகள் சவுமியா ஆசிஷ்ராவ், திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்லகிருஷ்ணன் ஆகியோர் மாநகராட்சி மேயர் சுஜாதா கமிஷனர் பால்சாமி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

 

ரூ.83 லட்சத்தில் சாலை அமைப்பு பணி

Print PDF

தினமணி 01.08.2009

ரூ.83 லட்சத்தில் சாலை அமைப்பு பணி

புதுச்சேரி, ஜூலை 31: புதுச்சேரி உழவர்கரை தொகுதியில் ரூ.83 லட்சம் செலவில் சிமென்ட் மற்றும் தார் சாலை அமைக்கும் பணியினை உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

ஒதியம்பட்டு, நமச்சிவாயம் நகர், திரிவேணி நகர், சுல்தான்பேட்டை, முஹம்மதியநகர் ஆகிய பகுதிகளில் ரூ.83 லட்சம் செலவில் சிமென்ட் சாலை மற்றும் தார் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது.

ஒதியம்பட்டு, அண்ணா நகர் சிமென்ட் சாலை மற்றும் பக்க வாய்க்கால் அமைக்கும் பணி ரூ.14.4 லட்சம் செலவிலும், மணவெளி, நமசிவாயம் நகர் தார்சாலை அமைக்கும் பணி ரூ.9.97 லட்சம் செலவிலும், மணவெளி பாரதிதாசன் நகர் தார் சாலை அமைக்கும் பணி ரூ.9.19 லட்சம் செலவிலும், திரிவேணி நகர் இரண்டு பகுதிகளில் தார் சாலை அமைக்கும் பணி ரூ.26.99 லட்சம் செலவிலும், சுல்தான்பேட்டை முஹம்மதியா நகரில் ரூ.23 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணிகள் உள்ளிட்ட ஐந்து திட்டப் பணிகளை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் தனித் தனியாக தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய முதன்மை செயல் அதிகாரி கலைமாறன், இளநிலைப் பொறியாளர் சுதர்சனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 


Page 164 of 167