Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Community Development

ராயப்பேட்டையில் மது அடிமைகள் மறுவாழ்வுக்கு ரூ25 லட்சத்தில் சிகிச்சை மையம்

Print PDF

தினகரன் 07.09.2010

ராயப்பேட்டையில் மது அடிமைகள் மறுவாழ்வுக்கு ரூ25 லட்சத்தில் சிகிச்சை மையம்

சென்னை, செப். 7: மது பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், ராயப்பேட்டை மாநகராட்சி நலவாழ்வு மையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணியை மாநகராட்சி சுகாதாரத் துறையும், தனியார் மருத்துவமனையும் இணைந்து மேற்கொண்டுள்ளன. இந்த பணியை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது: மது அடிமைகளுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக ரூ25 லட்சம் மதிப்பில் ராயப்பேட்டையில் 20 படுக்கைகளுடன், ஆய்வகம், மருத்துவமனைக்கூடம், மருத்துவ ஆலோசகர் அறை, மருத்துவர் அறை என பல்வேறு வசதிகளுடன் சிகிச்சை மையம் துவங்கப்பட உள்ளது.

இந்த மையத்தின் மூலம் பொதுமக்கள், மாநகராட்சி ஊழியர்கள் உட்பட அனைவரும் பயன் பெறுவார்கள். மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள், ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்கள், சமூகநல உதவியாளர்கள், பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். இந்த நவீன மருத்துவமனையை துணை முதல்வர் மு..ஸ்டாலின் ஒரு மாதத்தில் திறந்து வைப்பார். இவ்வாறு மேயர் கூறினார். துணை முதல்வர் திறக்கிறார் .

 

கோவை மாநகராட்சி முயற்சியால் போதையிலிருந்து மீண்ட 130 துப்புரவு ஊழியர்கள்

Print PDF

தினகரன்     06.09.2010

கோவை மாநகராட்சி முயற்சியால் போதையிலிருந்து மீண்ட 130 துப்புரவு ஊழியர்கள்

கோவை, செப் 6: கோவை மாநகராட்சி ஏற்படுத்திய மீட்பு மையத்தால், துப்புரவு ஊழியர்கள் 130 பேர், மதுபழக்கத்தில் இருந்து மீண்டனர்.

இது பற்றி, கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறியதாவது:

கோவை மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்கள் மதுபோதையால் பணி செய்ய முடியாமல் அடிக்கடி விடுப்பு எடுத்து வந்தனர். அவர்களின் குடும்பங்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்தன.

இதையடுத்து, மாநகராட்சி சார்பில் ஆர்.எஸ்.புரத்தில் மதுபோதை மீட்பு மையம் துவக்கப்பட்டது. இங்கு இதுவரை 148 தொழிலாளர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு 15 நாள் இலவசமாக சிகிச்சை தரப்பட்டது. இதன் மூலம், 130 பேர் முழு அளவில் மது பழக்கத்திலிருந்து விடுபட்டுள்ளனர். இவர்கள், தினமும் டாக்டர்கள் வழங்கிய மருந்து, மாத்திரையை சுகாதார அலுவலர்கள் முன் சாப்பிட்ட பின்னர், பணி வருகை பதிவேட்டில் கையெழுத்து போடுகின்றனர்.

இவர்களின் வாழ்வு மகிழ்ச்சிகரமாக அமைந்துள்ளது. இன்னும் 20 சதவீத தொழிலாளர்கள், சரியான நேரத்தில் மருந்து, மாத்திரை சாப்பிடாமல் இருக்கிறார்கள். அவர்களால் இன்னும் முழு அளவில் போதை பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் தவிக்கிறார்கள். இவர்களை மருத்துவமனையில் அனுமதித்து முறையாக மறுபடியும் சிகிச்சை தர திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியின் இந்த சேவையை, மற்ற உள்ளாட்சி அமைப்புகளும் பயன்படுத்தி கொள்ளலாம் என அழைப்பு விடுத்திருக்கிறோம். ஆனால், தொழிலாளர்களை அனுப்பும் உள்ளாட்சிகள் அதற்கென நிர்ணயிக்கப்பட்ட கட்டண தொகையை செலுத்தவேண்டும். மது போதையிலிருந்து விடுபட நினைக்கும் மக்களும் இதில் பங்கேற்கலாம். இதற்கென கட்டண நிர்ணயித்து அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

தி.மலை நகராட்சி பொன்விழா நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் சிறப்பு பயிற்சி வகுப்புகள்

Print PDF

தினமணி 20.08.2010

தி.மலை நகராட்சி பொன்விழா நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் சிறப்பு பயிற்சி வகுப்புகள்

திருவண்ணாமலை, ஆக. 19: திருவண்ணாமலை நகராட்சி பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

சமையல் கலை, .சி. மெக்கானிக், கணினி பயிற்சி என 4 மாதங்கள் 88 பயனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீ கணேஷ் கேட்டரிங் கல்லூரியில் சமையல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதில் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற பயனாளிகள் சமைத்த உணவுப் பொருள்கள் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நகர்மன்றத் தலைவர் இரா. ஸ்ரீதரன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். ஆணையர் ஆர்.சேகர், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் அலுவலக பிரதிநிதி செல்வராஜ் ஆகியோர் கணகாட்சியை பார்வையிட்டு உணவுப் பொருள்களை தயாரித்தவர்களை பாராட்டினர். மேலாளர் கணேசன், நேர்முக உதவியாளர் ஜெ.பழனி, சமுதாய அமைப்பாளர்கள் சி.செல்வராணி, பி.இந்திரா, கல்லூரி இயக்குநர்கள் திருநாவுக்கரசு, குணசேகரன் பங்கேற்றனர்.

 


Page 10 of 18