Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Economic Development

தூத்துக்குடி மாநகராட்சியில் பொருளாதார கணக்கெடுப்பு பணி தொடங்கியது

Print PDF
தினத்தந்தி         12.06.2013

தூத்துக்குடி மாநகராட்சியில் பொருளாதார கணக்கெடுப்பு பணி தொடங்கியது


தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பொருளாதார கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

கணக்கெடுப்பு பணி

நாடு முழுவதும் பொருளாதார வளர்ச்சியை கணக்கிடும் வகையில் மத்திய, மாநில அரசால் 6–வது பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 411 கணக்கெடுப்பு பகுதிகளில் கணக்கெடுப்பு நடக்கிறது. இதற்காக 134 கணக்கெடுப்பாளர்கள், 72 மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த கணக்கெடுப்பு பணியாளர்கள் நேற்று காலை மாநகராட்சி ஆணையாளர் சோ.மதுமதி வீட்டில் விவரங்களை சேகரித்து பதிவு செய்தனர். அப்போது புள்ளியியல் துணை இயக்குனர் எஸ்.முருகன், உதவி இயக்குனர் எஸ்.பரமசிவன், ஆய்வாளர் அ.சுடலைமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

வருமானத்தை கேட்க கூடாது

இது குறித்து புள்ளியியல் துணை இயக்குனர் எஸ்.முருகன் கூறும் போது, தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும், நிறுவனங்களிலும் மேற்கொள்ளப்படும் தொழில் நடவடிக்கைகள் சேகரிக்கப்பட்டு மத்திய, மாநில அரசுக்கு அளிக்கப்பட உள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கிட இந்த கணக்கெடுப்பு உதவுவதால் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் சரியான விவரங்கள் அளிக்க வேண்டும். மேலும் வருமானம் குறித்து கணக்கெடுப்பாளர்கள் விவரம் அளிப்பவர்களிடம் கேட்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர் என்று புள்ளியியல் துணை இயக்குனர் எஸ்.முருகன் தெரிவித்து உள்ளார்.
 

பொருளாதார வளர்ச்சியில் 2015ல் இந்தியா முதலிடம்

Print PDF

தினகரன் 18.08.2010

பொருளாதார வளர்ச்சியில் 2015ல் இந்தியா முதலிடம்

புதுடெல்லி, ஆக. 18: பொருளாதார வளர்ச்சியில் அடுத்த 5 ஆண்டுகளில் உலகிலேயே இந்தியா முதலிடம் பிடிக்கும் என மார்கன் ஸ்டான்லி ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

இதுகுறித்து நிதி மற்றும் பொருளாதார ஆய்வு நிறுவனமான மார்கன் ஸ்டான்லியின் ஆசியா, இந்தியாவுக்கான நிர்வாக இயக்குனரும், பொருளாதார நிபுணருமான சேத்தன் அயா வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

உலகமயமாதல், கட்டமைப்பு சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இதன் விளைவாக, அடுத்து வரும் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும். 2013 முதல் 2015ம் ஆண்டுக்குள் இந்தியாவின் வளர்ச்சி 9 முதல் 9.5 சதவீதத்தை தொடும்.

இதன்மூலம், சீனாவை அது முதலிடத்தில் இருந்து பின்னுக்கு தள்ளி விடும். 2012ல் சீனா பொருளாதார வளர்ச்சி இப்போதுள்ள 9 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகரித்துள்ள நடுத்தர வயது பிரிவினர், இளைஞர்களால் மனித சக்தி உயர்ந்து வருகிறது. வேலைக்கான வயதினர் அதிகரிக்கும் வகையில் இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவதுடன் பிறப்பு விகிதமும் குறைந்து வருகிறது. இதனால், வேலைக்கு போகாத வயதினர் (குழந்தைகள், முதியவர்கள்) எண்ணிக்கை குறைகிறது.

அடுத்தவரை சார்ந்து வாழும் பிரிவினர் எண்ணிக்கை சரிவால், நாட்டின் உற்பத்தி, வருமானம் அதிகரித்து பொருளாதார முன்னேற்றம் விரைவாகும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) உயரும். இதுதான் அடுத்த சில ஆண்டுகளில் உலகிலேயே இந்தியா முதலிடம் பெற இருப்பதற்கு காரணம்.

 

நிதியமைச்சர் பிரணாப் தகவல் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக உயரும்

Print PDF

தினகரன் 24.12.2009

நிதியமைச்சர் பிரணாப் தகவல் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக உயரும்

புதுடெல்லி : நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதம் முதல் 8 சதவீதமாக உயரும் என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
அவர் கூறியதாவது:

இந்திய பொருளாதார வளர்ச்சி 9 முதல் 10 சதவீத அளவுக்கு உயரவேண்டும் என்பது நமது நெடுநாள் விருப்பம். 2008 ஆம் ஆண்டுக்கு முன்பு நமது பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டில் உலகு தழுவிய அளவில் பொருளாதார தேக்க நிலை பரவியது. அதனால் இந்திய பொருளாதார வளர்ச்சி 2008&09ல் 6.7 சதவீதமாகக் குறைந்தது.

2009&10
ம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி பற்றிய ஆண்டு இடைக்கால ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் சென்ற வாரம் தாக்கல் செய்யப்பட்டது. 2009&10ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டுப் பகுதியில் இந்தியப் பொருளாதாரம் 7.9 சதவீதமாக உயர்ந்திருப்பதாக அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதம் முதல் 8 சதவீதமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நாம் நீண்ட காலமாக கனவு கண்ட 9 முதல் 10 சதவீத பொருளாதார வளர்ச்சி கைக்கெட்டும் தூரத்தில¢தான் உள்ளது. நம்முடைய விவசாய உற்பத்தி 4 சதவீத அளவுக்கு உயர்த்தப்படவேண்டும். இந்திய தொழில்துறை பத்து சதவீத வளர்ச்சியை எட்டும் வாய்ப்பு உள்ளது. இது இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமான அம்சமாகும் என்றார் பிரணாப்

Last Updated on Thursday, 24 December 2009 09:30
 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  Next 
  •  End 
  • »


Page 1 of 3