Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Finance

அன்னூர் பேரூராட்சியில் நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் கவுன்சிலர் புகார்

Print PDF

தினமலர் 06.08.2010

அன்னூர் பேரூராட்சியில் நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் கவுன்சிலர் புகார்

அன்னூர் : "வளர்ச்சிப் பணிக்கு நிதி ஒதுக்குவதில், பேரூராட்சி பாரபட்சமாக நடந்து கொள்கிறது' என, பா.., கவுன்சிலர் குற்றம் சாட்டியுள்ளார்.அன்னூர் பேரூராட்சியின் 12வது வார்டு கவுன்சிலர் சாந்தி, கோவை கலெக்டர் உமாநாத்திடம் அளித்த மனு:அன்னூர் பேரூராட்சியில் பொதுநிதியில் வளர்ச்சி பணிகள் செய்வதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. சில வார்டுகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. வளர்ச்சி பணிகளில் அங்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 12வது வார்டு புறக்கணிக்கப்படுகிறது. பணிகள் செய்ய டெண்டர் விடுவதிலும், வேலை உத்தரவு வழங்குவதிலும் மெத்தனம் காட்டப் படுகிறது.

தென்னம்பாளையம் ரோடு, எக்சேஞ்ச் ரோடு ஆகியவற்றில் சாக்கடை வடிகால் அமைக்க பல மாதங்களாக வலியுறுத்தியும் பணிகள் துவங்கவில்லை. பஸ் ஸ்டாண்டில் நடுப்பகுதியில் கான்கிரீட் கற்கள் பெயர்ந்து குழிகள் ஏற்பட்டுள்ளன. அவிநாசி ரோடு, சத்தி ரோடு உள்பட பல இடங்களில் குப்பைகள் கொட்டும் மையங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந் துள்ளன. பேரூராட்சிக்கு என தனி செயல் அலுவலர் இல்லை. சர்க்கார் சாமக்களம் செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பாக உள்ளார்.அவரும் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே அலுவலகத்திற்கு வருகிறார். கொசு மருந்து பல வாரங்களாக தெளிக்காததால் கொசுக்கள் அதிகரித்து நோய் பரவுகிறது. தெற்கு மற்றும் வடக்கு துவக்கப்பள்ளியில் கழிப்பிடம் இல்லாமல் மாணவ, மாணவியர் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன் படுத்துகின்றனர். பேரூராட்சிக்கு தனி செயல் அலுவலர் நியமித்து, அனைத்து வார்டுகளிலும் பாரபட்சமில்லாமல் நிதி ஒதுக்கி வளர்ச்சி பணிகளை வேகப்படுத்தவும், அரசு துவக்கப்பள்ளிகளில் கழிப்பிடம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

 

உள்ளகரம் நகராட்சி தீர்மானம் பூங்காக்களை பராமரிக்க மக்களிடம் நிதி வசூல்

Print PDF

தினகரன் 04.08.2010

உள்ளகரம் நகராட்சி தீர்மானம் பூங்காக்களை பராமரிக்க மக்களிடம் நிதி வசூல்

ஆலந்தூர், ஆக. 4: உள்ளகரம் புழுதிவாக்கம் நகராட்சி கூட்டம் மன்ற கூடத்தில் நடந்தது. நகராட்சி தலைவர் ஜே.கே.ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். துணை தலைவர் குமரமணிகண்டன், செயல் அலுவலர் கிரிஜா, பொறியாளர் வைத்திலிங்கம் முன்னிலை வகித்தனர்.

சுகாதார பணிகளுக்காக 20 மூன்று சக்கர சைக்கிள்களை ரூ4.2 லட்சத்தில் வாங்க டெண்டர் விடுவது, நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் உள்ள காலிமனைகளை தனியார் ஆக்கிரமிக்காமல் இருக்க ரூ1.6 லட்சம் செலவில் 20 பெயர் பலகைகள் வைப்பது, தந்தை பெரியார், ஷீலா நகர் பூங்காவை சீரமைக்க ரூ25 லட்சம் செலவிடுவது, இதில் பொதுமக்கள் பங்களிப்பாக ரூ2.5 லட்சம் வசூலிப்பது, மேலும் 80 சதவீதத்தை பெருநகர வளர்ச்சி குழுமத்திடமும், நகராட்சி சார்பில் 10 சதவீதம் செலவழிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

ஒசூர் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து சுங்கக் கட்டணம் ரூ.32 லட்சம் ஏலம்

Print PDF

தினமணி 29.07.2010

ஒசூர் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து சுங்கக் கட்டணம் ரூ.32 லட்சம் ஏலம்

ஒசூர், ஜூலை 28: ஒசூர் புதிய பேருந்து நிலையத்துக்கு வரும் பேருந்துகளுக்கு சுங்கக் கட்டணம், இருசச்கர வாகனம் நிறுத்தக் கட்டணம், கழிப்பிடக் கட்டணம், பொருள் பாதுகாப்பு வாடகைக் கட்டணம் ஆகியற்றுக்கான ஏலம் ஒசூர் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

சென்னை நகராட்சி நிர்வாக இணை இயக்குநர் சந்திரசேகர் முன்னிலையில் ஒசூர் நகராட்சி ஆணையர் எஸ்.பன்னீர்செல்வம் ஏலத்தை நடத்தினார்.

இதில் பேருந்து நிலையத்துக்கு வரும் பேருந்துகளுக்கான கட்டணம் ரூ.32,40,999-க்கும், கழிப்பிடக் கட்டணம் ரூ.19 லட்சத்துக்கும், இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கான வாடகைக் கட்டணம் ரூ.14,02,800க்கும், பொருள் பாதுகாப்பு அறை கட்டணம் ரூ.1,48,000க்கும் ஏலம் எடுக்கப்பட்டது.

 


Page 17 of 37