Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சேலம் அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி மண்டலங்களில் ரூ.7 கோடி மதிப்பில் தார்சாலைகள், சிறுபாலம் அமைக்கும் பணி தொடங்கியது

Print PDF

தினத்தந்தி                13.02.2014

சேலம் அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி மண்டலங்களில் ரூ.7 கோடி மதிப்பில் தார்சாலைகள், சிறுபாலம் அமைக்கும் பணி தொடங்கியது

சேலம் அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி மற்றும் கொண்டலாம்பட்டி மண்டலங்களில் ரூ.7 கோடி மதிப்பில் தார்சாலைகள், சிறுபாலம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.

பிளாஸ்டிக் தார்சாலைகள்

ஒருங்கிணைந்த நகர்ப்புற அபிவிருத்தி திட்டம் 2013–14 கீழ் சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி மற்றும் கொண்டலாம்பட்டி மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளுக்கு ரூ.7 கோடியே 18 லட்சம் மதிப்பில் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி தார்சாலைகள், வடிகால், சிறுபாலம் மற்றும் சாலை அமைக்கும் பணிகள் நேற்று தொடங்கியது.

சேலம் அம்மாப்பேட்டை மண்டல பகுதிகளில் வார்டு 35, 39–ல் உள்ள ஜோதி தியேட்டர் கிழக்கு தெரு, மேற்கு தெரு, சவுண்டம்மன் கோவில் மற்றும் பெரிய கிணறு தெருக்கள், வார்டு 34, 36, 38, 41 மற்றும் 42–ல் உள்ள முராரி வரதய்யர் தெரு, பரமகுடி நன்னுசாமி தெரு, கிருஷ்ணன்புதூர் குறுக்கு தெரு, தியாகி நடேசன் தெரு, விவேகானந்தர் தெரு, குறிஞ்சி நகர் ஆகிய பகுதிகளுக்கு 3.522 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.2 கோடியே 6 லட்சம் மதிப்பில் பிளாஸ்டி கழிவுகளை பயன்படுத்தி தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை நேற்று மேயர் சவுண்டப்பன் தொடங்கி வைத்தார்.

சிறுபாலம், வடிகால்

இதேபோல், அம்மாப்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட ரெயில்வே லைன் வடக்கு குறுக்கு தெரு நம்பர் 1,2,3, தில்லை நகர் குறுக்கு தெருக்களில் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி தார்சாலை புதுப்பிக்கும் பணிகளையும் மற்றும் சக்தி நகர், சங்கிலி ஆசாரி காடு, சின்ன அம்மாப்பேட்டை, சவுண்டம்மன் கோவில் வள்ளுவர் காலனி மெயின் ரோடு, நாமமலை குறுக்கு தெரு, பச்சப்பட்டி மெயின் ரோடு, ஆறுமுக நகர் குறுக்கு தெரு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு ரூ.3 கோடியே 23 லட்சம் மதிப்பில் 6.785 கிலோ மீட்டர் தூரத்திற்கு வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணிகளையும் மேயர் சவுண்டப்பன் தொடங்கி வைத்தார்.

இதேபோல் அஸ்தம்பட்டி 17–வது வார்டில் உள்ள ஆடிட்டர் காலனியில் ரூ.19 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பில் சாலை மற்றும் வடிகால் வசதிக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல், கொண்டலாம்பட்டி 54–வது வார்டில் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பில் சிறியபாலம், தார்சாலை அமைக்க பணிகள் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் வெங்கடாசலம் எம்.எல்.ஏ., ஆணையாளர் அசோகன், செயற்பொறியாளர்கள் காமராஜ், அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.