Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Financial Management

இன்று மாநகராட்சி பட்ஜெட்

Print PDF
தினமணி      27.03.2013

இன்று மாநகராட்சி பட்ஜெட்


திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் புதன்கிழமை (மார்ச் 27) தாக்கல் செய்யப்பட உள்ளது.

திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் (2013-14) கூட்டம் மேயர் அ.விசாலாட்சி தலைமையில் புதன்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

2012-13இல் திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.100 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளன.

வரும் ஆண்டிலும் ரூ.100 கோடிக்கும் கூடுதலான பணிகளை மேற்கொள்ளும் வகையில் இப் பட்ஜெட் இருக்கும் என்கின்றனர் அ.தி.மு.க. கவுன்சிலர்கள். மாநகராட்சி நிதிக் குழுத் தலைவர் சந்திரசேகர் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

துணைமேயர் சு.குணசேகரன், மாநகராட்சி ஆணையாளர் கே.ஆர்.செல்வராஜ், கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.
 

தூத்துக்குடி மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் ரூ. 3.14 கோடி பற்றாக்குறை

Print PDF
தினகரன்     27.03.2013

தூத்துக்குடி மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் ரூ. 3.14 கோடி பற்றாக்குறை


தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சியின் பட்ஜெட்டை மேயர் சசிகலாபுஷ்பா தாக்கல் செய் தார். இதில்  ரூ. 3.14 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி அவசரக் கூட்டம் மேயர் சசிகலா புஷ்பா தலைமையில் நடைபெற் றது. ஆணையர் மதுமதி, துணை மேயர் சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட 5 பஞ்சாயத்துகளிலும் உள்ள குடிசைகளை கணக்கெடுக்கப்பட்டு பட்டியலில் இணைப்பது உள்ளிட்ட 27 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 201314 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக் கையை மேயர் சசிகலா புஷ்பா தாக்கல் செய்தார். அப்போது, அவர் கூறு கையில்:

தூத்துக்குடி மாநகராட்சியில் இந்த நிதியாண்டு வருவாய் நிதியினங்கள்  இறுதிசெய்யப்பட்டதில் ரூ. 3.14 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

2013-14 ஆம் ஆண்டுக்கான வருவாய் நிதியில் ரூ. 1.4 கோடி பற்றாக்குறை ஏற்படும் என்றும் குடிநீர் நிதியில் ரூ. 4.41 கோடி உபரி வருமானம் வரும்  என்றும் கல்வி நிதியில் ரூ. 75.25 லட்சம் உபரியாக வருமானம் ஏற்படும் என் றும் உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் சொத்துவரி மற்றும் வரி யில்லா இனங்கள் மூலமாக ரூ. 10.50 கோடியும், அரசு சுழல்நிதியாக ரூ. 21.50 கோடியும், அரசு மானிய மாக ரூ. 4.10 கோடியும், ஏனைய வருமானங்கள் மூலமாக ரூ. 6.35 கோடியும் என மொத்தம் ரூ. 42.45 கோடி வருமானம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், இந்த ஆண்டு  சாலை பராமிப்பு மற்றும் கட்டட பராமரிப்பு போன்றவைகளுக்காக ரூ. 1.50 கோடியும்,  திட்ட செலவுகளுக்காக ரூ. 10 லட்சமும், பொது சுகாதார பணிகளுக் காக ரூ. 4.25 கோடியும் செலவாகும்.

சம்பளம் மற் றும் இதர செலவுகளுக்காக ரூ. 38 கோடியும் என மொத்தம் ரூ. 43.85 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

கவுன்சிலர்கள் புறக்கணிப்பால் இருக்கைகள் காலி

தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை ஏலம் விடுவது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது  தொடர்பாக கூட்டத்தில் கலந்து கொண்டு இத்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தால் பின்னர் தணிக்கையில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி கூட்டத்தை திமுக கவுன்சிலர்கள் 18 பேரும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் 3 பேரும், அதிமுக கவுன்சிலர்கள் 2 பேரும் புறக்கணித்தனர். இதனால் கூட்ட அரங்கில் இருக்கைகள் காலியாக இருந்தன.
 

மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல்

Print PDF
தினகரன்     27.03.2013

மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல்


திருப்பூர்:  திருப்பூர் மாநகராட்சியின் பட்ஜெட் இன்று (27ம் தேதி) தாக்கல் செய்யப்படுகிறது.

ஆண்டுதோறும் மாநகராட்சி, நகராட்சிகளில் மார்ச் மாத இறுதியில் பட்ஜெட் கூட்டம் நடக்கும். அடுத்த நிதியாண்டில் மேற்கொள்ள உள்ள பணிகள், அதற்கு ஒதுக்கப்படும் நிதி உள்ளிட்டவை குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்.

அதன்படி திருப்பூர் மாநகராட்சியின் வரும் நிதி ஆண்டுக்கான 2013-14ம் ஆண்டின் வரவு செலவு திட்ட அறிக்கை (பட்ஜெட்) கூட்டம் இன்று (27ம் தேதி) காலை 10 மணிக்கு மாநகராட்சி கூட்ட அரங்கில், மேயர் விசாலாட்சி முன்னிலையில் நடைபெற உள்ளது.

இதற்காக கடந்த ஒரு வாரமாக பட்ஜெட் தயராப்பு பணிகள் தீவீரமாக நடந்து வந்தன. பட்ஜெட்டில், சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிகிறது. இதேபோல் குடிநீர், ரோடு வசதி உள்ளிட்ட பணிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 


Page 7 of 31