Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

ஆத்தூர் பேருந்து நிலையத்தில் கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை

Print PDF

தினமணி              31.12.2013

ஆத்தூர் பேருந்து நிலையத்தில் கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை

ஆத்தூர் பேருந்து நிலையத்தில் ரூ.1.50 கோடியில் கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜைநடைபெற்றது.

ஆத்தூர் பேருந்து நிலையம் கடந்த 2001- ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

இங்கு போடப்பட்டிருந்த தார்ச் சாலை பழுதடைந்து பேருந்து நிலையம் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், ஓட்டுநர்களும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டனர்.

இந்த நிலையில், பேருந்து நிலையத்தில் ரூ.1.50 கோடியில் கான்கீரிட் சாலை அமைக்க திங்கள்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

இதில் ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். மாதேஷ்வரன், நகர்மன்றத் தலைவர் பி.உமாராணி பிச்சைக்கண்ணன், துணைத் தலைவர் அ.மோகன், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஜெகதீஸ்வரி, நகர்மன்ற உறுப்பினர்கள் டி.எம். ராமலிங்கம், முஸ்தபா, குணசேகர், நடராஜ், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

ஹைவேவிஸ் மலைச் சாலையை சீரமைக்க ரூ.86 கோடியில் திட்டம்

Print PDF

தினமணி              30.12.2013

ஹைவேவிஸ் மலைச் சாலையை சீரமைக்க ரூ.86 கோடியில் திட்டம்

ஹைவேவிஸ் மலைச்சாலையை சீரமைக்க ரூ.86 கோடியே 60 லட்சத்தில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளதாக உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    சின்னமனூர் அருகே உள்ள  மேற்கு தொடர்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு உட்பட்ட 7  மலைகிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு  செல்லும் சாலை மோசமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டன. சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் அதிர்ஷ்ட வசமாக 22 பயணிகள் உயிர்தப்பினர். இதைத் தொடர்ந்து இங்குள்ள பொதுமக்கள் மற்றும் தோயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கடந்த சில நாள்களுக்கு முன் போரட்டத்தில் ஈடுபட்டனர். 3-ஆவது நாளாக போராட்டம் தொடர்ந்த நிலையில் கோட்டாட்சியர், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர், தாசில்தார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சாலையை விரைவில் சரிசெய்வதாக உறுதியளித்தனர். இதைதொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

 இதன்படி உத்தமபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி கூட்டம் நடந்தது. மலைச்சாலையை சீரமைக்க ரூ. 86 கோடியே 60 லட்சத்தில்  உத்தேச திட்ட மதிப்பீடு செய்யபட்டுள்ளதாகவும், நிதி வந்தவுடன் 2மாத காலத்துக்குள் தார் சாலை போடப்படும் எனவும், தாற்காலிக நடவடிக்கையாக பெரிய பள்ளங்களில் கற்களைப் போட்டு சரிசெய்யும் பணி 15 நாள்களில் முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும்  இப்பணியில் நெடுஞ்சாலைத்துறையினருக்கு ஹைவேவிஸ் பேரூராட்சி நிர்வாகம், தனியார் தேயிலைத் தோட்ட நிர்வாகம் மற்றும் பொதுமக்கள்  ஒத்துழைப்புகொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

உத்தமபாளையம் கோட்டாட்சியர் ஜானகி தலைமையில் நடந்த கூட்டத்திற்கு, தாசில்தார் தனலிங்கம், சின்னமனூர் காவல் துறைஆய்வாளர் வினோஜி, உதவி செயற்பொறியாளர் குமணன் (நெடுஞ்சாலை துறை), ஹைவேவிஸ் பேரூராட்சி செயல் அலுவலர் மனோரஞ்சிதம், தேயிலைத் தோட்ட நிர்வாகம் சார்பாக ஏ.ஜி.எம். ரஞ்சித்,எச்.ஆர்.பால்பாண்டியன், சுரேஷ் ஆகியோரும், தொழிற்சங்கம் சார்பாக எச்.எம்.எஸ்.முத்தையா, ஐ.என்.டி.யு.சி.முனீஸ்வரன், ஏ.டி.பி.சஞ்சிவிபாண்டி, எல்.பி.எப்.மனோகரன் மற்றும் பொதுமக்கள் சார்பாக சசிகுமார், மாரியப்பன், அஞ்சப்பன் கலந்துகொண்டனர்.

 

சாலை மேம்பாட்டுப் பணிக்கு பூமிபூஜை

Print PDF

தினமணி              30.12.2013

சாலை மேம்பாட்டுப் பணிக்கு பூமிபூஜை

கரூரில் ரூ. 2.93 கோடியில் நடைபெறவுள்ள சாலை மேம்பாட்டு பணிக்கான பூமிபூஜையை போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.

கரூர் வட்டம் புலியூர் பேரூராட்சியில் ரூ. 1.70 கோடியில் வீரராக்கியம் முதல் சுக்காலியூர் வரை சாலை மேம்பாட்டுப் பணி, அப்பகுதியில் 3 சிறுபாலங்கள் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற உள்ளன. பாலராஜபுரம் ஊராட்சியில் ரூ. 1.23 கோடியில் சிறுபாலம் கட்டுதல் மற்றும் 1.5 கி.மீ. தொலைவில் சாலை அமைத்தல் என மொத்தம் ரூ. 2.93 கோடியில் பணிகள் நடைபெற உள்ளன.

இதற்காக நடைபெற்ற பூமிபூஜை நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மு. அருணா தலைமை வகித்தார். கரூர் எம்.பி. தம்பிதுரை, கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ  செ. காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் ரவிகார்த்திகேயன், செயற்பொறியாளர்கள் ஜெய்குமார், பாலசுப்ரமணி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 


Page 11 of 167