Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டக் கருத்தரங்கு

Print PDF

தினமணி 17.07.2009

நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டக் கருத்தரங்கு

பழனி, ஜூலை 16: மதுரை மண்டல அளவிலான பொன் விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் குறித்த இரு நாள் பயிற்சி மற்றும் கருத்தரங்கம் பழனியில் வியாழக்கிழமை தொடங்கியது.

கருத்தரங்கை மதுரை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் சீனி அஜ்மல்கான் தொடக்கி வைத்தார். பழனி நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். மண்டலப் பொறியாளர் கருணாகரன், பழனி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பொறியாளர் சுரேஷ், துணை தலைவர் ஹக்கீம் உள்ளிட்டோர் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியை முன்னிட்டு மதுரை மண்டலத்தில் உள்ள பழனி, கொடைக்கானல், உசிலம்பட்டி, சின்னமனூர், ராமேசுவரம், திண்டுக்கல் உள்ளிட்ட 22 நகராட்சிகளைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் விற்பனை நிலையங்கள் அமைத்திருந்தனர்.

இங்கு வீட்டு உபயோகப் பொருள்கள், சிப்பியால் செய்யப்பட்ட அழகுப் பொருள்கள், மரங்களால் ஆன கைவினைப் பொருழ்கள் பலரையும் கவர்ந்தன.

இந்தக் கண்காட்சி, விற்பனை வெள்ளிக்கிழமையும் நடைபெறுகிறது.

 


Page 160 of 160