Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Community Development

30 இரவு நேர காப்பகங்கள்: இன்னும் 15 நாள்களில் செயல்படும்

Print PDF

தினமணி                 05.06.2013

30 இரவு நேர காப்பகங்கள்: இன்னும் 15 நாள்களில் செயல்படும்


சென்னை மாநகராட்சியில் திறப்பதாக அறிவிக்கப்பட்ட 30 இரவு நேர காப்பகங்கள் இன்னும் 15 நாள்களில் செயல்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகரங்களில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு ஒரு இரவு நேர காப்பகம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி சென்னையில் 65 காப்பகங்கள் திறக்கப்படவேண்டும். சென்னையில் 15 இரவு நேர காப்பகங்கள் திறக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் மேலும் 15 காப்பகங்கள் திறக்கப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இப்போது 30 காப்பகங்களும் இன்னும் 15 நாள்களில் செயல்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறியது: மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடங்களில் 14 காப்பகங்களும், வாடகை கட்டடங்களில் 16 காப்பகங்களும் செயல்பட வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் காப்பகங்களை தொண்டு நிறுவனங்கள் பராமரித்து நிர்வகிக்க முடிவு செய்யப்பட்டு, தகுந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் செயல்படும் காப்பகத்துக்கு ஆண்டுக்கு ரூ. 10.10 லட்சமும், வாடகை கட்டடங்களில் செயல்படுத்தப்படும் காப்பகத்துக்கு ரூ. 13.10 லட்சமும் பராமரிப்பு தொகையாக வழங்கப்படும். ஆக மொத்தம் 30 காப்பகங்களுக்கும் ரூ. 3.51 கோடி செலவிடப்படும்.

குறைந்தது 30 பேர் தங்கும் வகையில் ஒரு காப்பகம் உருவாக்கப்படுகிறது. இடவசதியை பொருத்து எத்தனை பேர் வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாம். காப்பகத்தில் தங்குபவர்களுக்கு இரவு உணவு மட்டும் வழங்கப்படும். ஒரு நபருக்கு ஒருநாள் உணவுக்கென ரூ.25 தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

இந்த காப்பகங்களை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்படும். மேலும் அவுட் சோர்சிங் மூலம் கண்காணிப்பு அதிகாரி ஒருவரும் நியமிக்கப்படவுள்ளார். இந்தக் காப்பகங்கள் பெரும்பாலும் ஏழை மற்றும் வீடில்லா மக்கள் வசிக்கும் பகுதிகளில் திறக்கப்படுகின்றன. இந்தக் காப்பகங்களில் மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள் ஆகியோரும் சென்று சேவையில் ஈடுபடுவார்கள்.

இப்போது திருவொற்றியூர், அம்பத்தூர், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் தலா 2 காப்பகங்கள், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 3 காப்பகங்கள், ராயபுரம் மண்டலத்தில் 4 காப்பகங்கள், ஆலந்தூரில் 1 காப்பகமும் அமைக்கப்படும். பிற மண்டலங்களில் தேவைக்கேற்ப காப்பகங்கள் அமைக்கப்படும்.

காப்பகத்தை சரிவர பராமரிக்காத தொண்டு நிறுவனங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும். கூடிய விரைவில் கூடுதலாக 35 இரவு நேர காப்பகங்கள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

Print PDF
தினகரன்          02.04.2013

இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி


திருப்பூர்:  திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டலம், முருகம்பாளையம் நடுநிலைப்பள்ளியில், நகர்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. இதில் கமிஷனர் செல்வராஜ் பேசுகையில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மக்களின் பொருளதாரத்தை மேம்படுத்துவதற்காக நகர்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்கப்படுகிறது. கம்ப்யூட்டர், அழகுகலை, நர்சிங், தையல், எம்ப்ராய்டரி, ஆடை வடிவமைத்தல் உட்பட 10 வகையான தொழில்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். நன்கு பயிற்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்யப்படும் என்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாநகராட்சி சமுதாய அமைப்பாளர்கள் மங்கையர்க்கரசி, தமிழ்ச்செல்வி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் 4வது மண்டல உதவி கமிஷனர் செல்வநாயகம் நன்றி கூறினார்.
 

நகர்ப்புற திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

Print PDF
தினமணி         29.03.2013

நகர்ப்புற திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் நகர்ப்புற திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் இரண்டு நாள்கள் நடைபெற்றன.

முகாமை நகர்மன்ற தலைவி சுமித்ராரவிக்குமார் துவக்கி வைத்தார். ஆணையர் சரவணன் பயிற்சி குறித்து விளக்கினார். இதில் தையல், நர்சிங், டி.டி.பி உள்ளிட்ட கணினி பயிற்சிகள், 3க் அனிமேசன் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்த முகாமில் 450 பேர் பயிற்சி பெற்றனர். தமிழகத்தில் தலைசிறந்த நிறுவனங்களில் இருந்து வந்த  பயிற்றுநர்கள் பயிற்சிகளை வழங்கினர்.
 


Page 2 of 18