Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Finance

மேலப்பாளையம் மண்டலத்தில் அறிமுகம் துப்புரவு பணியை தனியாரிடம் விட மாநகராட்சி முடிவு ஆண்டுக்கு ரூ.136.85 லட்சம் மிச்சம்

Print PDF

தினகரன்      27.08.2012

மேலப்பாளையம் மண்டலத்தில் அறிமுகம் துப்புரவு பணியை தனியாரிடம் விட மாநகராட்சி முடிவு ஆண்டுக்கு ரூ.136.85 லட்சம் மிச்சம்

நெல்லை, : துப்புரவு பணியை தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக மேலப்பாளையம் மண்டலத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனால் ஆண்டிற்கு ரூ.136.85 லட்சம் மிச்சமாகிறது.

108 சதுர கிலோ மீட்டரில் அமைந்துள்ள நெல்லை மாநகராட்சியின் மக்கள்தொகை 4.78 லட்சமாகும். மாநகரில் மட்டும் 1.25 லட்சம் வீடுகளும், 6,928 வணிக நிறுவனங்களும், 2 பஸ் நிலையங்களும், 2 தினசரி சந்தைகளும் உள்ளன. அனைத்து பகுதிகளிலும் அன்றாடம் உருவாகும் 154.42 மெட்ரிக் டன் குப்பைகளை அள்ளவும், கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யவும் முன்பு 881 துப்புரவு பணியாளர்கள் இருந்தனர்.

தற்போது மாநகராட்சியில் 520 பேர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் 335 சுய உதவிக்குழு உறுப்பினர்களை கொண்டு துப்புரவு பணிகள் நடந்து வருகிறது.சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தினக்கூலி கேட்டு அடிக்கடி வேலை நிறுத்த போராட்டம் செய்து வருவதால், பணிகள் பாதிக்கப்படுவதோடு, பொது சுகாதாரமும் கேள்விக்குறி யாகிறது. பணியாளர் பற்றாக் குறையால் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல் படுத்த முடியாமல் மாநகராட்சி திணறி வருகிறது.

எனவே மாந கராட்சியில் உள்ள 4 மண்ட லங்களில், ஒன்றில் மட்டும் குப்பைகள் அள்ளும் பணியை தனியாரிடம் ஒப் படைக்க முடிவு செய்யப்பட் டுள்ளது. இதற்காக நெல்லை மாநகராட்சி அதிகாரி கள் மேலப்பாளையம் மண்ட லத்தை தேர்வு செய்துள்ளனர்.

தனியார் நிறுவனம் மூலம் குப்பைகளை சேகரித்து அகற்ற ஆகும் செலவு உத்தேசமாக ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.1275 என கணக்கிடப்பட்டுள்ளது. மாநகராட்சி மூலம் குப்பைகளை சேகரிக்க ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.2072 செலவாகிறது.

எனவே திடக்கழிவு மேலாண்மை பணியினை தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்வதால் மாநக ராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.136.85 லட்சம் மிச்சமாகிறது. நகராட்சி நிர்வாக ஆணையர் அனுமதி பெற்று மேலப்பாளையம் மண்ட லத்தில் குப்பைகள் அள்ளும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.245 பணியாளர்கள்பிற மண்டலங்களுக்கு மாற்றம்மேலப்பாளையம் மண்டலம் 40 கி.மீ நெடுஞ்சாலை மற்றும் 211 கி.மீ மாநகராட்சி சாலைகளை உள்ளடக்கியதாகும். இம்மண்டலத்தில் மட்டும் நாளொன்றுக்கு 47 மெட்ரிக் டன் குப்பைகள் உருவாகிறது. இப்பணியினை தற்போது 110 நிரந்தர பணியாளர்கள், 135 தற்காலிக துப்புரவு பணியாளர்கள் செய்து வருகின்றனர். தனியார் நிறுவனம் மூலம் குப்பைகள் அள்ளும் பணி அறிமுகப்படுத்தப்படும்போது, இங்குள்ள 245 துப்புரவு பணியாளர்கள் பிற மண்டலங்களுக்கு மாற்றப்பட உள்ளனர்.

Last Updated on Monday, 27 August 2012 10:27
 

தில்லியில் வாகன நிறுத்த கட்டணம் உயரக்கூடும்

Print PDF

தினமணி            18.08.2012

தில்லியில் வாகன நிறுத்த கட்டணம் உயரக்கூடும்

புது தில்லி, ஆக. 17: தில்லியில்   வாகன  நிறுத்தக்   கட்டணம்    விரைவில் உயர்த்தப்படக்கூடும் என்று  தெரிகிறது. தில்லி மாநகராட்சிகள்,  புது  தில்லி  முனிசிபல் கவுன்சில், மாசுக் கட்டுபாட்டு ஆணையம், தில்லி மேம்பாட்டு ஆணையம் ஆகிவற்றின் அதிகாரிகள்  துணை  நிலை ஆ ளுநரை வியாழக்கிழமை சந்தித்து தில்லியில் வாகன  நிறுத்தக்  கொள்கை  குறித்து விவாதித்தனர்.அதில் தில்லி   முழுதும்    வாகன    நிறுத்த  மையங்களில்   கட்டணங்களை    உயர்த்துவது     குறித்து பரிந்துரைக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள்  கூறின .  பரிந்துரை   இறுதி   செய்யப்பட்டு    தில்லி பிரதேச  அரசுக்கு   அனுப்பி    வைக்கப்படும்   என்றும்    வாகன நிறுத்த கட்டண உயர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்  என்றும் அதிகாரிகள்  தரப்பில்  கூறப்படுகிறது. தலைநகரில் தினசரி சராசரியாக 1,200 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

Last Updated on Saturday, 18 August 2012 09:27
 

அன்னூர் பேரூராட்சி கடைகள் ரூ.40 லட்சத்துக்கு ஏலம்

Print PDF

தினகரன்              17.08.2012

அன்னூர் பேரூராட்சி கடைகள் ரூ.40 லட்சத்துக்கு ஏலம்

அன்னூர், : அன்னூர் பேருராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 20லட்சம் செலவில் கடந்த 2010ஆம் ஆண்டு துவங்கிய பணி தற்போது முடிவடைந்து அன்னூர் பேருராட்சி தலைவர் செல்வராஜ் தலைமையில் ஏலம் விடப்பட்டது.

கீழ் தளத்தில் 5 கடைகளும், மேல் தளத்தில் 5 கடைகளும் ஏலம் விடப்பட்டது. கீழ் தளத்தில் உள்ள கடைகளின் வாடகை ரூ.25,000 முதல் ரூ.41,500. மேல் தள கடைகளின் வாடகை ரூ.10,000 முதல் 11,200 வரை அதிகரித்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு இங்கிருந்த கடைகளின் ரூ.1035 முதல் ரூ.3460.  மேலும் பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகள் ரூ.3500 முதல் ரூ.14000 வரை ஏலம் போனது.

ஏலத்திற்கு அவினாசி, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், கோவை, திருப்பூர் பகுதிகளில் இருந்து 106 பேர் பங்கு பெற்றனர். பத்து பேர் ஏலம் எடுத்துள்ளனர். ஏலம் எடுத்த டேவணி தொகை 1 நபருக்கு ரூ.50ஆயிரம்  வீதம் மொத்தம் ரூ.5லட்சம் பெறப்பட்டது. மேலும் நபருக்கு ரூ.21800 வீதம் 16 மாதத்திற்கு ரூ.34லட்சத்து 88ஆயிரம்  முன்பணமாக பெறப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.39லட்சத்து 88ஆயிரம்  பெறப்பட்டுள்ளது. அன்னூரில் இதுவரை நடந்த ஏலத்தில் இந்த வருடம் அதிக அளவில் ஏலம் விடப்பட்டது குறிப்பிட்டத்தக்கது. ஏல மேற்பார்வையாளர் சதீஸ் செல்வராஜ் கூறியதாவது: ஏலம் எடுத்த கடைகளை சுத்தமாக, பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். மாதந்திர தொகையை சரியாக செலுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். என்றார்.

 இதில் பேரூராட்சி தலைவர் ராணி சௌந்தரராஜன், துணை தலைவர் விஜயகுமார் மற்றும வார்டு கவுன்சிலர்கள், பேரூராட்சி எழுத்தர் செல்வ ராஜ், தலைமை எழுத்தர் மணிகண்டன் கலந்து கொண்டனர்.

Last Updated on Friday, 17 August 2012 11:12
 


Page 6 of 37