Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Financial Management

திருப்பூர் மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல்

Print PDF

தினமணி 26.02.2010

திருப்பூர் மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல்

திருப்பூர், பிப்.25: திருப்பூர் மாநகராட்சியில் 2010-11 ஆண்டுக்கான பட்ஜெட் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில் ரூ.8.77 கோடி பற்றாக்குறை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட்டை மேயர் க.செல்வராஜ் தாக்கல் செய்தார். மொத்தம் ரூ.127.04 கோடி வரவும், ரூ.135.81 கோடி செலவும் இருக்கும் என்று, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செலவு அதிகரிப்பதால் சுமார் ரூ.8.77 கோடி பற்றாக்குறை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநகராட்சியில் மொத்தமுள்ள 83 ஆயிரத்து 126 வரிவிதிப்புகள் மூலம் சொத்துவரியாக ரூ.13.75 கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் தொழில்வரி மூலம் ரூ.13.11 கோடி வருவாய் கிடைக்கும்.

பத்திரப்பதிவுத் துறையால் மாநகராட்சி எல்லைக்குள் வசூலிக்கப்படும் முத்திரைத் தீர்வை மீதான மிகுவரியில் 95 சதவீதம் மாநகராட்சிக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. வணிகவரித் துறை வசூலிக்கும் கேளிக்கை வரியில் 90 சதவீதம் மாநகராட்சிக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.3.70 கோடி வருவாய் கிடைக்கும்.

குத்தகை இனங்கள் மூலம் ரூ.4.38 கோடி கிடைக்கும். மாநில நிதிக்குழு பரிந்துரைப்படி ரூ.13.08 கோடியும், 12-வது நிதிக்குழு மானியம் மூலம் ரூ.2.18 கோடியும் கிடைக்கும். சட்டப்பேரவை மற்றும் மக்களவை தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.75 லட்சம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2010-11ம் ஆண்டு பட்ஜெட்டில் பணியாளர் ஊதியத்துக்காக ரூ.95 லட்சம் செலவாகும் என திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சி வாங்கிய கடனை திருப்பி செலுத்த ரூ.7.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சாலைகள், சிறு பாலங்கள், மழைநீர் வடிகால் கட்டுதல், தெருவிளக்கு அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் வசதிகள் உள்ளிட்ட மூலதனப் பணிகளுக்காக ரூ.68.95 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Last Updated on Friday, 26 February 2010 09:03
 

பெரிய திட்டங்கள் ஒன்றுமில்லை ! வரவு ரூ.127.04 கோடி; செலவு ரூ.135.81 கோடி : ரூ.8.77 கோடிக்கு பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்

Print PDF

தினமலர் 26.02.2010

பெரிய திட்டங்கள் ஒன்றுமில்லை ! வரவு ரூ.127.04 கோடி; செலவு ரூ.135.81 கோடி : ரூ.8.77 கோடிக்கு பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்

திருப்பூர் மாநகராட்சி யின் 2010 - 11ம் ஆண்டுக் கான வரவு - செலவு திட்ட அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யும் கூட்டம், மாமன்ற கூடத்தில் நேற்று நடந்தது. வரவு 127.04 கோடி; செலவு 135.81 கோடி; பற்றாக்குறை 8.77 கோடி ரூபாய் என அறி விக்கப்பட்டது. நகரின் வளர்ச்சியை திட்டமிட்டு, பெரிய அளவிலான திட் டங்கள் அறிவிக்கப்பட வில்லை. குப்பை அள்ளும் பணிக்காக மட்டும் பெரும் தொகை ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சியின் 2010 - 11ம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யும் கூட்டம், மாமன்ற கூடத்தில் நேற்று நடந்தது. கமிஷனர் ஜெயலட்சுமி, துணை மேயர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். மேயர் செல்வராஜ், வரவு - செலவு திட்ட அறிக்கையை மன்றத் தில் தாக்கல் செய்து, அதன் மீது உரை நிகழ்த்தினார். வருவாய், மூலதன நிதி; குடிநீர் வினியோகம், வடிகால் நிதி; ஆரம்ப கல்வி நிதி ஆகிய மூன்று பிரிவுகளை உள்ளடக்கி வரவு - செலவு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்த வரவு 127.04 கோடி; செலவு 135.81 கோடி; பற்றாக் குறை 8.77 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டது.

மேயர் செல்வராஜ் பேசியதாவது: கடந்த பட்ஜெட்டில் அறி விக்கப்பட்ட திட்டங்களில் பெரும்பாலானவை நிறை வேற்றப்பட்டுள்ளன; பல பணிகள் நடக்கின்றன. நடப்பு நிதியாண்டில், மக்களின் அடிப் படை வசதிகளை மேம்படுத்த பல்று பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளன. ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக மாமன்ற கூடம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. டி.எம்.எஸ்., நகர், ஜே.பி., நகர், மூர்த்தி நகர், கவுண்டம் பாளையம் ஆகிய இடங்களில் 2.73 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புதிதாக பகிர்மான குடிநீர் குழாய்கள், ஆழ்குழாய் கிணறு கள்; கைப்பம்புகள் அமைக்க 1.07 கோடி ரூபாய் மதிப் பீட்டில் பணிகள் செய்ய உத் தேசிக்கப்பட்டுள்ளது. புதிதாக தெரு விளக்குகள் அமைக்க 1.80 கோடி ரூபாய்; மின் மயானம் முதல் அணைக்காடு வரை நொய்யல் ஆற்றங்கரையில் புதி தாக அமைக்கப்படும் ரோட் டில் தெருவிளக்குகள் அமைக்க 21 கோடி ரூபாய்; பேப்ரி கேஷன் ரோட்டில் 10 லட்ச ரூபாயில் தெருவிளக்குகள் அமைக்க உத்தேசிக்கப் பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டு வரும் மாநகராட்சி அலுவலகத்திற்கு கம்ப்யூட்டர் வசதிகள் செய்ய 55 லட்ச ரூபாய்; திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் 180 குப்பை சேகரிக்கும் தொட்டி கள் வாங்க 70 லட்ச ரூபாய்; உரக்கிடங்கு மேம்பாட்டுக்காக "புல்டோசர்' வாங்க 52 லட்ச ரூபாய்; சுகாதார பிரிவுக்கு மூன்று டம்பர் பிளேசர் வாக னங்கள் வாங்க 45 லட்ச ரூபாய்; குப்பை சேகரிக்கும் தொட்டி யுடன் கூடிய தள்ளுவண்டிகள் வாங்க 20 லட்ச ரூபாய் என பணிகளை செய்ய உத்தேசிக் கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை குழாயை தூர் வாருவதற்கு இரண்டு இயந்திரங்கள் வாங்க 16 லட் சம்; முகக்கவசம், ஆக்ஸிஜன் வாயு உருளை, இதர உபகர ணங்கள் வாங்க 10 லட்சம்; நடமாடும் தற்காலிக கழிப் பறை பெட்டிகள் வாங்க நான்கு லட்சம்; பழைய பஸ் ஸ்டாண்ட், புது பஸ் ஸ்டாண்டில் சர்வதேச தரத்தில் கழிவறை வளாகம் அமைக்க 50 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்ய உத்தேசிக்கப் பட்டுள்ளது. துப்புரவு ஊழியர்களுக்கு கையுறை வாங்கவும், அனைத்து கழிவு நீர் தொட்டி களில் வெளியேறும் கொசுக் களை கட்டுப்படுத்த வலைகள், தளவாடப் பொருட்கள் வாங்க 13 லட்சம்; மாநகராட்சி மருந்தகங்களுக்கு தேவையான மருந்துகள் வாங்க, ஐந்து லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

குடிசைப்பகுதிகளில் அடிப் படை வசதிகள் செய்ய, மாநக ராட்சி நிதியில் 20 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடிசைப்பகுதிகளில் ரோடு வசதி, குடிநீர் வசதி உட்பட அடிப்படை வசதிகள் செய்ய 64 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. குடிநீர் வினியோகத்தை சீரமைக்கும் பொருட்டு தேவை யான பகுதிகளில் நீர்தேக்கத் தொட்டிகள், குடிநீர் வினியோக குழாய்கள் அமைக்க அரசு கடன் மற்றும் மானியத்துடன் 25 கோடி ரூபாய் செலவில் இப் பணிகள் மேற்கொள்ளப்படும். ஜம்மனை ஓடை, சங்கிலிப் பள்ளம் ஓடையை சுத்தம் செய்யவும், கரைகள் கட்டு மான பணிகள் செய்யவும் உத் தேசிக்கப்பட்டுள்ளது. தனியார் பங்களிப்புடன் மாநகராட்சி பூங்காக்கள் மேம்படுத்தப் படும். புதிதாக வரன்முறைப்படுத் தப்பட்ட பகுதிகளில் 40 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடி கால் கட்டும் பணி கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்டது; 10 கோடி ரூபாய் அளவிலான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 30 கோடி ரூபாய்க் கான பணிகள் நடப்பாண்டில் தொடர்ந்து நடக்கும்.
தமிழ் நாடு நகர்ப்புற சாலை மேம் பாட்டு திட்டத்தில், 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன சாலைகள் அமைப்பதற் கான பணி, கடந்த நிதியாண் டில் எடுத்துக் கொள்ளப்பட்டு, செயலாக்கம் பெற்று வருகிறது. இவ்வாறு, மேயர் பேசினார். கமிஷனர் ஜெயலட்சுமி பேசியதாவது: "டூரிப்' திட்டத்தில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன சாலைகள் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. அடிப் படை வசதிகளை செய்ய கடந் தாண்டு ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தாலும், 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேலைகள் செய்யப்பட்டுள்ளன. குடிசை மேம்பாட்டு திட்டத் தில், குடிசை பகுதிகளில் அடிப் படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. புதிதாக வீடுகளை கட்டுவதற்கு 80 ஆயிரம் ரூபாய்; வீடுகளை செப்பனிட 40 ஆயிரம் ரூபாய் பயனாளி களுக்கு வழங்கப்படுகிறது. பயனாளிகள் மத்தியில் போதிய ஆர்வம் இல்லை. அதனால், பிற குடிசைப்பகுதிகளில் உள்ள வர்களுக்கு இத்திட்டத்தை செயல்படுத்த தற்போது அரசு அனுமதி வழங்கி உள்ளது, என்றார். .கம்யூ., : பட்ஜெட் புத்தகம் அலங்காரமாக மஞ்சள் வர்ணத்தில் உள்ளது. மஞ்சள் நிறத்தை இரண்டு விதமாக கூறலாம்; மங்கலகரமானது; அதே சமயம், .பி., கொடுக்க "மஞ்சள் நோட்டீஸ்' என்பர். அதை, மாநகராட்சியில் ஒன்றும் நடக்கவில்லை என எடுத்துக்கொள்ளலாம்.

.தி.மு.., : மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய முன்னுரிமை கொடுக்கப்படவில்லை. அலங்கார பட்ஜெட்டாக உள்ளது. சுகாதார பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. மாநகராட்சி வருவாயைப் பெருக்க, தொழில் வரி வசூலை சீரமைக்க வேண்டும்.

.தி.மு.., : மக்களின் எதிர்பார்ப்பும், மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளும் முழுமையாக நிறைவேற்றப்பட வில்லை. பெரிதாக திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாத, திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட், ஏமாற்றம் தருகிறது. இந்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள பணிகளை செய்வதற்கான எவ்வித உத்தரவாதமும் இல்லை.

மா.கம்யூ., : கோவில் வழியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க முயற்சி நடக்கிறது. அங்கு, மாநகராட்சிக்கு சொந்தமாக 13 ஏக்கர் இடம் உள்ளது; ஆனால், 4.5 ஏக்கர் இடமே உள்ளதாக, அரசுக்கு மாநகராட்சி அறிக்கை கொடுத்துள்ளது. அங்கு, பஸ் ஸ்டாண்ட் வரும் நடவடிக்கையை மாநகராட்சி தடுப்பதாக உள்ளது.

காங்கிரஸ் : மேம்போக்காக பார்த்தால், இந்த பட்ஜெட்டில் ஒன்றும் இல்லாதது போல் தோன்றும். ஆனால், பலாப்பழம் போல் வெளியே முள்ளாகவும், உள்ளே ருசியாகவும்
இந்த பட்ஜெட் உள்ளது. பல்வேறு திட்டப்பணிகள் நிறைவடைந்த பின், கஞ்சிப்பலா
போன்றில்லாமல், ருசிக்கும் பலாப்பழமாக இருக்கும்.

Last Updated on Friday, 26 February 2010 06:15
 

குடந்தை நகராட்சியின் நிதி நிலை அறிக்கை தாக்கல்

Print PDF

தினமணி 25.02.2010

குடந்தை நகராட்சியின் நிதி நிலை அறிக்கை தாக்கல்

கும்பகோணம், பிப்.24: கும்பகோணம் நகராட்சியின் 2010-11 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ரூ. 395 கோடி பற்றாக்குறை என அறிவிக்கப்பட்டது.

கும்பகோணம் நகர்மன்றத்தின் அவசரக் கூட்டம் புதன்கிழமை தலைவர் சு.. தமிழழகன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நகர்மன்ற மூத்த உறுப்பினர் ரா.துரை, நகர்மன்றத் துணைத் தலைவர் தர்மபாலன், நகராட்சி ஆணையர் பூங்கொடி அருமைக்கண், நகரமைப்பு முதுநிலை அலுவலர் கோபாலகிருஷ்ணன், நகராட்சிப் பொறியாளர், மேலாளர் மற்றும் உறுப்பினர்கள் விவாதித்தனர். தொடர்ந்து, 2010-11 ஆம்ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில் 2010-11ஆம் நிதியாண்டின் மொத்த வருவாய் வரவு மற்றும் மூலதன வரவு ரூ. 3,925 கோடியும், வருவாய் மற்றும் மூலதனச் செலவுகள் ரூ. 4,320 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் நிகர பற்றாக்குறையாக ரூ. 395 கோடி என அறிவிக்கப்பட்டு, சொத்துவரி முதலான வருவாய் இனங்களில் விடுபட்ட இனங்களைக் கண்டறிந்து வரிவிதிப்புடன், வழக்கு இனங்கள் மற்றும் இதர நிலுவை இனங்களை நேரில் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்து தீவிர வசூல் செய்து நிதிப்பற்றாக்குறையை சீர் செய்வது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Last Updated on Thursday, 25 February 2010 10:58
 


Page 25 of 31