Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருச்சி பஞ்சப்பூரில் பசுமை பூங்கா திட்டத்தில் சேர்ந்து பயன்பெற பொதுமக்களுக்கு அழைப்பு மாநகராட்சி ஆணையர் தண்டபாணி தகவல்

Print PDF

தினத்தந்தி             10.02.2014

திருச்சி பஞ்சப்பூரில் பசுமை பூங்கா திட்டத்தில் சேர்ந்து பயன்பெற பொதுமக்களுக்கு அழைப்பு மாநகராட்சி ஆணையர் தண்டபாணி தகவல்

திருச்சி பஞ்சப்பூரில் பசுமை பூங்கா திட்டத்தில் சேர்ந்து பயன்பெற பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையர் தண்டபாணி அழைப்பு விடுத்து உள்ளார்.

திருச்சி மாநகராட்சி ஆணையர் தண்டபாணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

பசுமை பூங்கா

திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டம் பஞ்சப்பூரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பசுமை பூங்கா திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் பரப்பளவில் புதிதாக உருவாக்க இருக்கும் இந்த பசுமை பூங்காவில் பொதுமக்கள் பயன் படுத்தும் வகையில், மூலிகை செடிகள், தியானமண்டபம், ஒரு சிறியஅளவில் விலங்கியல் பூங்கா, ஏழு உலக அதிசயங்களின் மாதிரிகள், சிறுவர்கள் பயன்படுத்துவதற்கு ரெயில் வண்டி, பொழுது போக்குடன் கூடிய பூங்கா மேலும் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.36 லட்சம் மதிப்பில் நடைபாதைகள், அனுகுசாலைகள், மரக்கன்றுகள், சைக்கிள்தளம், 5 கண்டங்களில் உள்ள உலக அதிசயங்களின் மாதிரிகள், பொதுமக்களுக்கு உணவகம் அமைக்கப்பட உள்ளது.

பசுமை திட்டத்திற்கு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பசுமை ஆர்வலர்களிடம் ரூ.3 ஆயிரம் வைப்புதொகையாக பெற்றுகொண்டு அவர்களின் பெயரில் ஒரு மரம் வளர்த்து மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்படும்.

5 ஏக்கர் பரப்பளவில் புதிதாக உருவாக்கப்படும் பசுமை பூங்காவில் 1,500 மரகன்றுகள் நடப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கு குமார் எம்.பி.யின் பாராளுமன்ற தொகுதி நிதியிலிருந்து ரூ.13 லட்சத்து 60 ஆயிரம் 2 எண்ணிக்கை கொண்ட உயர் அழுத்த மின் விளக்குடன் கூடிய மின்கம்பம் அமைக்கப்படுகிறது.

திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. பரஞ்சோதி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் லட்சம் மதிப்பில் பசுமை பூங்காவில் அரங்கம் அமைக்கப்படுகிறது. மேலும், பசுமை திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் மாநகராட்சி அலுவலர்களை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.