Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வரலாறு காணாத பஞ்சம் தலை தூக்கியது நாளை முதல் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் ஏப்ரலில் அதுவும் இல்லை

Print PDF

தினகரன்            05.02.2014

வரலாறு காணாத பஞ்சம் தலை தூக்கியது நாளை முதல் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் ஏப்ரலில் அதுவும் இல்லை

மதுரை, : வைகை அணை நீர் 35 அடியாக சரிந்ததால் மதுரையில் நாளை முதல் 4 நாட்களுக்கு ஒரு முறை மார்ச் இறுதி வரை சப்ளை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரியாறு அணை நீரில் ஆண்டுதோறும் 1,500 மில்லியன் கன அடி நீர் மதுரை குடிநீருக்காக ஒதுக்கப்படுகிறது. இது வைகை அணையில் இருப்பு வைக்கப்பட்டு ஜூன் வரை குடிநீருக் காக சப்ளை செய்யப்படுவது வழக்கம். பயிர்களை விட மனிதர்கள் முக்கியம் என்ற அடிப்படையில் குடிநீருக்கு முன்னுரிமை அளித்து விதிமுறை உள்ளது. இந்த நடைமுறையில் ஏற்பட்ட குளறுபடி காரண மாக வரலாறு காணாத அளவுக்கு மதுரையில் குடிநீர் பஞ்சம் தலைதூக்கி உள்ளது. நேற்றைய நிலவரப்படி பெரியாறு அணை நீர் மட்டம் 111.10 அடி. வைகை அணை 35.17 அடி. கொள்ளளவு 616 மில்லியன் கன அடி. இதில் 102 மி.க.அடி சகதியானது. 514 மி.க.அடி மட்டுமே வெளி யேற்ற முடியும். கடந்த ஆண்டு இதே நாளில் வைகை 49.21 அடி. இதன் கொள்ளளவாக 1,821 மி.க.அடி இருந்தது.

இந்த சூழ்நிலையில் மதுரையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் சப்ளையை 4 நாட்களுக்கு ஒரு முறை என மாற்றம் செய்து மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து மேயர் ராஜன்செல்லப்பா, ஆணையர் கிரண்குராலா நிருபர்களிடம் கூறியதாவது:

வைகையில் 514 மி.க.அடி மட்டுமே இருப்பதால் குடிநீருக்காக திறப்பது 60 கன அடியில் இருந்து 40 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பழைய 72 வார்டு பகுதிகளுக்கும் அன்றாடம் சப்ளையாகி வந்த 115 மில்லியன் லிட்டர் 75 மில்லியன் லிட்டராக குறைக்கப்படுகிறது. பிப்ரவரி 6ந் தேதி (நாளை) முதல் 4 நாட்களுக்கு ஒரு முறை குழாய்களில் சப்ளை செய்யப்படும். குடிநீரை மோட்டார் வைத்து உறிஞ்சாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே மேடான பகுதிகளுக்கு சீராக சப்ளையாகும்.

லாரிகள் மூலமாகவும் சப்ளை செய்யப்படும். குழாய்களில் 4 நாட்களுக்கு ஒரு முறை அதன் அளவை யும் குறைத்து மார்ச் இறுதி வரை சப்ளை செய்ய முடியும்.

திருப்பரங்குன்றம், மங்களகுடி, மணலூர், மேலக்கால், மேநேந்தல், ஐ.டி.பூங்கா ஆகிய பகுதிகளில் 34 தனியார் கிணறுகளில் குடிநீர் எடுத்து மதுரைக்கு கொண்டு வரவும், போர்வெல்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனை யூர், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதிகளில் தற்போது குடிநீருக்கு பிரச்சினை இல்லை என்று கூறினர். நகர பொறியாளர் மதுரம் உடன் இருந்தார்.

வைகை ஆற்று படுகையில் செயற்கை மழை பெய்விக்க சாத்தியகூறு இருப்பதாக வேளாண் பல்கலைகழகம் ஆய்வு நடத்தி தெரிவித்துள்ளதே. அதன்படி குடிநீருக்காக செயற்கை மழை பெய்விக்க முயற்சிக்கப்படுமா? என்று கேட்டதற்கு மேயர் பதிலளிக்கும்போது, “ஏப்ரலுக்குள் இயற்கை கை கொடுத்து மழை பெய்யும் என்று நம்புவோம், அதன் பிறகு செயற்கை மழை குறித்து யோசிக்கலாம்“ என்றார்.