Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

திருப்பூர் தொகுதியில் ரூ.1.83 கோடிக்கு வளர்ச்சி பணிகள்

Print PDF

தினமணி 9.09.2009

திருப்பூர் தொகுதியில் ரூ.1.83 கோடிக்கு வளர்ச்சி பணிகள்

திருப்பூர், செப்.8: சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் 2009-10-ம் ஆண்டில் திருப்பூர் தொகுதியில் ரூ.1.83 கோடிக்கு பணிகள் செய்யப்பட உள்ளதாக எம்எல்ஏ சி.கோவிந்தசாமி தெரிவித்தார்.

சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி யாக 2009-10ம் ஆண்டுக்கு ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.1.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந் நிதி மூலம் திருப்பூர் பேரவை தொகுதியில் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சிப்பணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இது குறித்து எம்எல்ஏ சி.கோவிந்தசாமி செய்தி யாளர்களிடம் கூறியது:

பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் திருப்பூர் தொகுதியில் 2009-10-ம் ஆண்டில் ரூ.1 கோடியே 83 லட்சத்து 50 ஆயிரத்துக்கு பணிகள் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 9, 11செட்டி பாளையம் ஊராட்சியில் 2, நல்லூர் நகராட்சியில் 2, 15 வேலம்பாளையம் நகராட்சி, கணக்கம்பாளையம், வீரபாண்டி, இடுவாய் ஊராட்சிகள் என 17 இடங்களில் தலா ரூ.3 லட்சம் மதிப்பில் ரேஷன் கடைகள்.

மாநகராட்சி 16-வது வார்டு அப்பாச்சிநகர், 25-வது வார்டு விநாயகாபுரம் பகுதிகளில் தலா ரூ.3.80 லட்சம் மதிப்பில் மின்மோட்டாருடன் ஆழ்குழாய் கிணறுகள், 34-வது வார்டு சந்தைப்பேட்டை, 15வேலம்பாளையம் நகராட்சி சிறுபூலுவபட்டி பகுதிகளில் தலா ரூ.13 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடங்கள் அமைக்கப் படும்.

தென்னம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.11 லட்சம் மதிப்பில் படிக்கட்டுகளுடன் மேல்தளத்தில் 3 வகுப்பறைகள், தொட்டிபாளையம் ஊராட்சி போயம்பாளையம் ந.நி.பள்ளியில் ரூ.10 லட்சம் மதிப்பில் 3 வகுப்பறைகள், காங்கயம் சாலை அரசு பஸ் பணிமனை அருகிலும், புஷ்பா தியேட்டர் அடுத்துள்ள வளர்மதி காம்பவுண்ட் அருகிலும் தலா ரூ.2 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடைகள் கட்டப்படும்.

மேற்குபதி ஊராட்சி சின்னேரிபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் ரூ.3 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவிலும், பொங்குபாளையம் ஊராட்சி பொங்கு பாளையம் மற்றும் நல்லூர் நகராட்சி சென்னிமலை பாளையம் பகுதிகளில் தலா ரூ.4.65 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவிலும் நீர்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்படும்.

மாநகராட்சி 41-வது வார்டு காதர்லேஅவுட்டில் ரூ.90 ஆயிரம் மதிப்பில் 15, நல்லூர் நகராட்சி 11-வது வார்டு அமர்ஜோதி கார்டனில் ரூ.1.20 லட்சம் மதிப்பில் 20 சோடியம் விளக்குகள், தொரவலூர் ஊராட்சி மூங்கில் பாளையம், கந்தம்பாளையம் பகுதிகளில் தலா ரூ.40 ஆயிரம் மதிப்பில் கல்வெட்டுபாலங்கள் அமைக்கப்படும்.

இதுதவிர மாநகராட்சி 41-வது வார்டு கதிர்லேஅவுட்டில் 11.70 லட்சத்தில் வடிகால் மற்றும் தார்சாலைகளும், தொட்டியமண்ணரை ஊராட்சி ஐஸ்வர்யா காலனியில் இரு இடங்களில் ரூ.9 லட்சம் மதிப்பில் சாக்கடை கால் வாய்கள் கட்டப்படும்.

இதுதவிர 15வேலம்பாளையம் நகராட்சியில் 2, வள்ளி புரம், 11செட்டிபாளையம், வீரபாண்டி ஊராட்சிகள், மாநகராட்சி 52-வது வார்டு ஆகிய பகுதிகளில் தலா ரூ.2.50 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையங்கள், மாநகராட்சி 29-வது வார்டு, ஆண்டிபாளையம் ஊரா ட்சியில் தலா ரூ.6.50 லட்சம் மதிப்பில் பொதுக் கழிப்பிடங்கள், நெருப்பெரிச்சல் ஊராட்சி சமத்துவ புரம் ஊ..நடுநிலைப்பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவரும் கட்டப்படும்.

கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.1.50 கோடி நிதியில் ஓ ரிரு பணிகள் நடைபெறாததை அடுத்து ரூ.15 லட்சம் நிதி உபரியாக உள்ளது. அந்நிதி இந்த ஆண்டின் பணிகளுக்கு சரிசெய்யப்படும்.

தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளுக்கான பட்டியல் மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

 

நேரு நகர புனரமைப்பு திட்ட பணிகள் துவக்கம்

Print PDF

தினமணி 08.09.2009

நேரு நகர புனரமைப்பு திட்ட பணிகள் துவக்கம்

கோவை, செப். 7: கோவை ஒண்டிப்புதூரில் ஜவாஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டத்தில் ரூ.8.50 கோடி செலவில் அடிப்படை வசதிகளுக்கான பணிகள் துவக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஒண்டிப்புதூர் திருவள்ளுவர் நகரில் நடந்த விழாவில் பங்கேற்றவர்களை கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் எஸ்.எம்.சாமி வரவேற்றார். துணை மேயர் நா.கார்த்திக் முன்னிலை வகித்தார்.

பணிகளை துவக்கி வைத்து, விழாவிற்கு ஊரகத் தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி தலைமை தாங்கினார்.

மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையர் கே.சுகுமார் நன்றி கூறினார்.

 

மேட்டுப்பாளையம் நகராட்சியில் வளர்ச்சி பணிகள்

Print PDF

தினமலர் 04.09.2009

 


Page 151 of 160