Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Finance

அமைச்சர் ஏ.கே.வாலியா தகவல் நிதி பற்றாக்குறையால் தள்ளாடும் மாநகராட்சிக்கு ஸி 1,500 கோடி உதவி

Print PDF

தினகரன் 28.07.2010

அமைச்சர் ஏ.கே.வாலியா தகவல் நிதி பற்றாக்குறையால் தள்ளாடும் மாநகராட்சிக்கு ஸி 1,500 கோடி உதவி

புதுடெல்லி, ஜூலை 28: நிதி பற்றாக்குறையால் தள்ளாடும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஸி 1,500 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று நிதியமைச்சர் ஏ.கே.வாலியா தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமலும், 6வது சம்பளக் கமிஷன் படி, நிலுவைத் தொகையை ஊழியர்களுக்கு வழங்க முடியாமலும் நிர்வாகம் திணறி வருகிறது. மேலும், மாநகராட்சிக்காக பணிகளை முடித்த கான்டிராக்டர்களுக்கு கடந்த 18 மாதங்களாக நிலுவைத் தொகையை மாநகராட்சி வழங்கவில்லை. பணம் வராமல் பணிகளை செய்ய முடியாது என்று கான்டிராக்டர்களும் அறிவித்து விட்டனர். இதனால் மாநில அரசிடம் இருந்து நிதியுதவியை பெறுவது என்று மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி, மேயர் பிருத்வி ராஜ் சகானி தலைமையிலான மாநகராட்சி குழுவினர் நேற்று முன்தினம் மாநில நிதியமைச்சர் ஏ.கே.வாலியாவை சந்தித்து பேசினர். அமைச்சரைச் சந்தித்த குழுவில் நிலைக்குழு தலைவர் யோகேந்திர சந்தோலியா, அவை முன்னவர் சுபாஷ் ஆர்யா, மாநகராட்சி ஆணையாளர் கே.எஸ்.மெஹ்ரா மற்றும் அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.

இச்சந்திப்புக்குப் பிறகு, .கே.வாலியா கூறியதாவது: ஊழியர்களுக்கு சம்பளம் தருவதற்காகவும், இதர வகை செலவினங்களுக்காகவும் மாநகராட்சிக்கு அரசு

ஸி1,500 கோடி நிதியுதவியை வழங்க முடிவு செய்துள்ளது. இதில், ஸி1,000 கோடி மாநில அரசின் நிதியுதவியாக வழங்கப்படும். இதில், ஸி900 கோடி மாநகராட்சி சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப் பணிகளுக்கானது. எஞ்சிய ஸி 100 கோடி மாநகரா ட்சியின் கல்வி மற்றும் சுகாதார திட்டங்களுக்கானது. ஸி500 கோடி மாநகராட்சிக்கு கடனாக வழங்கப்படும். இந்த தொகையை 3 ஆண்டுகளுக்குள் திரும்பச் செலுத்த வேண்டும் என்றார்.

 

203 பயனாளிகளுக்கு ரூ.38.50 லட்சம்

Print PDF

தினமணி 28.07.2010

203 பயனாளிகளுக்கு ரூ.38.50 லட்சம்

மதுரை, ஜூலை 27: மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலப் பகுதிகளில் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டப் பயனாளிகள் 203 பேருக்கு ரு.38.50 லட்சம் காசோலைகளை மேயர் ஜி.தேன்மொழி வழங்கினார்.

மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதற்கு மேயர் ஜி.தேன்மொழி தலைமை வகித்தார். ஆணையர் எஸ்.செபாஸ்டின், துணை மேயர் மன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அறுவுறுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் 203 பேருக்கு ரூ,38.50 லட்சம் மதிப்பில் காசோலைகளை மேயர் வழங்கினார்.

பின்னர் ஆணையர் கூறுகையில், மாநகராட்சிப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிச் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனுப்பானடியில் ரூ.3 கோடி மதிப்பில் நவீன ஆடு வதை செய்யுமிடம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சனிக்கிழமை (ஜூலை 31) முஸ்லிம் ஜமாத் மற்றும் ஆட்டு இறைச்சி விற்பனையாளர்களை அழைத்து செயல்முறை விளக்கம் நடைபெற உள்ளது. பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்பு பெறாதவர்கள் உடனே பெற்றுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதில் கிழக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் என்.நன்மாறன், மண்டலத் தலைவர் வி.கே.குருசாமி, தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல், முதன்மை நகர் நல அலுவலர் டாக்டர் சுப்பிரமணியன், நகரமைப்பு அலுவலர் முருகேசன், உதவி ஆணையர் (கிழக்கு) யு.அங்கையற்கண்ணி உள்பட பலர் கலந்து கொண்டனர்

 

ஆக்கிரமிப்பில் தேயிலை தோட்டம்: வருவாய் இழப்பில் பேரூராட்சி நிர்வாகம்

Print PDF

தினமலர் 28.07.2010

ஆக்கிரமிப்பில் தேயிலை தோட்டம்: வருவாய் இழப்பில் பேரூராட்சி நிர்வாகம்

மஞ்சூர்:கீழ் குந்தா பேரூராட்சிக்கு சொந்தமான 10 ஏக்கர் தேயிலை தோட்டம் ஆக்கிரமிப்பில் உள்ளதால், நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், குந்தா தாலுகாவுக்கு உட்பட்டு கீழ்குந்தா பேரூராட்சி உள்ளது. கடந்த 1987-88 ஆண்டுகளில் கீழ்குந்தா பேரூராட்சி மன்ற தலைவராக இருந்த மஞ்சூர் ஹட்டி கிராமத்தை சேர்ந்த பெள்ளிகவுடர் என்பவரின் முழு முயற்சியால், பேரூராட்சிக்கு வருவாயை ஈட்டும் வகையில் மஞ்சூர் ஹட்டி கிராமத்திற்கு கீழ் பகுதியில் 10 ஏக்கர் தேயிலை தோட்டம் உருவாக்கப்பட்டது.இந்த தோட்டம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு அதன் மூலம் வருவாய் ஈட்டப்பட்டது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு பேரூராட்சி நிர்வாகத்தின் மெத்தன போக்காலும், அரசியல் தலையீடு காரணமாகவும் தேயிலை தோட்டத்தை குந்தாபாலம் பகுதியை சேர்ந்த 20க்கு மேற்பட்டவர்கள் ஆக்கிரமித்து தேயிலை விவசாயம் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களே தேயிலை விவசாயம் செய்து வந்ததால், பேரூராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.தேயிலை தோட்டம் குறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு வந்த புகார்களை அடுத்து, நிர்வாகம் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் கடந்த 2006ம் ஆண்டிலேயே கீழ்குந்தா பேரூராட்சி நிர்வாகத்திற்கு சாதகமான முடிவு கிடைத்தது.எனினும், தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களே தேயிலை விவசாயம் செய்து வருகின்றனர். பேரூராட்சிகளின் உதவி இயக்குனரின் ஆய்வில், தேயிலை தோட்டம் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணுமாறு உத்தரவிட்டதை அடுத்து, தற்போது தேயிலை தோட்டத்தை கைப்பற்ற, கீழ்குந்தா பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குந்தா வருவாய் துறைக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கீழ்குந்தா பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராமனிடம் கேட்டபோது, ""கீழ்குந்தா பேரூராட்சிக்கு சொந்தமான தேயிலை தோட்டம் குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததில் கடந்த 2006ம் ஆண்டிலேயே பேரூராட்சி நிர்வாகத்திற்கு சாதகமான முடிவு கிடைத்தது. குந்தா வருவாய் துறைக்கு இடத்தை சர்வே செய்து தருமாறு மனு அளிக்கப்பட்டுள்ளது. சர்வே செய்த பின்பு தேயிலை தோட்டத்தை கைப்பற்றி சுற்றி வேலி அமைத்து பராமரிக்கப்படும்,'' என்றார்.

கோடி ரூபாய் இழப்பு!: கடந்த 10ஆண்டுக்கு மேலாக கீழ் குந்தா பேரூராட்சிக்கு சொந்தமான தேயிலை தோட்டம் ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது. 10 ஏக்கர் தேயிலை தோட்டத்தில் மாதந்தோறும் குறைந்தது 5 ஆயிரம் கிலோ வரைக்கு பசுந்தேயிலை பறிக்கப்படுகிறது. 10 ஆண்டுக்கு மேலாக ஆக்கிரமிப்பில் இருப்பதால், கீழ்குந்தா பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒரு கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே, பேரூராட்சி நிர்வாகம் நிதி நெருக்கடி யில் தத்தளித்து வரும் நிலையில், தேயிலையின் வருமானம் கிடைத்திருந்தால் அனைத்து பணிகளும் தடையின்றி மேற்கொள்ள முடிந்திருக்கும்.

 


Page 18 of 37