Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Financial Management

மாநகராட்சி பட்ஜெட் மணக்கும் மல்லிகைப் பூ

Print PDF

தினமணி 10.03.2010

மாநகராட்சி பட்ஜெட் மணக்கும் மல்லிகைப் பூ

திருச்சி, மார்ச் 9: மாநகராட்சி பட்ஜெட் மணக்கும் மல்லிகைப்பூ என்றார் மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி.

திருச்சி மாமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பட்ஜெட் விவாதக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்களைத் தொடர்ந்து பேசிய அவர் இதைக் குறிப்பிட்டார். நடைபெற்ற விவாதம்:

மூக்கன் (திமுக) : யானைக்குளம் வணிக வளாகத்தை விரைவில் கட்டி முடித்தால் இந்தப் பற்றாக்குறையை ஈடுசெய்ய முடியும். பஞ்சப்பூரில் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். வணிக வளாகங்கள் கட்டும்போது வாகன நிறுத்தத்துக்கு இடம் ஒதுக்க அறிவுறுத்த வேண்டும். இடம் ஒதுக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜி. ஜெரோம் ஆரோக்கியராஜ் (காங். குழுத் தலைவர்): புனித சிலுவைக் கல்லூரி அருகே இரு சக்கர வாகனங்களை நிறுத்த இடம் அமைத்துக் கொடுத்தால், அதன்மூலம் ஆண்டுதோறும் வருமானம் கிடைக்கும். சுகாதாரப் பணியாளர்கள் இல்லாமல் எந்தத் திட்டமும் செயல்படுத்த முடியாது. ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் தொடர்பாக தீர்க்கமான முடிவை மாநகராட்சி எடுக்க வேண்டும்.

அ. ஜோசப் ஜெரால்டு

(தேமுதிக) : கடந்த பட்ஜெட்டுகளில் போடப்பட்ட திட்டங்களை நிறைவேற்றவில்லை. இப்போது போடப்பட்டுள்ள பட்ஜெட்டில், கடன் தொகையும், மத்திய அரசின் நிதியும்தான் அதிகமாக இருக்கிறது. மாநில அரசின் நிதியும், மாநகராட்சியின் நிதியும் குறைவாகவே உள்ளன. மாநகராட்சி நிதி நிலையை உயர்த்தாமல் நமக்கென புதிய திட்டங்களை உருவாக்க முடியாது.

ரெ. அறிவுடைநம்பி ( திமுக கோட்டத் தலைவர்) : வார்டு குழுவுக்கான தொகையை ரூ. 60 லட்சத்திலிருந்து ரூ. ஒரு கோடியாக உயர்த்த வேண்டும். நிதிக்குழுவில் இதுதொடர்பாக தீர்மானம் அளித்தும், பட்ஜெட்டில் குறிப்பிடாதது வருத்தத்தைத் தருகிறது.

என். மரியம்பிச்சை (அதிமுக) : எனது உறவினரின் சிறுவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார். காய்ச்சலுக்கு மருந்தே இல்லை என்கிறார்கள். அப்படியென்ன காய்ச்சல். விஐபிக்களுக்கு காய்ச்சல் வந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்?

இவற்றுக்குப் பதிலளித்து ஆணையர் த.தி. பால்சாமி பேசியது:

வார்டு குழுக்களுக்கு நிதி ஒதுக்குவது முதலீட்டு நிதியைவிட அதிகமாகிவிடும். நிர்வாக ரீதியாக இது சாத்தியமில்லை.

பல்வேறு திட்டங்கள் திருச்சிக்கு வரவுள்ளன. இப்போது குறை சொல்பவர்கள் அடுத்த ஆண்டு குறைகளைத் தேட வேண்டிவரும். இது காகிதப் பூ அல்ல, உண்மையில் மணக்கும் மல்லிகைப் பூ. நிதி வரவுக்குத் தகுந்தாற்போல, புதிய திட்டங்களை நிறைவேற்றலாம். வரியில்லாத பட்ஜெட் இதுதான்.

உரிய நேரத்தில் ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் ஊதியம் அளிக்கப்படுகிறது. ஒப்பந்ததாரர்களுக்கு பணிகள் முடிந்தவுடன் பணம் வழங்கப்படுகிறது. வேறெந்த உள்ளாட்சியிலும் இதுபோன்ற நடைமுறை இல்லை என்றார்.

மேயர் எஸ். சுஜாதா: அதிமுக உறுப்பினர் என். மரியம்பிச்சையின் உறவினரான சிறுவன் இறந்தது டெங்கு காய்ச்சலால் அல்ல. 4 கோட்டங்களுக்கும் பூங்காக்களை மேம்படுத்த உள்ளோம். யானைக்குளம் வணிக வளாகம் கட்டும் பிரச்னையில் வழக்கு முடிந்து இந்த ஆண்டே பணிகள் தொடங்க வாய்ப்புள்ளது என்றார்.

Last Updated on Wednesday, 10 March 2010 09:23
 

கோவை மாநகராட்சி மார்ச் 15}ல் பட்ஜெட் தாக்கல்

Print PDF

தினமணி 09.03.2010

கோவை மாநகராட்சி மார்ச் 15}ல் பட்ஜெட் தாக்கல்

கோவை, மார்ச் 8: கோவை மாநகராட்சியில் மார்ச் 15}ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

÷மாநகராட்சி பட்ஜெட் தொடர்பாக அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம், மேயர் ஆர்.வெங்கடாசலம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா முன்னிலை வகித்தார். பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகளிடமும் கருத்து கேட்கப்பட்டது. கூட்டத்தில் துணை மேயர் நா.கார்த்திக், அனைத்துக்கட்சி பிரதிநிதிகள், மண்டல தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர்கள் பங்கேற்றனர்.

÷பட்ஜெட் கூட்டம் மார்ச் 15}ம் தேதி நடைபெறும் என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Last Updated on Tuesday, 09 March 2010 10:01
 

எட்டு பேரூராட்சிகளுக்கு அலுவலகம் கட்ட ரூ.1.68 கோடி நிதி ஒதுக்கீடு

Print PDF

தினமலர் 01.03.2010

எட்டு பேரூராட்சிகளுக்கு அலுவலகம் கட்ட ரூ.1.68 கோடி நிதி ஒதுக்கீடு

தேனி:தேனி மாவட்டத்தில் எட்டு பேரூராட்சிகளில் அலுவலகங்கள் கட்டுவதற்கு ரூ.1.68 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள் ளது. பெரியகுளம் நகராட்சிக்கு புதிய அலுவலக கட்டடம் கட்டுவதற்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. போடி நகராட்சியில் கூடுதல் அலுவலக கட்டடம் கட்டுவதற்கு ஒன்பது லட்சம் ரூபாய், கம்ப்யூட்டர் அறை கட்டுமானத்திற்கு ஆறு 6 லட்சம் ரூபாய், தென்றல் நகரில் சிறுவர் பூங்கா அமைக்க ஏழு லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பேரூராட்சிகளுக்கு கட்டடம்: வடுகபட்டி பேரூராட்சி அலுவலகம் கட்டுவதற்கு 20 லட்சம், ஓடைப்பட்டி பேரூராட்சி அலுவலகம் மற்றும்வணிக வளாகம் கட்டுவதற்கு 30 லட்சம், குச்சனூர் பேரூராட்சி அலுவலகம் மற்றும் வணிக வளாகம் கட்டுவதற்கு 27.10 லட்சம், அனுமந்தன்பட்டி பேரூராட்சி அலுவலகம் கட்டுவதற்கு 14.75 லட்சம், பண்ணைப்புரம் பேரூராட்சி அலுவலகம் கட்டுவதற்கு ரூ.14.75லட்சமும், காமயகவுண்டனபட்டி பேரூராட்சி அலுவலகம் கட்டுவதற்கு 19.90 லட்சமும், தேவதானப்பட்டி பேரூராட்சி அலுவலகம் கட்டுவதற்கு 19.90 லட்சம், ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகம் கட்டுவதற்கு 20 லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சமுதாய கூடங்கள்: தேவாரம் மூணான்டிபட்டியில் 12 லட்சம் ரூபாய் செலவிலும், அனுமந்தன்பட்டி கார்க்கில் சிக்கையன்பட்டியில் 11.20 லட்சம் ரூபாயிலும், தாமரைக்குளம் பங்களாபட்டியில் 15.50 லட்சம், ஹைவேவிஸ் மகாராஜமேட்டில் 10.20 லட்சம் செலவிலும் சமுதாய கூடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேவாரம் பஸ்ஸ்டாண்டில் பத்து லட்சம் ரூபாய் செலவில் வணிகவளாகமும், ஹைவேவிஸ் பேரூராட்சி அலுவலக கட்டட முதல்தளத்தில் 12 லட்சம் செலவில் மன்ற கூட்ட அரங்கமும், 16.50 லட்சத்தில் அணைகட்டு அருகில் 37.60 லட்சம் ரூபாயில் விருந்தினர் மாளிகையும் கட்டப்பட உள்ளது.

Last Updated on Monday, 01 March 2010 06:50
 


Page 24 of 31