Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கட்டிட பணி நிறைவு சான்றிதழ் விரைவாக கிடைக்க புதிய ஏற்பாடு: கட்டிட வல்லுநர்கள் மூலம் வழங்க சிஎம்டிஏ திட்டம்

Print PDF

தி இந்து    14.05.2017

கட்டிட பணி நிறைவு சான்றிதழ் விரைவாக கிடைக்க புதிய ஏற்பாடு: கட்டிட வல்லுநர்கள் மூலம் வழங்க சிஎம்டிஏ திட்டம்

கோப்பு படம்
கோப்பு படம்

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் கட்டுப்பாட்டில் வரும் பகுதிகளில் 3 அடுக்கு மாடிகளுக்கு மேல் கொண்ட கட்டிடத்தை கட்ட வேண்டுமென்றால் அதற்கு சிஎம்டிஏ அனுமதி கட்டாயம் தேவை. அதேபோல 800 சதுர அடிக்கு மேல் பரப்பளவில் கட்டப் படும் கட்டிடத்துக்கும் சிஎம்டிஏ அனுமதி அவசியம். இதனைவிட சிறிய கட்டிடங்களுக்கான அனு மதியை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் பெற்றுக்கொள்ள லாம். சிஎம்டிஏ அனுமதி பெற்று கட்டப்பட்ட கட்டிடமானாலும் பணி நிறைவு சான்று பெற வேண்டும்.

இந்த நிலையில் பலர் சிஎம்டிஏ அனுமதியை பெறாமலோ அல்லது சிஎம்டிஏ அனுமதி பெற்று, சில விதிமீறல்களுடனோ கட்டிடங்களை கட்டுகின்றனர்.

தற்போது கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் பணிநிறைவு சான்றிதழ் கேட்டு உரிமையாளர் சிஎம்டிஏவிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு செய்து, விதிமுறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்திருந் தால் பணிநிறைவு சான்று வழங் குவர். குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு, மின்சார இணைப்பு ஆகியவற்றை பெற இந்த பணிநிறைவு சான்று அவசியம்.

சென்னையைச் சுற்றி ஆயிரம் சதுர கிலோ மீட்டர்களுக்கு மேற் பட்ட பகுதிகள் சிஎம்டிஏ கட்டுப் பாட்டில் வருகின்றன. இதன் காரண மாக தற்போதுள்ள நடைமுறை யால் பல கட்டிடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ்கள் வழங்கும் பணி தாமதமாகிறது. இந்த நிலையில் மூன்றாம் நபர் மூலம் பணிநிறைவு சான்றிதழ் வழங்கும் நடைமுறையை செயல்படுத்துவது தொடர்பாக சிஎம்டிஏ பரிசீலித்து வருகிறது.

இது குறித்து சிஎம்டிஏ அதிகாரிகள் கூறியது:

தற்போதைய நடைமுறையில் பணிநிறைவு சான்றிதழ் வழங்க காலதாமதம் ஏற்படுகிறது. இந்த நிலையில் மூன்றாம் நபர் மூலம் பணிநிறைவு சான்றிதழ் வழங்கும் முறையை நடைமுறைப்படுத் தலாம் என்ற யோசனையை மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த யோசனையை பரிசீலித்து வருகிறோம். இது தொடர்பாக அரசிடம் அனுமதி கோரியுள்ளோம்.

இந்த புதிய முறைப்படி, கட்டிடங் களை கட்டித்தரும் கட்டிடக்கலை வல்லுநரே பணிநிறைவு சான்று வழங்கலாம். அவ்வாறு வழங்கும் போது விதிமீறல்கள் குறித்து அவர் கவனத்தில் கொள்ள வேண்டும். குறைகள் இருந்தால் சான்றிதழ் வழங்கக்கூடாது.

பணிநிறைவு சான்றிதழ்களை கட்டிடக்கலை வல்லுநர்கள் வழங்கினாலும், அவ்வப்போது சிஎம்டிஏ அதிகாரிகள் (ரேண்டம் முறையில்) ஆய்வு செய்வார்கள். ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால், கட்டிட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், பணிநிறைவு சான்று வழங்கிய கட்டிடக்கலை வல்லுநர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ் வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.