Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

ரூ.1.14 கோடியில் சாலை மேம்பாடு

Print PDF

தினமணி             25.01.2014 

ரூ.1.14 கோடியில் சாலை மேம்பாடு

நாமக்கல் நகரில் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கம் மேம்படுத்தும் பணியை சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் தொடக்கிவைத்தார்.

ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நாமக்கல் ரங்கர் சன்னதி முதல் சேந்தமங்கலம் சாலை மின் மயானம் வரை ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் தார்ச் சாலை அகலப்படுத்தி மேம்படுத்தப்பட உள்ளது.

இதற்கான பணிகளை நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் வியாழக்கிழமை பூமி பூஜை செய்து தொடக்கிவைத்தார். மேலும், பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் விரைவாகவும், தரமாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் ஒப்பந்ததாரர்களை கேட்டுக் கொண்டார்.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.காந்திமுருகேசன், நகரக் கூட்டுறவு வங்கித் தலைவர் காளியப்பன், நகர்மன்றத் தலைவர் ஆர்.கரிகாலன், நகர்மன்றத் துணைத் தலைவர் கே.சேகர், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு இணைச் செயலர் லியாகத்அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

மெரீனா சாலையை அழகுபடுத்த ரூ.33 கோடி

Print PDF
தினமணி             25.01.2014

மெரீனா சாலையை அழகுபடுத்த ரூ.33 கோடி


ரூ. 33.10 கோடி செலவில் மெரீனா கடற்கரை சாலையை அழகுப்படுத்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்: மெரீனா காமராஜர் சாலையின் மேற்குப் பகுதியில் அகில இந்திய வானொலி நிலையம் முதல் சிவானந்தா சாலை வரையில் உள்ள சாலையோர பழைய சுற்றுச்சுவர்களை அகற்றி வரலாற்று நினைவுத் தூண்கள், வாயிற் கதவுகள் கொண்டு புதுப்பிக்கப்படும்.

மேலும், கிராணைட் கற்கள் மற்றும் கிரானைட் தூண், துருப்பிடிக்காத ஸ்டீல் கைப்பிடியுடன் பாதசாரிகள் நடைபாதை அமைக்கப்படும்.

இதற்கு மொத்தம் ரூ.33.10 கோடி ஆகும். இந்த பணிக்கான ஒப்பந்தம் கோருவதற்கும் அனுமதியளித்து 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

மாநகராட்சி 4வது மண்டலத்தில் ரூ2.28 கோடியில் தார்ச் சாலை

Print PDF

தினகரன்            24.01.2014

மாநகராட்சி 4வது மண்டலத்தில் ரூ2.28 கோடியில் தார்ச் சாலை

ஈரோடு, : ஈரோடு மாநகராட்சி 4வது மண்டல பகுதியில் தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு சேவை நிதி கழகத்தின் சார்பில் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டப்பணியால் மோசமான நிலையில் உள்ள ரோடுகளை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி 46வது வார்டு பகுதியில் சரவணபவ நகர் பகுதியில் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பாரதிபாளையம் முதல் வீதி, நல்லத்தம்பி நகர் ஆகிய பகுதிகளில் 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், திருவள்ளுவர் நகர், நிட்இந்தியா ரோடு ஆகிய பகுதிகளில் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட் டிலும் சாலைகள், மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படவுள்ள.

 47வது வார்டு வசந்தம் நகர் பகுதியில் 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டி லும், பாரதிநகர் முதல்வீதி, 2வது வீதியில் 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பாரதிநகர் 3வது வீதி, 7வது வீதி ஆகிய பகுதிகளில் 34 லட்சம் ரூபாய் மதிப் பீட்டிலும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

4வது மண்டல பகுதியில் உள்ள இருவார்டுகளிலும் 2.28 கோடி ரூபாய் மதிப் பீட்டில் தார்சாலைகள், மழைநீர்வடிகால் அமைத் தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி பாரதிபாளையத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் தலைமை தாங்கி பணியைத் தொடங்கி வைத்தார். துணை மேயர் பழனிச்சாமி, மண்டலக்குழு தலைவர்கள் காஞ்சனா பழனிச்சாமி, மனோகரன், ஆணையாளர் விஜயலட்சுமி, பொறியாளர் ஆறுமுகம், உதவி ஆணை யர் விஜயகுமார், கவுன்சிலர்கள் ஈஸ்வரமூர்த்தி, எம்.கே.ராஜா, கவிதாரமேஷ், சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 6 of 167