Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Finance

மேலும் 39 மாநகராட்சி கடைகள் ஏலம் விட ஏற்பாடு

Print PDF

தினமலர் 02.03.2010

மேலும் 39 மாநகராட்சி கடைகள் ஏலம் விட ஏற்பாடு

மதுரை : மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான மேலும் 39 கடைகள், நாளை ஏலம் விடப்படுகின்றன.மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட், மேலவெளி வீதி, மங்கம்மாள் சத்திரம், தமிழ்ச்சங்கம் ரோடு, கான்சா மேட்டு தெரு, ஜான்சிராணி பூங்கா, நன்மை தருவார் கோயில் தெரு, எழுத்தாணிக்காரத் தெரு, மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில், முன்பு கட்டப்பட்ட 80 மாநகராட்சி கடைகள் உள்ளன.

இவற்றை நடத்தியவர்களில் பலர் எங்கு இருக்கின்றனர் என தெரியவில்லை. பல கடைகளுக்கு பல ஆண்டுகளாக வாடகை வரவில்லை. இக்கடைகளை அருகில் இருந்த மற்ற கடைக்காரர்கள் பயன்படுத்தினர். இக்கடைகளை மீண்டும் ஏலத்திற்கு விட மாநகராட்சி முடிவு செய்தது. ஒவ்வொரு கடைக்கும் அளவைப் பொறுத்து, ஒரு லட்சம் ரூபாய் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் டெபாசிட் தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டது. இவற்றில் 70 கடைகளுக்கு பிப்.23 ஏலம் விடப்பட்டது.

ஏலம் விடப்பட்ட கடைகள் மூலம், மாநகராட்சிக்கு 55 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது. ஏலம் போகாதவை உள்பட மீதி 39 கடைகளுக்கு நாளை ஏலம் நடக்கிறது. இக்கடைகளுக்கு செலுத்தப்படும் "டெபாசிட்' தொகை மூலம், 39 லட்சம் ரூபாயும், வாடகையாக மாதம் 2 லட்சம் ரூபாயும் மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated on Tuesday, 02 March 2010 06:29
 

பேராவூரணி பேரூராட்சி வளர்ச்சிப்பணிகளுக்காக ரூ.25 கோடி நிதி

Print PDF

தினமலர் 18.02.2010

பேராவூரணி பேரூராட்சி வளர்ச்சிப்பணிகளுக்காக ரூ.25 கோடி நிதி

பேராவூரணி : பேராவூரணி பேரூராட்சி வளர்ச்சிப்பணிகளுக்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பேரூராட்சித் தலைவர் அசோக்குமார் தெரிவித்தார்.இது குறித்து அவர் கூறியதாவது:பேராவூரணி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும், குடிநீர் வழங்கல் மேம்பாடு, சுகாதார மேம்பாடு, மழைநீர் வடிகால் மேம்பாடு, திடக்கழிவு மேலாண்மை. போக்குவரத்து மேலாண்மை, தெருவிளக்கு மேம்பாடு, குடிசைப்பகுதி மேம்பாடு மற்றும் நகர்புற வறுமைக் குறைப்பு திட்டம் உட்பட பணிகளை ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில் ரூபாய் 24.90 கோடி மான்யத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பேராவூரணி நகர வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்த முதல்வர் கருணாநிதிக்கும், மத்திய அமைச்சர் பழனிமாணிக்கத்துக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. பணிகள் நிறைவுறும் நிலையை பொறுத்து மேலும் நிதி வழங்கப்படும். இதற்கான பங்குத்தொகை 10 சதவீததத்தை பேரூராட்சி நிர்வாகம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அசோக்குமார் கூறினார்.பேரூராட்சி நிர்வாக அதிகாரி ஜனார்த்தனன், அலுவலர் சேஷாத்ரி ஆகியோர் உடன் இருந்தனர்.

 

வழிபாட்டு தலங்கள் ,6 சுற்றுலா தலங்களில் பிளாஸ்டிக் பயண்பாடு ஒழிக்க ரூ 30 லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினமலர் 30.12.2009

வழிபாட்டு தலங்கள் ,6 சுற்றுலா தலங்களில் பிளாஸ்டிக் பயண்பாடு ஒழிக்க ரூ 30 லட்சம் ஒதுக்கீடு

கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் உள்ள 9 வழிபாட்டு தலங்கள் மற்றும் 6 சுற்றுலா தலங்களில்,பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முழுவதுமாக ஒழிக்க தமிழக அரசு 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது என்று மாவட்ட மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கிருபானந்த ராஜன் தெரிவித்தார்.சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் சுற்றுச் சூழல் நலனை கருத்தில் கொண்டு பிளாஸ்டடிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி டவுண் பஞ்.,க்கு உட்பட்ட பகுதிகளில் தாராளம் பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்தில் உள்ளன. இதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் பஞ்.,நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கன்னியாகுமரி விவேகானந்தபுரம் ஜங்சனில் நேற்று நடந்தது.நிகழ்ச்சிக்கு மாவட்ட மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கிருபானந்த ராஜன்,மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரி அரிராதா கிருஷ்ணன்,கன்னியாகுமரி டவுன் பஞ்., செயல் அலுவலர் ராசையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் புத்தளம் எல்.எம்.பி.சி பள்ளி என்.எஸ்.எஸ் மாணவர்கள் கலந்து கொண்டு சுற்றுலா வரும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்த கையேடுகளை வழங்கினர்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கிருபானந்த ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது;தமிழ்நாட்டில் பழனி,வேளாங்கண்ணி,மதுரை,திருத்தணி,திருச்செந் தூர்,திருவண்ணாமலை,திருவாரூர்,நாகூர்,ராமேஸ்வரம் ஆகிய 9 வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கன்னியாகுமரி,குற்றாலம்,கொடைக்கானல், ஊட்டி,ஏற்காடு,மாமல்லபுரம் ஆகிய 6 சுற்றுலா தலங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முழுவதுமாக கட்டுப்படுத்த தலா 2 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த தொகை அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைக்க, சுற்றுலா பயணிகள் அறியும் வகையில் பிளாஸ்டிக் கப்,கேரி பேக் ஆகியவற்றிற்கு மாற்றுப் பொருளாக பேப்பர் மற்றும் அட்டைகளால் தயாரிக்கப்பட்ட கப்,கேரி பேக் ஆகியவற்றை கடைகளில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.பஞ்.,கள்,மாநக ராட்சிகள் மற்றும் நகராட்சி நிர்வாகங்கள் சார்பில் போடப்பட்டுள்ள தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்த தொகை செலவிடப்படும்.

குமரி மாவட்டத்தில் மாவட்ட டி.ஆர்.,சுற்றுலா அலுவலர்,பஞ்.,செயல் அலுவலர்,தொண்டு நிறுவனங்கள்,தேவசம்போர்டு ஆகியவற்றின் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு,பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய கலைக்குழு மூலமும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும்.தொடர்ந்து இதுகுறித்து ஒரு வாரம் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.மேலும் கன்னியாகுமரியில் பள்ளி மாணவர்கள் மற்றும் அதிகாரிகள் பிளாஸ்டிக் பொருட்கள் விழிப்புணர்வு குறித்து சுற்றுலாப் பயணிகளிடம் வலியுறுத்தினர்.

Last Updated on Wednesday, 30 December 2009 06:58
 


Page 30 of 37