Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

டில்லியில் குடியரசு தின விழா : ராணுவ பலத்தையும், கலாச்சார பாரம்பரியத்தையும் விளக்கிய அணிவகுப்பு பிரமாண்டமாக நடந்தது

Print PDF

தினமலர் 26.01.2010

டில்லியில் குடியரசு தின விழா : ராணுவ பலத்தையும், கலாச்சார பாரம்பரியத்தையும் விளக்கிய அணிவகுப்பு பிரமாண்டமாக நடந்தது

Front page news and headlines today

புதுடில்லி : டில்லியில் 61வது குடியரசு தின விழா கோலாகலாம் கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழா கொண்டாட்டங்களை காண பொதுமக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பெருந்திரளாக வந்திருந்தனர். வழக்கமாக கொடியேற்றம் நடந்த பிறகு ஹெலிகாப்டர் மூலம் பார்வையாளர்கள் மீது பூ தூவப்படும். ஆனால் கடும் பனிமூட்டம் காரணமாக இந்த ஆண்டு மலர் தூவும் முறை கடைபிடிக்கப்படவில்லை.

அமர்ஜவானில் அஞ்சலி : டில்லி இந்திய கேட் பகுதியில் இருக்கும் அமர் ஜவான் நினைவிடத்தில் பிரதமர் மன்மோகன்சிங், முப்படை தளதிகள் உள்ளிட்டோர் நாட்டைக் காக்கும் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. பிரதமர் அமர்ஜவான் இரங்கல் குறிப்பில் கையெழுத்திட்டார்.

சிறப்பு விருந்தினர் : இன்றைய குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராக தென் கொரிய அதிபர் லி முய்ங் பாக் இந்தியா வந்திருந்தார். விழாவில் பங்கேற்க இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுடன் வந்த தென் கொரிய அதிபர் லீ முய்ங் பக்கை பிரதமர் மன்மோகன் சிங் கைகுலுக்கி வரவேற்றார்.

கொடியேற்றம் : குடியரசு தின விழா சிறப்பு விருந்தினரும், ஜனாதிபதியும் மேடைக்கு வந்ததும் தேசிய கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. 21 குண்டுகள் முழுங்க மிரயாதை செலுத்தப்பட்டது. பின்னர் வீரதீர செயல்க‌ள் புரிந்த வீரர்களுக்கு அசோக சக்ரா விருதுகளை ஜனாதிபதி வழங்கினார்.

ராணுவ தளவாடங்கள் அணிவகுப்பு : வீரர்களுக்கு விருது வழங்கப்பட்ட பிறகு ராணுவ தளவாடங்களின் அணிவகுப்பு நடந்தது. ராணுவ அணிவகுப்பை லெப்டினன்ட் ஜெனரல் கன்வால் ஜீத் சிங் ஓபராய் தொடங்கி வைத்தார்.விஜய் சவுக் பகுதியில் தொடங்கி 8 கி.மீ., தூரத்துக்கு முப்படையினரும் பிரமாண்டமாக அணிவகுத்து சென்றனர். அணிவகுப்பு மறியாதையை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார். இந்திய ராணுவத்தின் படை பராக்கிரமாங்கள் அணிவகுப்புக்குப் பிறகு பல்வேறு படை பிரிவு வீரர்கள் அணிவகுத்து வந்தனர். அவர்கள் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்.

 

.என்.ஷிவாலிக் கம்பீர அணிவகுப்பு : இந்திய கடற்படை அணிவகுப்பில், .என்.ஷிவாலிக் போர் கப்பல் கம்பீரமாக அணிவகுத்து டப்தது. .என்.எஸ்., ஷிவாலிக் விரைவில் இந்திய கடற்படையில் இணைக்கப்படுகிறது.

 

கலாச்சார பாரம்பரிய நடனங்கள் : இந்தியாவின் ‌கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்திய மாநிலங்களின் சிறப்பு அம்சங்களை எடுத்துரைக்கும் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வந்தன. முதலில் வடகிழக்கு மாநிலங்களில் அலங்கார ஊர்திகள் வந்தன. அவற்றை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநில அலங்கார ஊர்தி வந்த போது, விழாவை காண வந்திருந்த அம்மாநில முன்னாள் மதல்வர் பரூக் அப்துல்லா அலங்கார ஊர்தியை நோக்கி கையசைத்து மகிழ்ச்சியை தெரிவித்தார். 21 மாநிலங்களின் கலாரச்சாரத்தை பிரதிபலிக்கும் அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன. இது தவிர பள்ளி குழுந்தைகளின் கண்கவர் நடன நிகழ்ச்சிகளும் நடந்தது.