Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

கோயம்பேடு மார்க்கெட்டில் 674 கடைகளில் நிலுவை: சொத்து வரி ரூ.1 கோடியே 77 லட்சம் வசூல்

Print PDF

தி  இந்து      21.07.2017

கோயம்பேடு மார்க்கெட்டில் 674 கடைகளில் நிலுவை: சொத்து வரி ரூ.1 கோடியே 77 லட்சம் வசூல்


கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.2 கோடியே 48 லட்சம் மதிப்பில் சொத்து வரியை நிலுவையில் வைத் துள்ள 729 கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாநகராட்சி வருவாய்த் துறை அதிகாரிகள், கோயம்பேடு சந்தையில் முகாமிட்டு, சொத்து வரி நிலுவை வைத்துள்ள கடை களை மூடும் நடவடிக்கையை மேற் கொண்டனர். அதைத் தொடர்ந்து நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, மொத்தம் 674 கடைகள் நிலுவை சொத்து வரியை செலுத்தின. இதனால் ரூ.1 கோடியே 77 லட்சம் வசூலானது. மீதமுள்ள கடைகள் குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “கணினியில் ஏற்பட்ட தவறு காரணமாக ஒரே கடைக்கு 2 ரசீதுகள் என 30 கடைகளுக்கு வந்துள்ளது. அதனால் அவற்றை ரத்து செய்துவிட்டோம். தற்போது சீல் வைக்கப்பட்டுள்ள 25 கடை களின் உரிமையாளர்கள், நிலுவை தொகையை செலுத்தி, மாநகராட்சி ஆணையரின் அனுமதி பெற்ற பின்னரே கடைகளைத் திறக்க அனுமதிக்கப்படும்” என்றார்.

 

ஈரோடு மாநகராட்சியில் குடிநீர், குத்தகை இனங்களில் 100% வரி வசூலித்து சாதனை

Print PDF

 தி இந்து     31.03.2017

ஈரோடு மாநகராட்சியில் குடிநீர், குத்தகை இனங்களில் 100% வரி வசூலித்து சாதனை

ஈரோடு மாநகராட்சியில் குடிநீர், குத்தகை இனங்களில் 100 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் சீனி.அஜ்மல்கான் தெரிவித்தார்.

ஈரோடு மாநகராட்சியின் கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின்படி, மொத்த வருவாய் வரவு ரூ.497.47 கோடியாகும். இவற்றில் வருவாய் வரவினம் மூலம் ரூ.101 கோடியும், மூலதன வரவினம் மூலம் ரூ.396 கோடியும் மாநகராட்சிக்கு வருவாயாக கிடைக்கிறது. வருவாய் வரவினங்களில் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து வரிவிதிப்புகள் மூலமாக ரூ.20 கோடிக்கு மேல் வரி வசூல் செய்யப்படுகிறது.

தொழில்வரி மூலம் ரூ.3.50 கோடியும், வணிகவளாகங்கள் உள்ளிட்ட சொத்துக்களின் மூலம் ரூ.3.31 கோடி மற்றும் சொத்துவரி, குடிநீர் வரி, வாடகை மற்றும் குத்தகை இனங்கள் உள்ளிட்டவை மூலம் ரூ.101 கோடி வருவாய் வசூல் செய்யப்படுகிறது.

மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது, பழைய ரூபாய் நோட்டுகளை வரி செலுத்துவதற்கு பயன்படுத்தலாம் என மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டதால், நிலுவையில் உள்ள வரி இனங்களை செலுத்துவதில் பொதுமக்களும், தொழில் நிறுவனத்தினரும் ஆர்வம் காட்டினர். இதனால், மாநகராட்சியின் வரி வருவாய் கணிசமாக அதிகரித்தது.

இந்த நிதியாண்டு இன்று நிறை வடையவுள்ள நிலையில், ஈரோடு மாநகராட்சி சார்பில் வரிவசூல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. நீண்டகாலமாக வரி பாக்கி வைத்துள்ள தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் வரிவசூல் செய்யும் பணியை அதிகாரிகள் விரைவுபடுத்தியுள்ளனர்.

மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை செலுத்தத் தவறினால், கடைகளை மூடி சீல் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. வரி வசூல் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் சீனி.அஜ்மல்கானிடம் பேசியபோது, “மாநகராட்சியில் பல்வேறு பணி களை மேற்கொள்ள வரி வசூலே பிரதானமாக இருந்து வருகிறது. 100 சதவீதம் வரிவசூலை எட்ட வேண்டும் என்ற இலக்கோடு, கடந்த சில மாதங்களாக தீவிரமாக அலுவ லர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதுவரை 97 சதவீதம் வரிவசூல் நடந்து முடிந்துள்ளது.

குறிப்பாக குடிநீர் வரி, குத்தகை இனம் போன்றவைகளில் 100 சதவீ தம் வரி வசூல் செய்யப்பட் டுள்ளது. சொத்து வரியில் 98 சதவீதம் வசூலாகியுள்ளன. அரசு போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் தொழிலாளர்களிடம் வசூல் செய்த தொழில்வரியை செலுத்தாமல் உள்ளன. இதனை வசூல் செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

 

சென்னை குடிநீர் வாரியம்: ரூ.93 கோடி வரி வசூல்

Print PDF

தினமணி          12.07.2016 

சென்னை குடிநீர் வாரியம்: ரூ.93 கோடி வரி வசூல்

2016-17-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், வரி, கட்டணமாக ரூ.92.77 கோடியை சென்னை குடிநீர் வாரியம் வசூலித்துள்ளது.

நிகழ் நிதியாண்டின் தொடக்கம் முதலே எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கை காரணமாக இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் முதல் காலாண்டை காட்டிலும் (ரூ.75.07 கோடி) 24 சதவீதம் அதிகமாகும்.

மேல்வரி, இணைப்பை துண்டித்தல், ஜப்தி முதலிய நடவடிக்கைகளைத் தவிர்க்கும் வகையில் வரி, கட்டண நிலுவைத் தொகையை உடனடியாகச் செலுத்த வேண்டும் என்று சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Last Updated on Tuesday, 12 July 2016 10:25
 


Page 2 of 148