Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

சூரிய குளத்தை அழகுபடுத்த ரூ.33.5 லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினமணி                30.01.2014

சூரிய குளத்தை அழகுபடுத்த ரூ.33.5 லட்சம் ஒதுக்கீடு

சூரிய குளத்தை தூய்மைப்படுத்த ரூ.33.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று புதன்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் அதன் தலைவர் க.ஆனந்தகுமாரி தெரிவித்தார்.

ஆரணி நகர்மன்றக் கூட்டம் புதன்கிழமை நகர்மன்றத் தலைவர் க. ஆனந்தகுமாரி தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் (பொறுப்பு) பா.செல்வம், துணைத்தலைவர் தேவசேனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆரணி நகராட்சியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்துக்காக ரூ.37 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணியை துவக்க ஆணையிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கவுன்சிலர் வெங்கடேசன் எழுந்து, சூரியகுளம் தூர்வாரப்பட்டு உள்ளது. இக்குளத்தை சீரமைத்து அழகுபடுத்தி படகு விடும் பணிகள் எப்போது நடைபெறும் என்றார்.

நகர்மன்றத் தலைவர்: மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் சூரியகுளத்தை அழகுபடுத்த ரூ.33.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணி நமக்கு நாமே திட்டம் மூலம் செய்யப்பட உள்ளது.

கவுன்சிலர் வி.டி.அரசு: ஆரணியில் 180 கைப்பம்புகள் உள்ளன. 210 மினி டேங்க் உள்ளது. 5388 குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளன. இதற்கு ஒரு பிட்டர் மட்டுமே உள்ளார். எப்போது அதிகப்படுத்தப்படும்?

ஆணையாளர் பா.செல்வம்: புதிதாக மேலும் 2 பிட்டர்கள் வந்துள்ளனர். மொத்தம் 3 பிட்டர்கள் உள்ளனர். எங்கு குழாய் பைப் பழுதானாலும் உடனடியாக சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கவுன்சிலர் ஜோதிலிங்கம்: ஆரணி சைதாப்பேட்டையில் பாலாஜி மனைப்பிரிவில் பூங்காவுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பூங்காவுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் அரசுப் பள்ளிக் கட்டடம் கட்ட அனுமதி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஆணையாளர் பா.செல்வம்: எதற்காக அந்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளதோ, அதற்குத்தான் அப்பணியை செய்ய வேண்டும். மாற்றி செய்யக்கூடாது. ஆகையால் பாலாஜி நகரில் பூங்காவுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் பூங்கா தான் அமைக்கப்படும்.

கவுன்சிலர் வி.டி.அரசு: ஆரணி நகராட்சியின் சுமார் ரூ. 45 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட தகன எரிவாயு மேடை செயல்படுகிறதா?

ஆணையாளர் செல்வம்: தகன எரிவாயு மேடை அமைத்த கம்பெனியினருக்கு ரூ.15 லட்சம் பணம் தராமல் உள்ளோம். அவர்கள் சடலத்தை எரிய வைத்து பார்த்தும் சரியான முறையில் சடலம் எரியவில்லை. கம்பெனியினர் சரி செய்த பின்னர் தான் தொடர்ந்து செயல்படுத்தப்பட முடியும். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

2 பள்ளியில் சோலார் சிஸ்டம்

Print PDF

தினமணி           28.01.2014 

2 பள்ளியில் சோலார் சிஸ்டம்

ராணிப்பேட்டை நகரில் உள்ள சீனிவாசன்பேட்டை, காரை நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் ரூ.6.30 லட்சத்தில் 2 கிலோ வோல்ட் சூரிய சக்தியில் மின்சாரம் தயாரிக்கும் சோலார் சிஸ்டத்தை நகர்மன்றத் தலைவர் சித்ரா சந்தோஷம் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

நகர்மன்றத் துணைத் தலைவர் ஜே.பி.சேகர், நகர கூட்டுறவு வங்கி தலைவர் கே.பி.சந்தோஷம், ஆணையர் (பொறுப்பு) ச.மணி, நகராட்சி பணி ஆய்வாளர் தமிழரசன், பள்ளி தலைமை ஆசிரியை மலர்விழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

எல்.இ.டி., மின் விளக்குகளால் காஞ்சிபுரம் ஜொலிக்கும்: முதல்கட்ட பணிகளை துவங்கியது நகராட்சி

Print PDF

தினமலர்          27.01.2014 

எல்.இ.டி., மின் விளக்குகளால் காஞ்சிபுரம் ஜொலிக்கும்: முதல்கட்ட பணிகளை துவங்கியது நகராட்சி

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் நகராட்சி பகுதியில் உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி., தொழில்நுட்பத்திற்கு மாற்றவும், கம்பங்களை ஒருசீராக்கவும், 16 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

நகராட்சி பகுதியில், பல்வேறு காலகட்டங்களில் நிறுவப்பட்ட பல்வேறு வகையான தெருவிளக்குகள் உள்ளன. அனைத்து விளக்குகளையும், மின்சாரத்தை சிக்கனமாக செலவிடும் எல்.இ.டி., தொழில்நுடப்த்திற்கு மாற்றுவதோடு, விளக்கு கம்பங்களையும் ஒரே வடிவில் அமைக்க கடந்த டிசம்பர் மாதம் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில் முடிவானது.

எட்டு கோடி ஒதுக்கீடு இதை தொடர்ந்து, முதல்கட்டமாக, காமாட்சி அம்மன் கோவில் மாட வீதி மற்றும் சன்னிதி தெரு, ஏகாம்பரநாதர் கோவில் மாடவீதி மற்றும் சன்னிதி தெரு, வரதராஜ பெருமாள் கோவில் மாடவிதி மற்றும் சன்னிதி தெரு போன்ற முக்கிய பகுதிகளில் புதிய தெருவிளக்குகள் பொருத்தப்பட உள்ளன. முதல் கட்ட பணிகளுக்காக, எட்டு கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளது.

அடுத்த கட்டத்தில், காமராஜர் சாலை, காந்தி ரோடு, திருக்கச்சி நம்பி தெரு, நான்கு ராஜ வீதிகள், அரக்கோணம் சாலையில் ஒலிமுகமதுபேட்டை வரை, புதிய ரயில் நிலையத்திலிருந்து ஜவஹர்லால் நேரு சாலை வரை, வள்ளல் பச்சையப்பன் தெரு, போன்ற சாலைகளில் புதிய தெருவிளக்குகள் பொருத்தப்படும் என, தெரிகிறது.

இந்த திட்டம் குறித்து, நகராட்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், ''கடந்த டிசம்பர் மாதம், முதல்வர் தலைமையில் நடந்த மாவட்ட ஆட்சியர்கள் கலந்தாய்வு கூட்டத்தில், இந்த திட்டத்திற்காக, 16 கோடி ரூபாய் நிதி அறிவிக்கப்பட்டது. அதன்படி காஞ்சிபுரம் நகர பகுதிகளில் 30 மீட்டருக்கு ஒரு மின் கம்பம் வீதம், 1,800 புதிய மின் கம்பங்கள் நட்டு, விளக்குகள் அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளது. அடுத்த மாதத்திற்குள் இந்த பணி துவங்கி விடும்,'' என்றார்.

 


Page 6 of 135