Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Community Development

இலவச தொழில் மேம்பாட்டு பயிற்சிக்கான பயனாளிகள் தேர்வு முகாம்

Print PDF
தினமணி         29.03.2013

இலவச தொழில் மேம்பாட்டு பயிற்சிக்கான பயனாளிகள் தேர்வு முகாம்


சாத்தூர் நகராட்சி பொன்விழா ஆண்டு,  நகர்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் இலவச தொழில் மேம்பாட்டு பயிற்சிக்கான பயனாளிகள் தேர்வு முகாம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகராட்சி பொன்விழா ஆண்டு நகர்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் இலவச தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பயனாளிகள் தேர்வு முகாம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்  நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.   இம்முகாமில் கணினி பயிற்சிக்கு 152 விண்ணப்பங்களும், இலகு ரக வாகன ஒட்டுநர் பயிற்சிக்கு 168 விண்ணப்பங்களும், தையல் பயிற்சிக்கு 34 விண்ணப்பங்களும் பெறபட்டன. இம்முகாமினை நகராட்சி ஆணையாளர் அலாவுதீன் தொடக்கி வைத்தார்.

இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் சீனிவாசன், திருப்பதி மற்றும் சமுதாய அமைப்பாளர் கீதா ஆகியோர் செய்திருந்தனர்.
 

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் 3 ஆயிரம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மேயர் தொடங்கி வைத்தார்

Print PDF
தினத்தந்தி                    27.03.2013

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் 3 ஆயிரம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மேயர் தொடங்கி வைத்தார்


திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 3 ஆயிரம் இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை மேயர் விசாலாட்சி தொடங்கி வைத்தார்.

மேயர் விசாலாட்சி

திருப்பூர் மாநகராட்சி நகர்ப் புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் 15.வேலம்பாளையம் முதலாவது மண்டல அலு வலகத்தில் உள்ள கூட்ட அரங் கில் நடந்தது. பயிற்சி முகாமை மாநகராட்சி மேயர் விசா லாட்சி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கமிஷ னர் செல்வராஜ், முதலாவது மண்டல தலைவர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். செயற் பொறியாளர் திருமுருகன் வரவேற்றார். பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு விண் ணப்பங்களை வழங்கி மேயர் விசாலாட்சி பேசியதாவது:

தமிழக முதல்அமைச்சர் ஜெயலலிதா, பெண்களின் வாழ்வாதாரம் மேம்படுத்துவ தற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முதல்அமைச்சரின் உத்தரவுப் படி திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வாழும் ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம் படுத்துவதற்காக நகர்ப்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு தொழிற் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

3 ஆயிரம் பேருக்கு பயிற்சி

இந்த திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் 920 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்பட்டு உள்ளது. தற்போது 3 ஆயிரம் இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு பயிற்சி அளித்து அவர்களுக்கு சுய வேலை வாய்ப்பு மற்றும் கடன் உதவியும் ஏற்படுத்தி தரப்பட உள்ளது. கடந்த காலங்களில் பெண்கள், ஆண்களை சார்ந்து வாழ வேண்டிய நிலை இருந்தது. தற்போது அனைத்து துறைகளிலும் மகளிர் சமூக பொருளாதாரத்தில் மேம் பட்டு வருகிறார்கள்.

தொழிற்பயிற்சிகளாக கம்ப் யூட்டர், அழகு கலை, தையல் கலை, நர்சிங் போன்ற 10க்கும் மேற்பட்ட பயிற்சிகள் அளிக் கப்படுகிறது.

இந்த பயிற்சிகள் மூலம் பெண்கள் மற்றவர்களை சார்ந்து இருக்காமல் சுய வேலைவாய்ப்பு மூலம் தங் களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முடி யும் என்ற உயர்ந்த நோக்கத் திற்காக இந்த திட்டம் உருவாக் கப்பட்டு உள்ளது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பெண்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய வேண் டும்.

இவ்வாறு மேயர் விசாலாட்சி பேசினார்.

முகாமில் கவுன்சிலர்கள் திலகர் நகர் சுப்பு, செந்தில் குமார், ஈஸ்வரன், சமுதாய அமைப்பாளர்கள் மங்கையர் கரசி, தமிழ்செல்வி, செல்வி மற்றும் 300க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி கமிஷனர் சபியுல்லா நன்றி கூறினார்.
 

மாநகராட்சி சார்பில் இலவச கணினிப் பயிற்சி

Print PDF
தினமணி      27.03.2013

மாநகராட்சி சார்பில் இலவச கணினிப் பயிற்சி


ஈரோடு மாநகராட்சி சார்பில் இலவச கணினிப் பயிற்சி பெற விரும்பும் பயனாளிகளுக்கான தேர்வு முகாம், புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் நடைபெறுகிறது.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையர் மு.விஜயலட்சுமி திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:

ஈரோடு மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஆண்கள், பெண்களுக்கான இலவச கணினிப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கம்ப்யூட்டர் அனிமேஷன் மல்டிமீடியா, எம்.எஸ்.ஆபீஸ், இன்டர்நெட், டேலி, டி.டி.பி, பேஷன் டிசைனிங் ஆகிய பயிற்சிகள் நகரின் முக்கிய பயிற்சி நிறுவனங்கள் மூலமாக அளிக்கப்பட உள்ளன.

பேஷன் டிசைனிங் பயிற்சிக்கு 5-ஆம் வகுப்பும், மற்ற பயிற்சிகளுக்கு 8-ஆம் வகுப்பும் குறைந்தபட்ச கல்வித் தகுதி. 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளலாம்.

இந்த இலவச கம்ப்யூட்டர் பயிற்சிக்கான சிறப்புத் தேர்வு முகாம், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில், ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள், ரேஷன் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ் நகல் ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும். பயிற்சி தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்திலும் விண்ணப்பம் அளிக்கலாம்.
 


Page 3 of 18