Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அடுக்குமாடி குடியிருப்புகளில் கொசு தடுப்பு ஆலோசனை

Print PDF

தினமணி     22.01.2015

அடுக்குமாடி குடியிருப்புகளில் கொசு தடுப்பு ஆலோசனை

மதுரை மாநகராட்சிப் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் டெங்கு கொசு உற்பத்தியாகாமல் தடுப்பது குறித்து புதன்கிழமை தெற்கு மண்டல அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் வசுதாரா குடியிருப்போர் நலச்சங்கம், அக்ரிணி குடியிருப்போர் நலச்சங்கம், சத்தியசாய்நகர் ராம்ஸ் குடியிருப்போர் நலச்சங்கம், ஏஆர்வி நகர் குடியிருப்போர் நலச்சங்கம், துரைச்சாமி நகர் குடியிருப்போர் நலச்சங்கம், அபர்ணா குடியிருப்போர் நலச்சங்கம், முனியாண்டிபுரம் குடியிருப்போர் நலச்சங்கம் உள்ளிட்ட பல்வேறு அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு தலைமை வகித்து உதவி ஆணையர் அ.தேவதாஸ் பேசியது: கொசுக்கள் உற்பத்தியைத் தடுக்க ஆணையர் சி.கதிரவன் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இம்மண்டலத்தில் சுழற்சி முறையில் கொசு ஒழிப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சுகாதாரக்கேட்டை விளைவிப்போருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அடுக்குமாடி குடியிருப்புகளில் மாடிப்பகுதியிலோ, சாலைகளிலோ தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீடுகளிலுள்ள குளிர்சாதன பெட்டிகளின் பின்பகுதியில் தண்ணீர் சிந்தும் பகுதிகளை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். பூந்தொட்டிகளில் அதிகளவில் தண்ணீரை ஊற்றி கொசு உற்பத்தி வழிவகுக்க கூடாது என்றார்.

கூட்டத்தில், மண்டல உதவி நிர்வாக பொறியாளர் காமராஜ், வட்டார சுகாதார அலுவலர் வீரன், சுகாதார ஆய்வாளர்கள் செல்வக்குமார், தங்கப்பாண்டியன், ஆறுமுகம், சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.