Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Finance

எம்மார் நிறுவனத்திடம் இருந்து ரூ93கோடி உத்தரவாத தொகை பெற நிதியமைச்சகம் தலையிட வேண்டும்

Print PDF

தினகரன்                16.11.2010

எம்மார் நிறுவனத்திடம் இருந்து ரூ93கோடி உத்தரவாத தொகை பெற நிதியமைச்சகம் தலையிட வேண்டும்

புதுடெல்லி, நவ. 16: எம்மார் நிறுவனத்திடம் இருந்து ரூ93 கோடி வங்கி உத்தரவாதத் தொகையை பெறுவதற்காக நிதித்துறை அமைச்சகம் தலையிட வேண்டும் என்று மத்திய நகர்ப்புற அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள், வீராங்கனைகள் தங்குவதற்காக அக்ஷர்தாம் கோயில் அருகில் ரூ.1000 கோடிக்கும் அதிகமான செலவில் விளையாட்டு கிராமம் உருவாக்கப்பட்டது. இதை கட்டி முடிக்க எம்மார் எம். ஜி.எப். என்னும் கட்டுமான நிறுவனத்துக்கு டெல்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) கான்ட்ராக்ட் வழங்கியது.

விளையாட்டு கிராமத்தின் கட்டுமானத்தை குறித்த நேரத்தில் முடிக்காததோடு, பல்வேறு குறைபாடுகள் நடந்திருப்பதையும், முறைகேடுகள் நடந்திருப்பதையும் டெல்லி மேம்பா ட்டு ஆணையம் கண்டுபிடித்து, மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு அறி க்கை அனுப்பியது.

இதைத் தொடர்ந்து, எம்மார் நிறுவனம் சார்பில் 2 வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள ரூ183 கோடி உத்தரவாதத் தொகையை நஷ்டஈட்டுத் தொகையாக பறிமுதல் செய்ய வேண்டுமென மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை உத்தரவிட்டது. ஆனால், அரசின் நடவடிக்கையை எதிர்த்து எம்மார் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், வங்கி உத்தரவாதத் தொகையாக எம்மார் நிறுவனம் செலுத்தியுள்ள தொகையில் இருந்து ரூ90 கோடியை டிடிஏ எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கியது.

எஞ்சிய ரூ93 கோடியையும் பெறுவதற்காக மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் உதவியை நகர்ப்புற வளர்ச்சித்துறை நாடியுள்ளது. இதுகுறித்து, நகர்ப்புற வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ரூ90 கோடி உத்தரவாதத் தொகையைத்தான் டிடிஏவால் பெற முடிந்துள்ளது. வங்கி செய்த தவறால் ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டுள்ள மொத்த உத்தரவாதத் தொகையையும் பெற முடியவில்லை. அதனால், எஞ்சிய உத்தரவாதத் தொகை ரூ93 கோடியை எம்மார் நிறுவனத்தின் வங்கிக்கணக்கிலிருந்து பெறும் வகையில் இந்த விவகாரத்தில் மத்திய நிதித்துறை அமைச்சகம் தலையிட வேண்டும் என்று கடிதம் அனுப்பியுள்ளோம். மொத்த உத்தரவாதத் தொகையையும் டி.டி.. பெறமுடியாத வகையில் வங்கி செய்த தவறை நிதியமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு வருவதற்காகவும், எஞ்சிய உத்தரவாதத் தொகையை டி.டி.. பெறுவதற்காகவும் இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அதோடு, வங்கியின் தவறை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டுமென வங்கியின் உயரதிகாரிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளோம்" என்றார்.

ஆனால், எம்மார் நிறுவனம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "விளையாட்டு கிராம கட்டு மானத்தை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டது ஏன்? என்பது பற்றி விளக்க ஒரு வாரம் அவகாசம் அளிப்பதாக அக்டோபர் 16ம்தேதி டிடிஏ கூறியிருந்தது. அதோடு, ரூ80 கோடியை நஷ்ட ஈட்டுத் தொகையாக கேட்டிருந்தது. ஆனால், வங்கி உத்தரவாதத் தொகை முழுவதையும் (ரூ183 கோடி) கேட்பது சட்ட விரோதம். அதற்கு தடைவிதிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மாநகராட்சி மேம்பாட்டு பணி அரசு ரூ3 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினகரன்               10.11.2010

மாநகராட்சி மேம்பாட்டு பணி அரசு ரூ3 கோடி ஒதுக்கீடு

திருச்சி, நவ. 10: மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ரூ3 கோடியை திருச்சி மாநகராட்சிக்கு வழங்கியுள்ளது.

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ஏற்கனவே ரூ50 லட்சம் செலவில் 2 பயணிகள் மற்றும் பேருந்துகளுக்கான மேற்கூரை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மேலும் தில்லைநகர், உறையூர், பாலக்கரை மற்றும் இதர நகர பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் நிற்கும் இடம் மேற்கூரை அமைக்கப்படாமல் உள்ளது. தற்போது இந்த பகுதியிலும் பிரம்மாண்டமாக இரண்டு மேற்கூரைகளை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மேலும் இங்கு புதிய தளம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ரூ1கோடி நிதி வழங்கியுள்ளது.

உய்யக்கொண்டான் ஆற்றில் ஏற்படும் வெள்ளப் பெருக்கின் போது வயலூர் ரோடு சீனிவாச நகர் பகுதியில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் காத்தரி வாய்க்காலின் தொட்டி வாய்க்கால் பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை தொடர்ந்து 4 கிலோ மீட்டர் தூரம் இந்த வாய்க்காலில் 400 மீட்டர் நீளத்திற்கு தடுப்பு சுவர் அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதற்கான ரூ50 லட்சம் நிதியையும் தமிழக அரசு வழங்கியுள்ளது.

அரியமங்கலம் குப்பை கிடங்கில் லாரிகள் சென்று வருவதற்கான சாலை உள்ளது. இந்த சாலை பழுதடைந்திருந்ததால் குப்பை லாரிகள் மற்றும் இயந்திரங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டது. அதனால் இந்த பகுதியில் கான்கிரீட் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிதியையும் சேர்த்து மொத்தம் ரூ3 கோடியை இயக்குதல் மற்றும் பராமரித்தல் இடை நிரப்பும் நிதியின் கீழ் தமிழக அரசு வழங்கியுள்ளது. இது நூறு சதவீத மானியமாகும். இந்த பணிகளுக்கான டெண்டர் விரைவில் வெளியிடப்படும் என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

 

மாநகராட்சியில் நிதி பற்றாக்குறை நேரு நகர் மேம்பாட்டு திட்டப்பணிக்கு சிக்கல் ரூ300 கோடிக்கு கடன் எதிர்பார்ப்பு

Print PDF

தினகரன்                 01.11.2010

மாநகராட்சியில் நிதி பற்றாக்குறை நேரு நகர் மேம்பாட்டு திட்டப்பணிக்கு சிக்கல் ரூ300 கோடிக்கு கடன் எதிர்பார்ப்பு

மதுரை, நவ.1: நேரு நகர் மேம்பாட்டு திட்டப்பணிகளை முழுமையாக முடிக்க மாநகராட்சியில் நிதி இல்லை. இதனால், டுவிட்கோ நிறுவனத்திடம் ரூ.300 கோடி கடன் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மதுரையில் நேரு நகர்புற மேம்பாட்டு திட்டம் மூலம் ரூ.ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள் நடந்துள்ளன. இதில் வைகை 2வது குடிநீர் திட்டப்பணி முழு அளவில் நிறைவடைந்துள்ளன. மழைநீர் வடிகால், திடக்கழிவு மேலாண்மை, பாதாள சாக்கடை போன்ற பணிகள் முழுமையாக முடிவடையவில்லை.

இத்திட்டங்களுக்கு மத்திய அரசு 50 சதவீதம், தமிழக அரசு 20 சதவீதம் அளித்துள்ளது. மீதமுள்ள 30 சதவீதம் மாநகராட்சி அளிக்க வேண்டும். ஏற்கனவே அளிக்கப்பட்ட திட்ட மதிப்பீட்டை விட கூடுதல் மதிப்பீடு ஏற்பட்டால், அதையும் மாநகராட்சியே ஏற்க வேண்டிய நிலை உள்ளது. மாநகராட்சியில் நிதி பற்றாக்குறை நிலவுகிறது. மாநகராட்சி பங்கீட்டு நிதி ஒதுக்காமல் திட்டப்பணிகளை முடிக்க முடியாத இக்கட்டான சூழ்நிலை நிலவுகிறது. இதை முடித்தால்தான், அடுத்த பணிக்கான நிதியை மத்திய அரசு அளிக்கும்.

அரசின் டுவிட்கோ நிறுவனத்திடம் மாநகராட்சி ரூ.300 கோடி கடன் கோரியுள்ளது. இதை அளிக்க டுவிட்கோ நிறுவனம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. இதை மாநகராட்சி ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் கடன் கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் பணிகளை விரைவாக முடிக்க திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 


Page 13 of 37