Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Finance

பெங்களூர் மாநகராட்சிக்கு ரூ2,600 கோடி கடன்

Print PDF
தினகரன் 20.08.2010

பெங்களூர் மாநகராட்சிக்கு ரூ2,600 கோடி கடன்

பெங்களூர், ஆக.20: பெங்களூர் மாநகராட்சிக்கு தேசிய வங்கிகளில் ரூ2,600 கோடி கடன் உள்ளதாக மஜத கவுன்சிலர் பத்மநாபரெட்டி தெரிவித்தார். பெங்களூர் மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதி நான்காவது முறையாக மாற்றப்பட்டுள்ளது. மாநகராட்சியின் வருவாய் திருப்திகரமாக இல்லாததால், செப்டம்பர் மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என ஏற்கனவே மேயர் நடராஜ் அறிவித்திருந்தார். இந்நிலையில், ஆக.30ம் தேதியன்று 2010&11ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என மேயர் நடராஜ் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: மாநகராட்சி பட்ஜெட் ஆக.30ம் தேதி தாக்கல் செய்யப்படும். அதன் மீதான விவாதம் செப்டம்பர் முதல்வாரத்தில் நடக்கும்.‘ என்றார்.

இதனை வரி மற்றும் நிதி நிலைக்குழு தலைவர் பி.என்.சதாசிவா உறுதி செய்து ள்ளார்.‘இது அதிகாரப்பூர்வ அறிவிப்பாகும். பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படலாம் என்ற யூக தேதிகள் அறிவிக்கப்பட்டுவந்தன. தற்போது இறுதி தேதியை மேயர் அறிவித்துள்ளார்.‘ என்கிறார் சதாசிவா.

மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் எம்.நாகராஜ் கூறுகையில்,‘மாநகராட்சி ஆளும் பாஜ, பட்ஜெட் தாக்கல் செய்யாமல் இழுத்தடித்துவருகிறது. இது பொறுப்பற்றத்தனமாகும். பட்ஜெட் தாக்கல் தேதியை அடிக்கடி மாற்றிவருவது, நிர்வாக திறனின்மையை காட்டுகிறது. மேயரை, பெங்களூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் திரைமறைவில் இருந்து ஆட்டிபடைத்துவருகிறார். எனவே, அறிவிப்பு வெளியான பிறகும், அதனை ரத்து செய்து, புதிய தேதியை அறிவிக்க மேயர் தயங்கமாட்டார்.‘ என்றார்.

மாநகராட்சி மஜத கட்சி தலைவர் பத்மநாபரெட்டி கூறுகையில்,‘மாநகராட்சியின் நிதிநிலைமை மோசமாக இருக்கிறது. தேசியவங்கிகள் பலவற்றில் க்ஷீ2600 கோடி அளவுக்கு மாநக ராட்சி கடன்பாக்கிவைத்துள்ளது.

நடப்பாண்டில், கடன் வட்டியை கூட செலுத்தமுடியாமல் மாநகராட்சி திணறிவருகிறது. இதனை சமாளி க்க அக்ரமா&சக்ரமா திட்டத்தை நம்பியுள்ளதோடு, மாநில அரசிடமிருந்து ரூ1500 கோடி கோரியுள்ளது. அதிகாரிகளின் ஆட்சிகாலத்தில் மோசமான நிர்வாகத்தால், மாநகராட்சியில் நிதி பற்றாக்குறை நிலவுகிறது. மாநில அரசின் ஒத்துழைப்பு கிடைத்தாலும், மாநகராட்சியின் நிதிநிலைமை சீராகுமா? என்பது சந்தேகமே.‘ என்றா

Last Updated on Friday, 20 August 2010 08:44
 

பெரிய கோவில் நூற்றாண்டு நிறைவு விழா: தஞ்சை நகர மேம்பாட்டுக்கு ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடு; கருணாநிதி உத்தரவு

Print PDF

மாலை மலர் 13.08.2010

பெரிய கோவில் நூற்றாண்டு நிறைவு விழா: தஞ்சை நகர மேம்பாட்டுக்கு ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடு; கருணாநிதி உத்தரவு

சென்னை, ஆக. 13- தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மாமன்னார் ராஜராஜனின் தஞ்சைப்பெரிய கோவில் 1000 ஆண்டு நிறைவடைவதைக் கொண்டாடிடும் வகையில், தமிழக அரசின் சார்பில் தஞ்சையில் செப்டம்பர் மாதம் 25 மற்றும் 26 ஆகிய இரு நாட்களுக்கு விழா நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்திருந்தார்.

இதையொட்டி, தஞ்சை நகரில் சாலைகள் மேம்பாடு, பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்கள் மேம்பாடு, பெரிய கோவில் முதல் மருத்துவ கல்லூரி வரை தெரு விளக்குகள், நவீன சுகாதார வளாகங்கள், ராஜராஜசோழன் சிலை நிறுவப்பட்டுள்ள பூங்காவை அழகு படுத்துதல், பெயர்ப் பலகைகள் மற்றும் தகவல் பலகைகள் அமைத்தல், சாமந்தான்குளத்தினை மேம்படுத்துதல், பெரிய கோவில் அருகிலுள்ள ஜி..கால்வாயின் பாலத்தை அகலப்படுத்தல் ஆகிய அடிப்படைப் பணிகளை நிறைவேற்றுவதற்காக ரூ. 25 கோடியே 19 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து நிர்வாக அனுமதி வழங்கி முதல்-அமைச்சர் கருணாநிதி இன்று உத்தர விட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பெரிய கோவில் நூற்றாண்டு நிறைவு விழா: 
 
 தஞ்சை நகர மேம்பாட்டுக்கு
 
 ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடு; 
 
 கருணாநிதி உத்தரவு

 

உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் ரூ.4.50 கோடி குடிநீர் கட்டணம் நிலுவை வசூலிக்க முடியாமல் அதிகாரிகள் திணறல்

Print PDF

தினகரன் 06.08.2010

உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் ரூ.4.50 கோடி குடிநீர் கட்டணம் நிலுவை வசூலிக்க முடியாமல் அதிகாரிகள் திணறல்

உடுமலை, ஆக. 6: உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள உள்ளாட்சி நிர்வாகங்கள் ரூ.4.50 கோடி குடிநீர் கட்டணத்தை நிலுவையில் வைத்துள்ளன. அந்த தொகையை வசூலிக்க முடியாமல் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

திருப்பூர் மாவட்டம் உடு மலை, மடத்துக்குளம் தாலுகா வில் பல கூட்டு குடிநீர் திட்டங்களை தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம் நிறைவேற்றி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள் மூலம் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்கிறது. உடுமலை ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள், குடிமங்கலம் ஒன்றியத்தில் 23 ஊராட்சி, மடத்துக்குளம் ஒன்றியத்தில் 11 ஊரா ட்சி மற்றும் மடத்துக்குளம், தளி பேரூராட்சிகள் இத்திட்டங்களால் பயன்பெறுகின்றன. முறையாக குடிநீர் வினியோகிக்கப்பட்டும் இந்த இரு தாலுகாக்களில் இருந்தும் தமிழ்நாடு குடி நீர் வடிகால் வாரியத்துக்கு குடி நீர் கட்டண நிலுவை ரூ.4.50 கோடி என்ற அளவில் உள்ளது.

இதுகுறித்து குடிநீர் வடி கால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

கணக்கம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தில் 145 கிராமம் பயன்பெறுகிறது. இங்கு மட்டும் ரூ.75லட்சம் குடிநீர் கட்டணம் நிலுவையில் உள்ளது. அதே போல் பூலாங்கிணர் கூட்டு குடிநீர் திட்டத்தில் 39 கிராமம் பயன்பெறுகிறது. இங்கு ரூ.22 லட்சம் கட்டணம் நிலுவையில் உள்ளது. மானுப்பட்டி&ஜோதிபாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் 24 கிராமங்கள் குடிநீர் பெறுகின்றன. இங்கு ரூ.18லட்சம் நிலுவை உள்ளது. மடத்துக்குளம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 22 கிராமங்கள், மடத்துக்குளம் பேரூராட்சி பகுதி அடங்கி உள்ளன. இந்த நிர்வாகம் ரூ.38லட்சம் நிலுவை வைத்துள்ளது. தாமரைப்பாடி கூட்டு குடிநீர் திட்டத்தில் 26 கிராமங்கள் உள்ளன. இங்கு ரூ.20 லட்சம் பாக்கி உள்ளது. ஆயிரம் லிட்டர் குடிநீரை சுத்திகரித்து பொதுமக்களுக்கு வினியோகிக்க குடிநீர் வடிகால் வாரியம் ரூ.14 வரை செலவு செய்கிறது. ஆனால் அதில் ரூ.3 மட்டுமே வாரியத்துக்கு கிடைக்கிறது. மற்ற தொகை கிடைப்பதில்லை. பொதுமக்களிடம் இருந்து குடிநீர் கட்டணத்தை உள்ளாட்சி நிர்வாகங்கள் முறை யாக வசூல் செய்கின்றன. ஆனால் அதை குடிநீர் வடி கால் வாரியத்துக்கு திருப்பி செலுத்துவதில்லை.

இந்த நிலுவைத் தொகையை வசூலிக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறி யாளர் மற்றும் அதிகாரிகள் நேர டியாக களம் இறங்கி உள்ளனர். ஆனால் பணம் வசூலாவதில்லை. குடிநீர் வினியோகிக்க தேவையாகும் மின்கட்டணத் தை குடிநீர்வடிகால் வாரியம் தவறாமல் செலுத்தி வருகிறது. குடிநீரை சுத்தப்படுத்த உதவும் ரசாயன பொருள், குழாய் பராமரிப்பு போன்றவற்றையும் பார்த்துக் கொள்கிறது.

உள்ளாட்சி நிர்வாகங்கள் குடிநீர் கட்டணத்தை திருப்பி செலுத்தாததால் குடிநீர் வடிகால் வாரியம் நஷ்டத்தில் இயங்குகிறது, இதை ஊராட்சி நிர்வாகங்கள் கண்டுகொள்வதில்லை என வேதனையுடன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Page 16 of 37