Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Financial Management

மாநகராட்சி பட்ஜெட்: அனைத்துக் கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்

Print PDF

தினமணி 25.02.2010

மாநகராட்சி பட்ஜெட்: அனைத்துக் கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்

சென்னை, பிப். 24: வரும் நிதியாண்டுக்கான (2010}2011) மாநகராட்சி பட்ஜெட் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

வரும் நிதியாண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட் கூட்டம், மார்ச் 15}ம் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் மேயர் மா. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

மாநகராட்சி சார்பில் கலைக் கல்லூரி கட்டப்பட வேண்டும், கொசுத் தொல்லையை முழு அளவில் ஒழிக்க அதிக அளவில் கொசு ஒழிப்பு இயந்திரங்கள் வாங்கப்பட வேண்டும். மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் சிறப்பான முறையில் மேம்படுத்தப்பட வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, அனைத்துக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.

மேலும் மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பென்சில், பேனா ஆகியவற்றுடன் கூடிய ஜாமென்ட்ரி பாக்ஸ் இலவசமாக வழங்கப்பட வேண்டும். சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் கைகளை சுகாதாரமாக பராமரிக்க சோப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Last Updated on Thursday, 25 February 2010 10:46
 

மாநகராட்சி பட்ஜெட் நாளை தாக்கல்

Print PDF

தினமலர் 24.02.2010

மாநகராட்சி பட்ஜெட் நாளை தாக்கல்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் நாளை நடக்கிறது. இவ்வாண்டு உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. திருப்பூர் மாநகராட்சி உரு வாக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளை கடந்து, மூன் றாம் ஆண்டில் பயணிக்கிறது. பின்னலாடை தொழில் வளம் மிகுந்த இந்நகரில், மாநகராட்சிக்கு கிடைக் கும் ஆண்டு வருவாய் என் பது குறைவாகவே உள்ளது. சொத்து வரி, குடிநீர் கட் டணம்; தொழில் வரி மூலம் கிடைக்கும் வருவாய், மாநகராட்சி கடைகள், சந்தை குத்தகை இனங்கள் வரவு மூலம் வரும் ஆண்டு வருவாய் அடிப்படையில், வரவு - செலவு திட்டம் தயாரிக்கப்படுகிறது. இவ் வாண்டு, உபரி பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிடப் பட்டுள்ளது. ஆனால், மாநகராட்சி ஊழியர்களுக்கான சம்ப ளம், சேமநல நிதி, ஓய்வூதி யம், குடும்ப ஓய்வூதியம், மாநகராட்சி வாங்கியுள்ள கடனுக்கான வட்டி, வாகனங் கள் பராமரிப்பு, எரிபொருள் செலவு, குப்பை சேகரிக் கும் மகளிர் சுய உதவி குழு வினருக்கான நிதி ஒதுக் கீடு என அடிப்படை செலவினங் களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால், வளர்ச்சி பணி களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வில்லை என மாநகராட்சி வட்டாரத்தில் பேசப் படுகிறது.

Last Updated on Wednesday, 24 February 2010 07:12
 

மாநகராட்சி பட்ஜெட்: நாளை அனைத்து கட்சிக் கூட்டம்

Print PDF

தினமலர் 23.02.2010

மாநகராட்சி பட்ஜெட்: நாளை அனைத்து கட்சிக் கூட்டம்

சென்னை :சென்னை மாநகராட்சியில் 2010-11ம் ஆண்டின் பட்ஜெட் தொடர்பாக அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என்று மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார்.சென்னை மாநகராட்சியின் 2010-11ம் ஆண் டின் பட்ஜெட் வரும் மார்ச் 15ல் வெளியிடப்பட உள்ளது. பட்ஜெட் தயாரிப்பது தொடர்பாக பல்வேறு நிலைகளில் ஆலோசனைக் கூட்டங் கள் நடத்தப்பட்டு வருகின்றன.நேற்று காலை மேயர் சுப்ரமணியன் தலைமையில் கமிஷனர் ராஜேஷ் லக்கானி, துறைத் தலைவர்கள், மண்டல அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், மண்டலங்களிலும் துறைகளிலும் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்தும் மண்டல அதிகாரிகள், துறைத் தலைவர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். ஆலோசனைக் கூட்டம் இரண்டு மணி நேரம் நடந்தது.2010-11ம் ஆண்டின் பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக நாளை (24ம் தேதி) அனைத்து கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார்.இந்த பட்ஜெட்டில், கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கு முக்கியத்தும் கொடுத்து கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் மேயர் கூறினார்.

Last Updated on Tuesday, 23 February 2010 07:15
 


Page 26 of 31