Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னை மாநகராட்சியில் தீர்மானம்: தொழில் வரி உயர்ந்தது; ரூ. 585 கட்டியவர்கள் இனி ரூ. 760 செலுத்த வேண்டும்

Print PDF

மாலை மலர் 23.07.2009

சென்னை மாநகராட்சியில் தீர்மானம்: தொழில் வரி உயர்ந்தது; ரூ. 585 கட்டியவர்கள் இனி ரூ. 760 செலுத்த வேண்டும்

சென்னை ,ஜூலை.23-

சென்னை நகரில் தொழில் வரியை உயர்த்துவது தொடர்பான தீர்மானம் மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றபட்டது.

6 மாதங்களுக்கு ஒருமுறை வருமானத்தின் அடிப்படையில் தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. 6 மாதங்களுக்கு ரூ. 21 ஆயிரம் வருமானம் வருபவர்களுக்கு வரி கிடையாது.

ரூ.21 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வருமானம் உள்ளவர்களிடம் இதுவரை ரூ.75 வரி வசூலிக்கப்பட்டது. இனி ரூ.100 வரி செலுத்த வேண்டும்.

ரூ.30 ஆயிரம் முதல் ரூ. 45 ஆயிரம் வருமானம் பெறுபவர்கள் ரூ.188 வரி செலுத்திவந்தனர். இனி ரூ. 235 வரி செலுத்த வேண்டும்.

ரூ.45 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வருமானம் உள்ளவர்கள் ரூ. 390 வரி செலுத்தினார்கள். இனி ரூ.510 வரி செலுத்த வேண்டும்.

ரூ. 60 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை வருமானம் உள்ளவர்கள் இதுவரை ரூ.585 வரி செலுத்தினார்கள். இனி ரூ. 760 செலுத்த வேண்டும்.

75 ஆயிரத்துக்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு இதுவரை ரூ.810 வரி விதிக்கப்பட்டது. இப்போது ரூ.1095 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

வரிஉயர்வு மீதான விவாதத்தில் பேசிய எதிர்கட்சி தலைவர் சைதை ரவி சாதாரண ஊழியர்களுக்கும் அதிகமான சம்பளம் பெறும் அதிகாரிகளுக்கும் இடையே வரிவிதிப்பில் வித்தியாசம் குறைவு. எனவே வரிவிதிப்பில் உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த மேயர் மா.சுப்பிரமணியன் உறுப்பினர்களின் கோரிக்கை அரசுக்கு அனுப்பப்படும் என்றார்.