Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Finance

ஒசூர் புதிய பஸ் நிலைய கடைகளுக்கு செப். 25-ல் ஏலம்

Print PDF

தினமணி 23.09.2009

ஒசூர் புதிய பஸ் நிலைய கடைகளுக்கு செப். 25-ல் ஏலம்

ஒசூர், செப். 22: ஒசூர் புதிய பஸ் நிலைய கடைகளுக்கு ஏலம் செப். 25-ம் தேதி நடைபெறுகிறது. இப்புதிய பஸ் நிலையம் மூலம் நகராட்சிக்கு ரூ.3 கோடி வருவாய் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

ரூ.8 கோடியில் கட்டப்பட்டு வரும் ஒசூர் புதிய பஸ் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நவம்பர் மாதம் இறுதியில் முடிவடைந்து, புத்தாண்டுக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பஸ் நிலையத்தில் 76 பஸ்கள் ஒரே நேரத்தில் நிற்கும் வகையிலும், நகர பஸ்கள் வந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

புதிய பஸ் நிலையத்தில் கீழ் தளத்தில் 29 கடைகளும், முதல் தளத்தில் 47 கடைகளும் 2 உணவு விடுதிகளும் கட்டப்பட்டுள்ளன.

இந்தக் கடைக்கான ஏலம் வரும் செப்.25-ல் ஒசூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் என நகராட்சி ஆணையர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

கீழ் தளத்தில் உள்ள ஒரு கடை ஏலத்தில் எடுக்க ரூ.10 லட்சம் மதிப்பிலான சொத்து மதிப்புச் சான்று பெற்றிருக்க வேண்டும், கடைக்கு முன் வைப்புத் தொகை ரூ.4 லட்சம் செலுத்த வேண்டும். ஒரு வருட கடை வாடகையாக குறைந்தபட்சம் ரூ.60 ஆயிரம் முன்தொகை செலுத்த வேண்டும், இதற்கு மேல் ஏலம் கோரலாம் என ஏல நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேல் தளத்தில் உள்ள கடைகளுக்கு இந்தத் தொகையில் 80 சதவிகித வைப்புத் தொகை மற்றும் வாடகை செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதனால் ஒசூர் நகராட்சிக்கு நிரந்தர வைப்புத் தொகையால் ரூ.2 கோடி வருவாய் கிடைக்கும் என்றும் கடை வாடகை, பஸ் நுழைவுக் கட்டணம், கழிவறைகள் ஏலம், வாகனங்கள் நிறுத்துமிட வாடகை உள்ளிட்டவற்றால் ரூ.1 கோடி வரை வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளதாக நகராட்சி அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன.

Last Updated on Wednesday, 23 September 2009 06:19
 

நிதிப் பற்றாக்குறையால் முடங்கும் நகராட்சி

Print PDF

தினமணி 18.09.2009

நிதிப் பற்றாக்குறையால் முடங்கும் நகராட்சி

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம், செப். 17: ஊழியர்கள் மற்றும் நிதிப் பற்றாக்குறை காரணமாக சிதம்பரம் நகராட்சியில் குப்பை அகற்றுதல், குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்குகள் பராமரித்தல் உள்ளிட்ட அடிப்படை பணிகளை சரிவர செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

புகழ்பெற்ற நடராஜர் ஆலயமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் அமைந்துள்ள சிதம்பரம் நகரின் மக்கள்தொகை சுமார் 60 ஆயிரம். தினமும் 40 ஆயிரம் பேர் இங்கு வந்து செல்கின்றனர்.

இந் நகரில் 33 வார்டுகள் உள்ளன. சிதம்பரம் நகராட்சியில் துப்புரவுத் தொழிலாளர்கள் 140-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தனர். ஆனால் தற்போது 96 பேர் மட்டுமே உள்ளனர்.

அவ்வப்போது காலியாகும் பணியிடங்கள் நிரப்பப்படாததால் இந்த நிலை.

இதனால் நகரில் சேகரமாகும் குப்பைகளை அவ்வப்போது அகற்ற போதிய ஊழியர்கள் இல்லை.

இதுகுறித்து பாமக நகர்மன்ற உறுப்பினர் ஏ.ரமேஷ் கூறுகையில், ""ஆயிரம் பேருக்கு 4 துப்புரவுத் தொழிலாளர்கள் தேவை. இதன்படி சிதம்பரம் நகராட்சியில் 400 தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும். குறைந்தபட்சம் 200 பணியாளர்களாவது இருக்க வேண்டும்'' என்றார்.

பொறியாளர் பிரிவில் பொறியாளர், உதவிப்பொறியாளர், தொழில்நுட்ப அலுவலர் உள்பட 4 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர்.

குழாய் பணியாளர் பணியிடம்-1, தலைமை நிலைய ஆய்வாளர் பணியிடம்-5, பிட்டர் பணியிடம்-1, வயர்மேன் பணியிடம்-1, எலக்ட்ரீஷியன் பணியிடம்-2 ஆகியவை காலியாக உள்ளன.

அலுவலகப் பிரிவில் இளநிலை உதவியாளர் பணியிடம்-4, வருவாய் உதவியாளர் பணியிடம்-5, தட்டச்சர் பணியிடம்-1, பதிவறை எழுத்தர் பணியிடம்-1 ஆகியவை காலியாக உள்ளன.

பொது சுகாதாரப் பிரிவில் துப்புரவுத் தொழிலாளர்கள் பணியிடம்-37, துப்புரவு மேற்பார்வையாளர் பணியிடம்-3, மகப்பேறு மருத்துவமனை உதவியாளர்கள் பணியிடம்-3, இரவுக் காவலர் பணியிடம்-1, அலுவலக உதவியாளர் பணியிடம்-2 ஆகியவை காலியாக உள்ளன.

குப்பை அள்ளும் லாரிகளுக்கு நிரந்தர ஓட்டுநர்கள் கிடையாது. தாற்காலிக ஓட்டுநர்கள் நியமிக்கப்பட்டு லாரிகள் இயக்கப்படுகின்றன.

இவ்வாறு சிதம்பரம் நகராட்சியில் மொத்தம் 68 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இவை நிரப்பப்படாததால் எந்தப் பணிகளையுமே சரிவர மேற்கொள்ள முடியாமல் நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது.

நகராட்சியின் ஆணையர் ஜான்சன் கூறுகையில், ""நகராட்சியின் மாத வருமானத்தில் 49 சதவிகிதம்தான் ஊழியர்கள் சம்பளமாக வழங்கப்பட வேண்டும் என்று அரசாணை உள்ளது.

தற்போது நகராட்சியின் வருமானம் குறைந்து போனதால் மேற்கண்ட அரசாணைப்படி காலிப் பணியிடங்களை நிரப்ப இயலவில்லை'' என்றார்.

மூன்றரை கோடி வரிபாக்கி

சிதம்பரம் நகராட்சிக்கு சேரவேண்டிய சொத்துவரி குறித்த வழக்குகள் பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இதனால் லாட்ஜ், திருமண மண்டபங்களின் சொத்து வரி பாக்கி ரூ. மூன்றரை கோடி நிலுவையில் உள்ளது.

ஆள் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கும் சிதம்பரம் நகராட்சி நிர்வாகத்தை சீரமைக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களின் கோரிக்கையாகும்.

 

நல்லூர் நகராட்சிக்கு ரூ.7.79 லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினமணி 17.09.2009

நல்லூர் நகராட்சிக்கு ரூ.7.79 லட்சம் ஒதுக்கீடு

திருப்பூர், செப்.16: 12-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் நல்லூர் நகராட்சிக்கு ரூ.7.79 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ள்ளது. இத்தொகைக்கான பணிகள் செய்வது குறித்து புதன்கிழமை நகர்மன்ற ஒப்புதல் பெறப்பட்டன.

நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவுப்படி 2009-10-ம் ஆண்டில் 12-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் முதல் தவணையாக நல்லூர் நகராட்சிக்கு ரூ.7 லட்சத்து 79 ஆயிரத்து 715 ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

இதில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.4.50 லட்சம் மதிப்பில் 9 கன்டெய்னர்கள் வாங்கப் பட உள்ளன. சாலை மற்றும் வடிகால் மேம்பாட்டு திட்ட த்தின் கீழ் மாநகராட்சி 12-வது வார்டு என்எம்பி நகர் முதல் வீதிக்கு ரூ.3.70 லட்சம் மதிப்பில் தார்தளம் அமைக்கப்பட உள்ளது.

மேலும் கணிப்பொறி மற்றும் மின்கட்டண பயன்பாட்டு திட்டத்தின் கீழ் நல்லூர் நகராட்சி மின் பயன்பாட்டு கட்டணமும் செலுத்தப்பட உள்ளன. இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை போக கூடுதலாக ஆகும் செலவினங்களுக்கு நகராட்சி பொதுநிதியிலிருந்து ஈடுசெய்யப்பட உள்ளது.

இதற்கு நகர் மன்ற அனுமதி பெறுவது குறித்து நகர் மன்றத் தலைவர் ஜி.விஜயலட்சுமி தலைமையில் புதன் கிழமை நடந்த நல்லூர் நகராட்சி கூட்டத்தில் ஒப்புத லுக்கு வைக்கப்பட்டது. அதற்கு நகர்மன்ற உறுப்பினர் கள் ஒப்புதல் தெரிவித்ததை அடுத்து தீர்மானம் நிறை வேற் றப்பட்டது. இதுதவிர மொத்தம் 80 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகர்மன்ற துணைத்தலைவர் ஜே.நிர்மலா, செயல் அலுவ லர் அண்ணாமலை பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 17 September 2009 05:52
 


Page 33 of 37