Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Financial Management

நெல்லை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை மார்ச் 24 ல் தாக்கல்

Print PDF

தினமணி 19.03.2010

நெல்லை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை மார்ச் 24 ல் தாக்கல்

திருநெல்வேலி, மார்ச் 18: திருநெல்வேலி மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை இம் மாதம் 24- ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.

இம் மாநகராட்சி மாமன்றத்தின் சாதாரணக் கூட்டம் இம் மாதம் 24- ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் அ.லெ. சுப்பிரமணியன் தலைமை வகிக்கிறார். துணை மேயர் கா. முத்துராமலிங்கம், ஆணையர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

கூட்டத்தில், மாநகராட்சியின் வருவாய் மற்றும் மூலதன நிதிக் கணக்கு, குடிநீர் மற்றும் வடிகால் நிதி கணக்கு மற்றும் ஆரம்ப கல்வி நிதி கணக்கு ஆகியவற்றுக்கான 2009 - 2010 ஆண்டுக்கான திருத்திய வரவு - செலவு திட்ட மதிப்பீடு, 2010 - 2011 ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவு திட்ட மதிப்பீடு ஆகியவை தாக்கல் செய்யப்படுகின்றன. பின்னர், நிதிநிலை அறிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது. விவாதத்துக்கு பின்னர் நிதிநிலை அறிக்கைக்கு மாமன்றம் ஒப்புதல் வழங்குகிறது.

Last Updated on Friday, 19 March 2010 11:05
 

வரிகள் இல்லா பற்றாக்குறை பட்ஜெட்: சென்னை மாநகராட்சியில் தாக்கல்

Print PDF

தினமணி 16.03.2010

வரிகள் இல்லா பற்றாக்குறை பட்ஜெட்: சென்னை மாநகராட்சியில் தாக்கல்

சென்னை, மார்ச் 15: சென்னை மாநகராட்சியில் திங்கள்கிழமை புதிய வரி விதிப்பு, வரி உயர்வு இல்லாத, பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கவுன்சில் சிறப்புக் கூட்டத்தில் 2010}2011}ம் ஆண்டுக்கான மாநகராட்சி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நிதி மற்றும் வரிவிதிப்பு நிலைக்குழுத் தலைவர் ராதா சம்பந்தன், நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதன் விவரம்: பழைய வரி விகிதங்களை உயர்த்தாமலும், புதிய வரிவிதிப்பு இன்றியும், 122 அறிவிப்புகளைக் கொண்டதாக நிதி நிலை அறிக்கை இருந்தது. 2010}2011}ம் நிதியாண்டில் மொத்த வரவு ரூ. 1,787.90 கோடியாகவும், மொத்த செலவு ரூ. 1,789.03 கோடியாகவும் இருக்கும் என கணக்கிடபட்டுள்ளது. இதனால் ரூ. 1.13 கோடி பற்றாக்குறை வரும் என தெரிகிறது.

வருவாய் தலைப்பில் வரவு ரூ. 1023.25 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ. 1001.72 கோடியாகவும் இருக்கும். மூலதன வரவு ரூ. 646 கோடியாகவும், மூலதன செலவு ரூ. 632.50 கோடியாகவும் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

வருவாய் முன்பணம் தலைப்பில் பிடித்தங்கள் ரூ. 65.31 கோடியாகவும், செலவினங்கள் 49.61 கோடியாகவும், மூலதன முன்பணம் தலைப்பில் பிடித்தங்கள் ரூ. 14 கோடியாகவும், செலவினங்கள் ரூ. 35 கோடியாகவும் இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

மூலதன வைப்புத் தொகை தலைப்பில் பிடித்தங்கள் ரூ. 38 கோடியாகவும், செலவினங்கள் ரூ. 27 கோடியாகவும் இருக்கும் என்றும் மூலதனக் கடன் திருப்பி செலுத்துதல் தலைப்பில் செலவினங்கள் ரூ. 43.20 கோடியாக இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இறுதியாக ரூ. 1.13 கோடி பற்றாக்குறையாகும்.

நிதி நிலை அறிக்கையில் கல்வி, சுகாதாரம், சாலைகள், பூங்காக்கள் உள்ளிட்ட துறைகளின் கீழ் 122 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நிதி ஒதுக்கீடு: சாலைகள் மேம்பாடு, மின்தூக்கி வசதியுடன் கூடிய நடைபாதை மேம்பாலம் அமைத்தல், மிதிவண்டி பாதைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ. 30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்வாய் தொகுப்பு அமைக்கும் திட்டத்துக்காக, ரூ. 250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பாலங்களை அகலப்படுத்துதல், பலப்படுத்தி அழகுபடுத்துதல் பணிக்காக ரூ. 60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கட்டடங்களை பழுது பார்க்கும் பணி உள்ளிட்ட கல்வித் திட்டங்களுக்காக ரூ. 103.92 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை பணிகளுக்கென ரூ. 1 கோடியும், குடும்ப நலத் துறைக்கென ரூ. 1.25 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Last Updated on Tuesday, 16 March 2010 11:25
 

கல்வி, சுகாதாரத்துக்கு அதிக நிதி : மாநகராட்சி நிதிக்குழு முடிவு

Print PDF

தினமலர் 12.03.2010

கல்வி, சுகாதாரத்துக்கு அதிக நிதி : மாநகராட்சி நிதிக்குழு முடிவு

கோவை: நடப்பாண்டு மாநகராட்சி பட்ஜெட்டில் கல்வித்துறைக்கும், சுகாதாரத்துறைக்கும் அதிக நிதி ஒதுக்க நிதிக்குழு கூட்டத்தில் முடிவானது.கோவை மாநகராட்சி நிதிக்குழு கூட்டம் தலைவர் நந்தகுமார் தலைமையில் நடந்தது. கமிஷனர் அன்சுல் மிஸ்ரா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், நடப்பாண்டிற்கான மாநகராட்சி பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைக்கும் நிதி ஒதுக்குவது குறித்த ஆலோசனை மேற்கொள்ளப் பட்டது. கல்வித்துறைக்கும், சுகாதாரத்துறைக்கும் அதிக நிதி ஒதுக்க நிதிக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் தெரிவித்தனர்.

இதில், நிதிக்குழு உறுப்பினர்கள் கூறியதாவது : இரு துறைகளையும் மேம்படுத்த பல திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மாநகராட்சி பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாற்றப்படும். நகரமேம்பாடு, சுகாதாரம், குடிநீர், வடிகால் மற்றும் பாதாள சாக்கடை ஆகியவை மேம்படுத்த வேண்டும். இந்த இரு துறைகளுக்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.கூட்டத்தில், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் உதயகுமார், கவுன்சிலர்கள் செந்தில்குமார், கார்த்திக் செல்வராஜ், மாநகராட்சி கணக்கு அலுவலர் கோமதிநாயகம் ஆகியோர் பங்கேற்றனர்.

Last Updated on Friday, 12 March 2010 07:01
 


Page 23 of 31