Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மதுரை மாநகராட்சி வடக்கு மண்டல புதிய அலுவலகம் திறப்பு

Print PDF

தினமணி       24.09.2014

மதுரை மாநகராட்சி வடக்கு மண்டல புதிய அலுவலகம் திறப்பு

மதுரை மாநகராட்சி வடக்கு மண்டல புதிய அலுவலகத்தை, காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

 மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் ரூ.1.75 கோடி மதிப்பில் புதிய மண்டல அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து  தமிழக முதல்வர் ஜெயலலிதா, காணொலிக் காட்சியில் திறந்து வைத்தார். மேலும், பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகிய திட்டங்களின்கீழ் 81 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதியாக தலா ரூ.25 ஆயிரம், ஏழை இளைஞர்கள் 4,500 பேருக்கு திறன் பயிற்சி அளிப்பதற்காக ரூ.3.21 கோடி வழங்கப்பட்டது.

 இதையொட்டி புதிய மண்டல அலுவலக கட்டடத்தை மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா பார்வையிட்டு பொதுமக்களுக்கும், அலுவலர்களுக்கும் இனிப்புகள் வழங்கினார்.

 இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் சி.கதிரவன், சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே.போஸ், துணை மேயர் கு.திரவியம், துணை ஆணையர் மீனாட்சி, மண்டலத் தலைவர்கள் ஜெயவேல், சாலைமுத்து மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.