Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தெருநாய்களை துரத்தி பிடிப்பது எப்படி? 15 பேருக்கு மாநகராட்சி பயிற்சி

Print PDF

தினமலர்              11.02.2014

தெருநாய்களை துரத்தி பிடிப்பது எப்படி? 15 பேருக்கு மாநகராட்சி பயிற்சி

கோவை : கோவை மாநகராட்சிக்கு, தெருநாய்களை பிடிக்க இரண்டு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், துப்புரவு தொழிலாளர்கள் ௧௫ பேருக்கு, நாய் பிடிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளில், 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் இருப்பதாக, மத்திய பிராணிகள் நல வாரிய கணக்கெடுப் பில் தெரியவந்துள்ளது. தெருநாய்கள் பெருக்கத்தால், விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தெருநாய்களுக்கு விஷ ஊசி போட்டு கொல்வது, தடை செய்யப்பட்டுள்ளதால், அவற்றை பிடித்து, 'ஏபிசி' (அனிமல் பர்த் கன்ட்ரோல்) திட்டத்தில், கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, நாய் பெருக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது. சீரநாயக்கன்பாளையத்தில், தெருநாய் கருத்தடை மையம் செயல்படுகிறது. கோவை உக்கடத்தில், தெருநாய் அறுவை சிகிச்சைக்காக இரண்டாவது மையம் துவங்கப்படுகிறது. இந்நிலையில், கோவை மாநகராட்சிக்கு, 14.99 லட்சம் ரூபாய் செலவில் தெருநாய் பிடிக்கும் இரண்டு வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. ஆனால், தெருநாய்களை பிடிக்க பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் இல்லாததால், இரண்டு புதிய வாகனங்களும், வ.உ.சி., பூங்காவில் நிறுத்த வைக்கப்பட்டிருந்தது.

மாநகராட்சி கமிஷனர் உத்தரவில், துப்புரவு தொழிலாளர்கள் ௧௫ பேருக்கு, சீரநாயக்கன்பாளையத்திலுள்ள நாய் கருத்தடை மையத்தில், நாய் பிடிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி மொத்தம் ௧௦ நாட்களுக்கு வழங்கப்படுகிறது. பயிற்சி முடிந்ததும், தெருநாய் தொல்லை குறித்து புகார் வரும் பகுதிக்கு, புதிய வாகனங்களுடன் துப்புரவு தொழிலாளர்கள் சென்று, நாய்களை பிடிக்கவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.