Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

திண்டுக்கல்-நத்தம் ரோட்டில் ரூ.10 லட்சத்தில் தெருவிளக்குகள்

Print PDF

தினமலர்                03.01.2014

திண்டுக்கல்-நத்தம் ரோட்டில் ரூ.10 லட்சத்தில் தெருவிளக்குகள்

திண்டுக்கல்: பழநி பாதையாத்திரை பக்தர்கள் வசதிக்காக, திண்டுக்கல் நகராட்சியில் உள்ள தெருவிளக்குகளை மாற்றுவதற்கு ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் நகராட்சியில் குள்ளனம்பட்டி-நத்தம் ரோடு, ஆர்.எஸ்., ரோடு, நாகல் நகர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அதிக வாகனங்கள் செல்கின்றன.

போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அந்த ரோடுகள் அகலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ரோடுகளின் ஓரங்களில் இருந்த 75 தெருவிளக்கு கம்பங்கள் மாற்றிமைக்கப்பட்டன. இதில், 25 மின்கம்பங்களில் 40 வாட்ஸ் குழல் விளக்குகளும், 50 கம்பங்களில் 1.50 வாட்ஸ் சோடியம் விளக்குகளும் எரிந்து வருகின்றன. ரோடுகள் அகலப்படுத்தப்பட்டதால், தெருவிளக்குகளின் வெளிச்சம் போதியளவில் இல்லை.

இதனால், வாகனஓட்டிகளும், பொதுமக்களும் சிரமமடைந்து வருகின்றனர். ஜன.,11ல் தைப்பூச விழா துவங்க உள்ளநிலையில், சிவகங்கை, திருப்புத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, மேலூர், நத்தம் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பாதையாத்ரை பக்தர்கள் இந்த வழியாக தான், பழநி கோயில் செல்ல உள்ளனர். இதையடுத்து, தைப்பூச விழாவிற்கு முன்னதாக, தெருவிளக்குகளில் 220 வாட்ஸ் திறனுள்ள மின் சேமிப்பு விளக்குகளை பொருத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த விளக்குகளை வாங்குவதற்காக, ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

ரூ. 570 கோடியில் சாலைகள் சீரமைக்கப்படும்

Print PDF

தினமணி                 03.01.2014

ரூ. 570 கோடியில் சாலைகள் சீரமைக்கப்படும்

பெங்களூருவில் ரூ. 570 கோடியில் சாலைகள் சீரமைக்கப்படும் என்று,  கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

இதுகுறித்து பெங்களூரு கிருஷ்ணா அரசு இல்லத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

பெங்களூருவில் பலத்த மழை பெய்ததால் சாலைகள் சேதமடைந்துள்ளன. இந்தச்சாலைகளை ரூ. 570 கோடியில் சீரமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்கானப் பணிகள் ஏப்ரல், மே மாதங்களில் நிறைவடையும்.

ஏற்கெனவே, சேதமடைந்த 22 சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. மேலும் 26 சாலைகளின் சீரமைப்புப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. மேலும், 70 சாலைகளில் பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள குழிகளை மூடுவதற்கு 3 கட்டங்களாக தலா ரூ. 100 கோடி ஒதுக்கப்படும்.

குழிகளை மூடும் இயந்திரம் குறித்து புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்படும் என்றார் அவர்.

 

மொடக்குறிச்சியில் ரூ.92 லட்சத்தில் தார் சாலைப் பணி

Print PDF

தினமணி                 03.01.2014

மொடக்குறிச்சியில் ரூ.92 லட்சத்தில் தார் சாலைப் பணி

மொடக்குறிச்சியில் ரூ.92 லட்சம் மதிப்பிலான தார் சாலைப் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது.

மொடக்குறிச்சி பேரூராட்சி 1-வது வார்டு பகுதியில் அவல்பூந்துறை சாலை முதல் நடுப்பாளையம், புதுக்காலனி, தெற்குமேடு, ஊஞ்சப்பாளையம் வழியாக முத்தூர் மெயின் ரோடு வரை நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.80 லட்சம் மற்றும் பொது நிதி ரூ.12 லட்சம் ஆக மொத்தம் ரூ.92 லட்சம் மதிப்பிலான 2.4 கி.மீ.க்கு புதிய தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

தலைவர் தங்கவிலாஸ் மோகன் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் மணி (எ) சிவசுப்பிரமணி, மொடக்குறிச்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி 1வது வார்டு கவுன்சிலர் துரைசாமி வரவேற்றார். மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. ஆர்.என். கிட்டுசாமி கலந்துகொண்டு பணிகளை தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர் குருமூர்த்தி, ஈரோடு ஆவின் இயக்குநர் அசோக், பேரூராட்சி துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி ரவி, அதிமுக பேரூர் செயலாளர் மயில்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.பேரூராட்சி செயல் அலுவலர் எஸ்.தேவா நன்றி கூறினார்.

 


Page 10 of 167