Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Finance

திண்டிவனம் நகராட்சியில் 2 பேருக்கு பணிக்கொடை

Print PDF

தினகரன் 23.07.2010

திண்டிவனம் நகராட்சியில் 2 பேருக்கு பணிக்கொடை

திண்டிவனம், ஜூலை 23: நகராட்சியில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்கள் பணியில் இருக்கும் போதே இறந்தால் அவர்களுடைய குடும்பங்களுக்கு நிதி கொடுப்பது வழக்கம். இதேபோல் திண்டிவனம் நகராட்சியில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தவர் ஆறுமுகம், துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தவர் கிருஷ்ணம்மாள். இவர்கள் இருவரும் பணி செய்து கொண்டிருக்கும் போதே இறந்தனர். இதைத்தொடர்ந்து இவர்களின் குடும்பங்களுக்கு பணிக்கொடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட நகர்மன்றத் தலைவர் பூபாலன் ஆறுமுகத்தின் மனைவி மலர், கிருஷ்ணம்மாளின் மகள் மாரியம்மாள் ஆகியோருக்கு முறையே தலா. ரூ. 11.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இதில் ஆணையர் முருகேகன், நகர மன்ற உறுப்பினர்கள் ஏழுமலை, முருகன், ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்

 

களியக்காவிளை பேரூராட்சிக்கு அபிவிருத்திக் கட்டணம் செலுத்தாத நிறுவனங்கள்: ரூ.19 லட்சம் இழப்பு

Print PDF

தினமணி 23.07.2010

களியக்காவிளை பேரூராட்சிக்கு அபிவிருத்திக் கட்டணம் செலுத்தாத நிறுவனங்கள்: ரூ.19 லட்சம் இழப்பு

களியக்காவிளை, ஜூலை 22: நகர ஊரமைப்புத் துறையின் அனுமதி பெறப்படாமல் பல்வேறு நிறுவனங்கள் அடுக்குமாடி கட்டடம் கட்ட உரிமம் வழங்கியது மற்றும் அபிவிருத்திக் கட்டணம் வசூலிக்காதது போன்றவற்றால் களியக்காவிளை பேரூராட்சிக்கு 2006-07-ம் நிதியாண்டில் ரூ.19,23,908 இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, 2002-ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி வெளியிட்ட அரசாணையில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் கட்டப்படும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களின் கட்டடங்களுக்கு கட்டட உரிமம் வழங்கும் வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

அதில், நகர ஊரமைப்புத் துறையின் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நகர ஊரமைப்புத் துறை இயக்குநரகத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட அபிவிருத்திக் கட்டணமாக சதுர மீட்டர் ஒன்றுக்கு ரூ. 200 வீதம் வசூலிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 100 அபிவிருத்தி கட்டணம் வசூலிக்கலாம் என 5.6.2007-ல் வெளியான நகர ஊரமைப்புத் துறை இயக்குநரின் செயல்முறை ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், களியக்காவிளை பேரூராட்சியில் சில தனியார் நிறுவனங்களுக்கு கட்டட உரிமம் வழங்கப்பட்ட போது மேற்கண்ட அரசாணை அமல்படுத்தப்படவில்லை என்பதும், நகர ஊரமைப்புத் துறையால் நிர்ணயம் செய்யப்பட்ட அபிவிருத்திக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு களியக்காவிளை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற 2006-07-ம் ஆண்டுக்கான தணிக்கையின் போது தெரிய வந்துள்ளது.

அந்த கட்டடங்களை நகரமைப்புத் துறை அலுவலர்களைக் கொண்டு ஆய்வு செய்து முறைப்படுத்தப்பட வேண்டும் என்று தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், கட்டடங்கள் அளவு செய்யப்பட்டு சொத்துவரி மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் தணிக்கை அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத் தணிக்கை அறிக்கையை பேரூராட்சி மன்றத்தில் பார்வைக்கு வைத்து, பதில்களை உள்ளாட்சி நிதித் தணிக்கை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

களியக்காவிளையைச் சேர்ந்த ஒருவரால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இத் தணிக்கை அறிக்கை பிரதி அண்மையில் பெறப்பட்டது. 106 பக்கங்கள் கொண்ட இத் தணிக்கை அறிக்கையில் வருவாய் இழப்புகள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

 

கோடம்பாக்கம் மேம்பாலம் ரூ4.7 கோடியில் பழுதுபார்ப்பு

Print PDF

தினகரன் 22.07.2010

கோடம்பாக்கம் மேம்பாலம் ரூ4.7 கோடியில் பழுதுபார்ப்பு

சென்னை, ஜூலை 22: கோடம்பாக்கம் மேம்பாலம் ரூ4.73 கோடி செலவில் பழுது பார்க்கப்படுகிறது. இந்த பணி அடுத்த மாதம் தொடங்குகிறது.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும் பாலங்களில் ஒன்று கோடம்பாக்கம் மேம்பாலம்.

இதில் ஒரு மணி நேரத்தில் 20 ஆயிரம் வாகனங்கள் செல்வதாக கூறப்படுகிறது. பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதை பழுதுபார்த்து, பலப்படுத்தி அழகுபடுத்த மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக கோடம்பாக்கம் மண்டலக் குழு கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாநகராட்சி தலைமை பொறியாளரும் கடந்த மாதம் தொழில்நுட்ப ஒப்பதல் அளித்தார். ரூ4கோடியே 73 லட்சத்து 84 ஆயிரம் செலவில் மேம்பாலத்தை பழுதுபார்த்து மேம்படுத்துவதற்கான தீர்மானம் கடந்த மாதம் 21ம் தேதி மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மேயர் மா.சுப்பிரமணியனால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்த பணிக்கான டெண்டர் விரைவில் கோரப்பட்டு ஆகஸ்ட் மாதம் பழுது பார்க்கும் பணி தொடங்கவுள்ளது. முதலில் மேம்பாலத்தின் தூண்கள் பழுது பார்க்கப்படும். அதைத் தொடர்ந்து கான்கிரீட் தளம் பழுது பார்க்கப்படும். சைதாப்பேட்டையிலுள்ள மறைமலையடிகள் பாலம் சீரமைக்க கையாளப்பட்ட தொழில்நுட்பத்துடன் இந்த பணிகள் செய்யப்படும். போக்குவரத்து பாதிக்காத அளவில் பணிகள் நடக்கும் என்று மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 


Page 19 of 37